23.6.13

ஓஷோவும், 159 புத்தகங்களும்

தனக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களையும் பற்றித் தனிப்பட்ட முறையில் ஓஷோ பேசிய உரைகளின் தொகுப்பு இவை. 

”நான் நேசித்த புத்தகங்கள்” என்ற உரையை, தன் பற்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும்போது, ஒரு பல் சிகிச்சையாளியின் இருக்கையிலிருந்து 16 அமர்வுகளில் நிகழ்த்தினார் ஓஷோ. 

தேவகீத் என்ற பல் மருத்துவரும், அம்ரிதோ, மற்றும் ஒரு செவிலி - இவர்கள் மட்டுமே குறிப்பெடுத்தவர்கள் - எந்த ஒரு குறிப்பேடும் உபயோகிக்காமல். 

அம்மூவரையும் தாங்கள் கேட்டவற்றைத் தங்கள் நினைவிலிருந்து எழுதப் பணித்து, ஒருவர் எழுத மற்றவர்கள் திருத்தித் தொகுக்க, போன நூற்றாண்டின் மிக முக்கியமான இந்தப் புத்தகம் உருவானது. 

மேலே நீங்கள் பார்த்த/பார்க்கும் வீடியோ, இந்தப் புத்தகம் வெளிவந்த பின்னால் ஒரு தனி நேர்காணலாகப் பதிவு செய்யப்பட்டது. 

ஓஷோ வாழ்ந்த போது அவரால் பராமரிக்கப்பட்ட நூலகம் மிக ப்ரும்மாண்டமானது. அவர் அளவு புத்தகங்களை வாசித்தவர்களும், வாசித்தபின் - அவற்றின் ரசம் பருகி - அவற்றைத் துறந்தவர்களும் இல்லை.

#####

மிக அதிகமான புத்தகங்கள் எழுதி, ஆங்கிலம் உட்பட பரவலாகப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும் பலர் அறியாத ஆச்சர்யமான தகவல் நான் அடுத்துச் சொல்ல இருப்பது. 

இவை எதுவுமே அவர் எழுதியவை அல்ல. எல்லாமே அவர் உரைகளாகப் பேசியவைதான்.  ஒருவேளை அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளால் அவரைத் தவிர்த்துவிட்டவர்கள் தயவு செய்து அவரின் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசியுங்கள். அதன் பிறகு அவரை வாசிக்காது உங்களைத் தடுக்க எந்த ஒரு அவதூறாலும் முடியாது.


நமது ரிஷிகள் வாழ்ந்த காலத்தின் பாணியில் காதால் கேட்கப்பட்டுப் புத்தகங்களாய் வந்தவைதான் ஓஷோவின் எழுத்துக்கள். அவை உலகம் முழுவதும் இன்று கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டாலும், மிகச் சில ஆயிரம் பேர்களால் மட்டுமே புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் படுபவை.

அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை இணைத்திருக்கிறேன்.
 http://www.osho.com/Main.cfm?Area=Shop&Sub1Menu=eBooks&Sub2Menu=eBooksTitles
அவரின் புத்தகங்கள் தமிழிலும் பெரும்பான்மையானவை மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன. 

அவரின் புத்தகங்களில் எது சிறந்தது என்று சொல்வது கடினம். என் இருபதுகளில் ஓஷோ பகவான் ரஜ்னீஷ் என்று அறியப்பட்டு, அவரின் புத்தகங்கள் தடைக்குட்படுத்தப் பட்டிருந்த காலத்தில் என் கையில் கிடைத்த ”No Water; No Moon” தான் முதலில் நான் வாசித்தது.   Tao-The Golden Gate, பஜ கோவிந்தம், நிர்வாண உபநிஷத், A cup of Tea, Krishna: The Man and His philosophy வரை சென்று நீள்கிறது. தொடர்கிறது.

ஸோர்பா தி புத்தா என்றும், இறுதியில் ஓஷோவாகவும் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டவர், தன்  புத்தகங்களுக்கும் சூட்டப்பட்ட பெயர்களின் தலைப்பில் இருந்தே நம்மை ஈர்க்கத் தொடங்குகிறார். 

அவரின் கவித்வமான, மிகத் தெளிவான மொழியின் தொனி நமக்கு சங்கரரையும், ஏசுவையும் நினைவு படுத்துகிறது. ரமண மகரிஷியையும், ஸ்ரீ அரவிந்தரையும் போலத் தனிமையின் ஏகாந்தத்தில் அவர் முக்குளிக்காவிட்டாலும், அவரின் வாழ்வின் காலம் பூராவும் தனிமையின் அருவி பாய்ந்தபடித்தான் இருந்தது. 

