12.9.10

கவிஞன்


ஓஷோவின் தத்துவங்களுக்கும் தேடல்களுக்கும் அவருடைய வாசிப்பும் உள்ளுணர்வுச் சிந்தனையும் பெரும் பங்கு வகிக்கிறது. வாசித்த லட்சக்கணக்கான புத்தகங்களில் அவருக்கு மிகவும் பிடித்தவை என்று நூற்றிஅறுபதை ஒட்டித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அவற்றில் மிகப் பழமையான தத்துவ நூல்களும்,மிகப் புதுமையான ஹிந்தி எழுத்தாளர் வாத்ஸ்யாயனா வரையும்,டாஸ்டயேவ்ஸ்கி தொடங்கி கலீல் கிப்ரான் வரையும் குர்ட்ஜியெஃப் தொடங்கி ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தி வரையும் என எல்லாத் துறைகளிலும் அவரின் தேர்வு இருந்தாலும் அவரை கவிதைகளும் தத்துவங்களும் தான் அதிகமாக ஈர்த்திருக்கின்றன.

நல்ல வாசிப்பும் ஆழ்ந்த அகப்பார்வையும் உள்ளவர்கள் கவிதையையும் தத்துவத்தின் சாற்றையும் தனித்தனியே பார்ப்பதில்லை.தண்டவாளம் போல ஒன்று மற்றொன்று சிறக்க உதவுகிறது அல்லது ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. கவிதையின் பரவசம் எழுதவும் தத்துவத்தின் செழுமை எழுதாமலிருக்கவும் உதவுகிறது.

நல்ல கவிஞர்கள் என்று காலத்தால் அடையாளம் காட்டப்படுபவர்கள்  நிச்சயம் சில தன்மைகளுக்குள் அடைபடுகிறார்கள்.

1.தத்துவ விசாரம் 2. ஆழ்ந்த எளிமை 3. அகந்தையற்ற மனம் 4. எழுத்து மற்றும் வாழ்க்கை இரண்டிலும் ஒரே நிலை. 5.நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடிக்கும் போக்கு.

இவை அனைத்தும் பெற்றவர்கள் நல்ல மனிதர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் படைப்புக்களும் அமரத் தன்மையுறுகின்றன. ஒரு புத்தகம்-ஒரு சினிமா-சில ஓவியங்கள் என்று அவர்களின் படைப்புகள் எண்ணிக்கையில் சிறிதெனினும் அமிர்தத்தின் சுவையுடன் இருக்கிறது.

எல்லோரும் கவிதைகள் எழுதுகிறார்கள். எல்லோரும் பாராட்டப்படுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே காலத்தால் கவனிக்கப்படுகிறார்கள். இன்று பாராட்டப் படுபவர்கள் தயவு தாட்சண்யமற்று கைகள் வழியே கவனிப்பற்று ஒழுகும் நீரைப் போல காணாது மறைகிறார்கள்.

6 கருத்துகள்:

Madumitha சொன்னது…

தத்துவத்தின் செழுமை
எழுதாமலிருக்கவும் உதவுகிறது.
மிகவும் அற்புதமான வரி.
ஓஷோவை விழுந்து விழுந்து படித்த இரவுகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

நிலா மகள் சொன்னது…

அழகிய அறிவுறுத்தல்!

பத்மா சொன்னது…

உண்மை ..எழுதுபவனே எழுத்தாய் ஆகும் நேரம் உன்னதம்..
வெற்றுக் கைதட்டல் ஓசைக்கு ஆசைப்படுவதோ ,இல்லை வெற்றுக் கையோசையே எழுப்பி கொண்டிருப்பதுவோ ஒரு கவிஞன் மரணிக்கும் தருணங்கள் ..

கொஞ்சம் பயமாய் இருக்கிறது சுந்தர்ஜி

D.R.Ashok சொன்னது…

மிகவும் சரியா சொல்லியிருக்கீங்க...

Osho தொடாத subjectum இருக்கா... இதுவரையில் என்னை அதிகம் வியக்கவைத்தவர் அவர்.

ரிஷபன் சொன்னது…

தயவு தாட்சண்யமற்று கைகள் வழியே கவனிப்பற்று ஒழுகும் நீரைப் போல காணாது மறைகிறார்கள்.

வார்த்தைகளில் சுரீர்..
ஆனாலும் நாம் நம் பங்கிற்கு முயற்சிக்கத்தான் வேண்டியிருக்கிறது..

சுந்தர்ஜி சொன்னது…

யாரால் மறக்கமுடியும் அந்த நாட்களை மதுமிதா.பொக்கிஷத்தின் சாவி நாம் கடந்த காலம்.என்றும் நன்றியுடன் என் தோழனே.

நன்றி நிலாமகள்.இது நினைவுறுத்தல் மட்டுமே.

அழகாய்ச் சொன்னீங்க பத்மா.வெற்றுக்கையோசை...அருமை.தவிர நீங்க இருக்கீங்கன்னு நாங்கள்ளாம் தைரியமா இருக்கோம்.நீங்க என்னடான்னா?

உங்களுடைய அபிப்ராயம்தான் என்னுடையதும் அஷோக்.ஓஷோவைச் சரியாய்ப் புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள் உங்களைப் போல.

இது உங்களுடைய பங்கைப் பற்றியது இல்லை ரிஷபன். பத்மா சொன்னது போல வெற்றுக்கையோசைக்கு மட்டும்தான் பொருத்தம்.உங்களை எங்களைப் போலக் காலமும் அறியும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...