9.9.10

நான் கடவுள்


சிலர் சிரிக்கிறார்கள்
பலர் ஒதுக்குகிறார்கள்
சலனங்கள் ஏதுமின்றிக்
கடந்து செல்கிறேன்
காற்றைப் போல.

சிலர் படிக்கிறார்கள்
பலர் நடிக்கிறார்கள்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
மழையைப் போல.

பலர் உடைக்கிறார்கள்
சிலர் இயலாது
விலகுகிறார்கள்
பொறுமையுடன்
கவனித்தபடி இருக்கிறேன்
மலைகளைப்போல.

சிலர் வளர்க்கிறார்கள்
பலர் அழிக்கிறார்கள்
வெட்டியும் துளிர்க்கிறேன்
மரங்களைப் போல.

பலர் இல்லாது
மறைகிறார்கள்.
சிலர் இருக்கிறார்கள்.
இல்லாது இருக்கிறேன்
கடவுளைப் போல.

13 கருத்துகள்:

கலைவாணி சொன்னது…

இருப்பை உணர்ந்தேன்.சிறப்பான இப்பதிவை மிகவும் ரசித்தேங்க சார்.

ரம்யா சொன்னது…

அற்புதம் சார்.

யாழி சொன்னது…

இயற்கையாய் இருக்கும், நினைக்கும், சுவைக்கும், சுவாசிக்கும் நீங்களும் கடவுள்தான். இருந்தே இருக்கிறீர்கள் ஜி. அசத்தல்.

Vel Kannan சொன்னது…

கடவுள் அதை சார்ந்த தத்துவங்களும் தெளிவின்மையாகவே இருக்கிறது ஜி
(மன்னிக்கவும்)

ப.தியாகு சொன்னது…

கடவுளே!என்னை ஆசிர்வதியுங்கள்-சிந்திக்க உங்களைப்போல.ஹா!அருமை அருமை சுந்தர்ஜி சார்.

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

மிகச் சிலர் விமர்சிக்கிறார்கள். பலர் காணாதது போலப் போகிறார்கள்.அருமை.

அண்ணாமலை.கே சொன்னது…

வாவ் என முணுமுணுக்கின்றது என்னையறியாமலே என் உதடுகள்.மிக மிக ரசித்துப் படித்தேன் ”நான் கடவுள்”.பாராட்டுக்கள் அண்ணா.

ஹேமா சொன்னது…

பலனை எதிர்பார்க்காமல் எம் எண்ணங்களோடு வாழப்பழகிக்கொள்வதே நல்லது.கடவுளைப்போல !

பா.சத்தியமோகன் சொன்னது…

அமைதியான கவிதை.

பத்மா சொன்னது…

நானும் புத்தன் தான் என்ற ரீதியிலே என் சிந்தனை நேற்றுமுழுவதும் இருந்தது என்பதை நம்ப முடிகிறதா சுந்தர்ஜி?
இங்கு அவர் முகம் பார்த்ததும் அதுவாகவே ஆனது போல ..


அது சரி நீங்கள் எப்போது சுந்தர்ஜி போல இருப்பீர்கள்? :)

Madumitha சொன்னது…

வாழ்த்துக்கள் கடவுளே.

ராஜகுமாரன் சொன்னது…

நான் கடவுள் கவிதை நன்று.தொடர்ந்து செய்க நவயுகக்கவிதை.வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கலை.

நன்றி ரம்யா.

நீங்களும் தான் யாழி.

இருப்பிலேயே மிகவும் தெளிவானதும் உன்னதமானதும் கடவுள் குறித்த தத்துவங்கள்தான் வேல்கண்ணன்.என் முப்பதுகளில் இருந்த இடத்திலிருந்து வெகுதூரம் வந்து விட்டேன். இன்று மிகத் தெளிவாக இருக்கிறது எல்லாம்.காலங்களைக் கடந்து நிற்பவை எல்லாம் கடவுள்.அதற்கு மதங்களின் எல்லைகள் இல்லை.யாரும் எளிதில் பின்பற்றமுடியாத எளிமைதான் கடவுள்.நேர்மை அன்பு அர்ப்பணிப்பு இவையெல்லாம் கடவுள்.அறியாமையும் குழந்தையும் கடவுள்.எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தல் கடவுள்.பொறுத்து மறப்பது கடவுள்.இவையெல்லாம் உங்களிடமிருந்தால் நீங்களே நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள்.உன்னத இசை கடவுள்.நற்பண்பெல்லாம் கடவுள்.மன்னிப்புக் கோர்பவரும் மன்னிப்பவரும் கடவுள்.எதிரில் இருப்பதை இல்லாத பொருளில் தேடிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் நிரூபணங்கள் தேடுகிறோம்.சந்தேகங்கள் எல்லாம் அற்றுப் போகும் வேளையில் இயற்கையின் மடியில் மரிக்கிறோம்.ஒரு நிமிடம் சிந்திக்க இடமளித்த உங்களுக்கு நன்றி வேல்கண்ணன்.

நன்றி தியாகு கடவுளே!நெகிழ்த்துகிறீர்கள் ரசிப்பில்.


கண்டுகொண்டேன் வேணு உங்களை.

நன்றி அண்ணாமலை.

நன்று-நன்றி ஹேமா.

உங்கள் வார்த்தையைப் போல சத்யமோகன்.

எல்லா நேரங்களிலும் சுந்தர்ஜிதான் பத்மா.

நன்றி மதுமிதா.எனக்குக் கடவுள் உங்கள் கவிதைகளை எழுதுபவர்தான்.

நன்றி ராஜகுமாரன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...