
அப்பிய இருளின் அலையில்
கரை மோதுகிறது என் கட்டுமரம்.
மங்கலாய் அசைகிறது
பெண்களின் பின்புறம்
கண்ணாடி தொலைத்தவனின்
காட்சி போல.
மருள வைக்கிறது
நான்கு தலைக் குள்ளர்கள்
தலை கீழாய் நடத்தலும்
பெருத்த பாம்பொன்று
மடி புரள்தலும்.
உலுக்குகிறது
யாரென்றே தெரியாது
செய்த கொலையும்
கொலையுற்றவனின்
இறுதிக் கேள்வியும்.
பீதியில் உறைகிறேன்
குளம்பதிர இழுத்துச் செல்லும்
குதிரையை அடக்கும்
கட்டளை மொழி தொலைத்து.
மகா சமுத்திரத்தின்
நீரையும் வற்ற வைத்துப்
பின் ஏதுமறியாது
கலைந்து போகக்கூடும்
இதோ இப்படித்தான்
மற்றுமொரு கனவு.
பெண்களின் பின்புறம்
கண்ணாடி தொலைத்தவனின்
காட்சி போல.
மருள வைக்கிறது
நான்கு தலைக் குள்ளர்கள்
தலை கீழாய் நடத்தலும்
பெருத்த பாம்பொன்று
மடி புரள்தலும்.
உலுக்குகிறது
யாரென்றே தெரியாது
செய்த கொலையும்
கொலையுற்றவனின்
இறுதிக் கேள்வியும்.
பீதியில் உறைகிறேன்
குளம்பதிர இழுத்துச் செல்லும்
குதிரையை அடக்கும்
கட்டளை மொழி தொலைத்து.
மகா சமுத்திரத்தின்
நீரையும் வற்ற வைத்துப்
பின் ஏதுமறியாது
கலைந்து போகக்கூடும்
இதோ இப்படித்தான்
மற்றுமொரு கனவு.
8 கருத்துகள்:
கனவின் திரைச்சீலையில் வரைந்த திகிலூட்டும் ஓவியம். கனவு எதன் நிழல் அல்லது வெளிச்சம்? ஒரு வகையில் விழிமூடிக் காணும் அற்புதம் சமயங்களில்.
//குளம்பதிர இழுத்துச் செல்லும்
குதிரையை அடக்கும்
ரகஸ்ய மொழி தொலைத்து//
//மஹா சமுத்திரத்தின் நீரையும் வற்ற வைத்து//
வெகுவாய் ஈர்த்தது கவிதை மொழியின் அடர் அழகும்,பொருள் அழகின் பருண்மையும்.
-உஷா.
//நீரையும் வற்ற வைத்துப்
பின் ஏதுமறியாது
கலைந்து போகக்கூடும்
மற்றுமொரு கனவு//
எனக்கு
மற்றுமொரு உணர்வு அல்லது புரிதல் ஜி
(வனவாசத்தில் கிடைத்த அனுபவம்தானே இது )
ஹைய்யோ.... மனம் கவர் வரிகளை copy செய்து, கமெண்ட் -க்கு வந்தால்... உஷாவும் அதே வரிகளைச் சிலாகித்து...!
ஜி... பெயரில்லா... என்ற வகையை விட பெயர்/URL என்ற வகையில் கருத்துரைகளை வெளியிடலாமே...
கவிதை அதன் போக்கில் அதிர வைத்துப் போகிறது.. விழித்ததும் மறந்து போகிற கனவுகளும், ஆனாலும் இன்னமும் அதிர்கிற மனசுமாய்..
கொலை உற்றவனின் இறுதிக் கேள்வி .
யப்பா அதிலிருந்து மீள இயலுமா??
என்னவாய் இருந்திருக்கக்கூடும் என்ற யூகம் கூட தூக்கம் கலைப்பது தான்
சுந்தர்ஜி இத்தகைய கனவுகளே வராதிருக்கும் கனவு காண்கிறேன்
கனவு என்பதே அடித்து நொருக்கி அடுத்த கனவுக்குள் நுழைவதுதானே !
கனவின் வேர்களைத் தேடிக் கொண்டே போனால் மற்றொரு கனவில்
விழிக்கக் கூடும்.
கருத்துரையிடுக