25.2.10

ஸ்ருதிஒரு பகல்நேரத் திரைப்பட அரங்கின் இருளில்
அறிய நேர்ந்தது
உன் வியாபாரத்திட்டங்களையும்
இந்த மாதத்துக்கான இலக்குகளையும்.
எனக்கும் உனக்குமான உரையாடல்கள்
உறைந்துபோன என் அறை நிசப்தத்தின் நடுவேயோ-
தூசிபோர்த்திய கோப்புகளின்
அறையிலேயோ அல்லது
சுட்டெரிக்கும் வெயிலில்
வியர்வையில் குளித்தபடியோதான்
இதுவரை.
எதிர்பாராத நேரங்களில் வரும்
உன் தொலைபேசி அழைப்புகள்
வழியில்லா இடங்களில்
அடிவயிற்றை முட்டும் சிறுநீர்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...