ஹிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.9.12

சில பகிர்வுகள்.


தஞ்சாவூர்க்கவிராயர் - எதிர்பாராத நேற்றிரவின் மழை போல - இன்று மாலை மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார். அவரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்த எல்லா நண்பர்களுக்கும் மெல்லிய குரலில் தன்னுடைய நெகிழ்வான நன்றிகளைத் தெரிவிக்கச் சொன்னார்.

இன்னும் சில மாதங்களில், அவர் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார். அவரின் செல்லப் பேரன்களையும், வீட்டு மரங்களையும், செடிகளையும் பத்து நாட்களுக்குப் பின் இன்று அவரால் தொட்டு உணர முடியும். அவைதான் அவரின் சிகிச்சைக்குப் பிந்தைய நாட்களுக்கான அருமருந்து.

கவிராயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோதும், சிகிச்சையில் இருந்தபோதும் அன்புடன் ப்ரார்த்தித்துக்கொண்ட, பரிவுடன் விசாரித்த அத்தனை நண்பர்களுக்கும் மனதின் ஆழத்திலிருந்து  நன்றி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹிந்துவில் டி.வி.எஸ். 1957ல் வெளியிட்ட முதல் விளம்பரத்தில் எத்தனை ஸ்வாரஸ்யங்கள் மறைந்திருக்கின்றன. பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1987ல் எம்.ஜி.ஆர். ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது அவரின் உடல்நிலை குறித்து உண்டான புரளிகளை மறுக்க வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்று.(இதைப் பார்த்திராத தலைமுறைக்காக இது)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...