அந்தத் தனிமையே, அவருக்கு முன் பயணித்த யாரொருவரின் கருத்துக்களையும் சார்ந்த தாரதம்மியங்களின் மீது அக்கறை கொள்ளாமல், அவருக்கென்று ப்ரத்யேகமான கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் வலிமையைக் கொடுத்திருக்க வேண்டும்.

மௌனத்தின் பேரமைதியில் இருந்துதான் சொற்கள் உதிக்கின்றன. உறைந்த மௌனத்தின் துகிலால் போர்த்தப்பட்டிருக்கும் மனம், எத்தனைக்கெத்தனை ஆழமானதும், சலனமற்றதுமாக இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை சொற்களின் தேர்வும் இருக்கும். 

சில உதாரணங்கள்:

"Ramana’s whole teaching can be collected on a postcard, not even a full page will be needed. And if you want to make a collection of Aurobindo’s writings, they will fill a whole library". 

"Persons like Ramana are very rare – thousands of years pass, then sometimes that quality of being arises. Ramana is like a Buddha, a Jesus, or a Krishna – a very rare phenomenon. To get in tune with a Ramana means to drop your ego completely. Great courage is needed."

”When the sun rises, something rises in you. When the sun sets, something sets in you. When there is a moon, you are different. When there is no moon, you are different. Your body is in a constant, dynamic relationship with the whole.”

”God is not where we are going; God is from where we are coming. And our eyes are fixed on distant stars. We go on looking ahead. We are oriented towards the distant and faraway, and all those goals that we create are our own mind projections. The real goal is from where we are coming. It is in our very nature, it is in our very being, it is the very ground of our existence.”

எல்லா ஞானிகளையும் போலவே அவர் தன் காலத்துக்கு முன்பே தன் போதனைகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவர் பேசியவற்றை மட்டும் படிக்கவே நமக்கு இந்த ஆயுள் போதாது என்பதே நிஜம்.  

ஓஷோவிடமும் நான் கண்ட ஆச்சர்யம் உலகத்தில் இத்தனை விரிவாக வாசித்த ஒரு ஞானியின் பார்வையில் ரமண மகரிஷியைத் தவிர தமிழின் எந்த எழுத்தும் படாமல் இருந்தமைதான்.

இனி அவர் நேசித்த 159 புத்தகங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான குறிப்புத் தருகிறார். புத்தக வெறியர்களுக்கு 250 பக்கங்களுக்குள் இருக்கும் அந்தப் புத்தகம் ஒரு கொடை. 

1 "Thus Spake Zarathustra" - Friedrich Nietzsche
2 "Brothers Karamazov" - Fyodor Dostoevsky
3 "The Book of Mirdad"
4 "Jonathan Livingston Seagull" - Richard Bach
5 "Tao Te Ching" - Lao Tzu
6 "The Parables of Chuang Tzu"
7 "The Sermon on the Mount"
8 "Bhagavad Gita"
9 "Gitanjali" - Rabindranath Tagore
10 "The One Thousand Songs of Milarepa"

1 "The Book" (of the Sufis)
2 "The Prophet" - Kahlil Gibran
3 "The Book of Lieh Tzu"
4 "Dialogue on Socrates" - Plato
5 "The Notes of the Disciples of Bodhidarma"
6 "The Rubaiyat" - Omar Khayyam
7 "Masnavi" - Jalaluddin Rumi
8 "The Isa Upanishad"
9 "All and Everything" - George Gurdjieff
10"In Search of the Miraculous" - P. D. Ouspensky
11 "Leaves of Grass" - Walt Whitman 

1 "The Art of Living" - Lin Yutang
2 "The Wisdom of China" - Lin Yutang
3 "The Talmud"
4 "Shunya Svabhava" - Taran Taran
5 "Siddhi Svabhava" - Taran Taran
6 "Notes from the Underground" - Fyodor Dostoevsky 
7 "Philosophical Investigations" - Ludwig Wittgenstein
8 "Psychosynthesis" - Assagioli
9 "Prose Poems" - Kahlil Gibran
10"Thoughts and Meditations" - Kahlil Gibran

1 "The Fragments of Heraclitus"
2 "The Golden Verses of Pythagoras"
3 "The Royal Song of Saraha"
4 Tilopa's "Song of Mahamudra"
5 "Zen and Japanese Culture" - D. T. Suzuki
6 "Let Go" - Hubert Benoit
7 "Ramakrishna's Parables"
8 "The Fables of Aesop"
9 Nagarjuna's "Mula Madhyamika Karika"
10 "The Book of Marpa"

1 "Brahma Sutras" - Badrayana
2 "Bhakti Sutras" by Narada
3 "Yoga Sutras" - Patanjali
4 "The Songs of Kabir"
5 "The Secret Doctrine" - Madame Blavatsky 
6 "The Songs of Meera"
7 "The Songs of Sahajo"
8 "The Book of Rabiya-al-Adabiya"
9 "The Songs of Nanak"
10 "Viveka Chudamani" by Shankaracharya
11 "The Koran" - Hazrat Mohammed

1 "The Dhammapada" - Gautam the Buddha
2 "Jaina Sutras" - Mahavira
3 "Zorba the Greek" - Nikos Kazantzakis
4 "The Declarations of Al-Hillaj Mansoor"
5 "The Fragments of Mahakashyapa"
6 "Siddhartha" - Hermann Hesse
7 "The Stories of Baal Shem"
8 "The Songs of Farid"
9 "Vigyana Bhairava Tantra" - Shiva
10 "Tatva Sutra" - Uma Swati
11 "The Songs of Naropa"

1 "The Poetry of Malukdas"
2 "Guru Grantha Sahib" (the book of the Sikhs)
3 "The Light on the Path" - Mabel Collins
4 "The Songs of Lalla"
5 "The Verses of the mystic Gorakh-Nath"
6 "The Supreme Doctrine" - Hubert Benoit
7 "Shiva Sutra"
8 "The Songs of Gaurang"
9 "The Songs of Dadu"
10 "The Statements of Sarmad"

1 "The Will to Power" - Friedrich Nietzsche
2 "A New Model of the Universe" - P. D. Ouspensky
3 "The Statements of Sanai"
4 "The Fragments of Dionysius"
5 "At the Feet of the Master" - J. Krishnamurti
6 "The Fragments of Junnaid"
7 "God Speaks" - Meher Baba
8 "Maxims for a Revolutionary" - George Bernard Shaw
9 "The Teachings of Hui Neng"
10 "The Jokes of Mulla Nasruddin"

1 "The Destiny of the Mind" - Haas
2 "The Sayings of Eckhart"
3 "The Sayings of Boehme" 
4 "The Sufis" - Idries Shah 
5 "The Way of Zen" - Alan Watts 
6 "The Sayings of Rinzai"
7 "The Lectures of Hazrat Inayat Khan" 
8 "All of the books of Hazrat Ali Khan"
9 "Jesus, the Son of Man" - Kahlil Gibran
10 "The Madman" - 
Kahlil Gibran

1 "Being and Nothingness" - Jean Paul Sartre
2 "Time and Being" - Martin Heidegger
3 "Tractatus Logico Philisophicus" - Ludwig Wittgenstein
4 "Vimalakirti Nirdesh Sutra"
5 "Commentaries on Living" - J. Krishnamurti
6 "Commentaries" - Maurice Nicoll
7 "Our Life with Gurdjieff" - Hartmann
8 "Shree Pasha" - Ramanuja
9 "The Future Psychology of Man" - P.D. Ouspensky
10 "The Book of Bahauddin"

1 "The Outsider" - Colin Wilson
2 "The Analects" - Confusius
3 "The Garden of the Prophet" - Kahlil Gibran
4 "The Voice of the Master" - Kahlil Gibran
5 "Who am I?" - Maharshi Ramana 
6 "The Mind of India" - Moorehead and Radhakrishnan
7 "Alice in Wonderland" - Lewis Carroll
8 "Alice through the Looking Glass" - Lewis Carroll
9 "The Wanderer" - Kahlil Gibran
10 "The Spiritual Sayings" - Kahlil Gibran
11 "Waiting for Godot" - Samuel Beckett

1 "Tales of Hassidism" - Martin Buber
2 "I and Thou" - Martin Buber
3 "Das Kapital" - Karl Marx (Osho: "Do not read it.")
4 "Lectures on Psychoanalysis" - Sigmund Freud
5 "Meetings with Remarkable Men" - Gurdjieff
6 "The Grantha" (written by an anonymous disciple of Kabir)
7 "The Communist Manifesto" - Karl Marx and Friedrich Engels
8 "The Myth of Sisyphus" - Marcel
9 "The History of Western Philosophy" - Bertrand Russell
10 "The Songs of Dayabai"

1 "Lust for Life" - Irving Stone
2 "The Agony and the Ecstasy" - Irving Stone
3 "Resurrection" - Leo Tolstoy 
4 "Notes on Jesus" - Thomas
5 "War and Peace" - Leo Tolstoy
6 "The Mother" - Maxim Gorky 
7 "Fathers and Sons" - Turgenev 
8 "The Phoenix" - D.H. Lawrence
9 "Psychoanalysis and the Unconscious" - D.H. Lawrence
10 "Light of Asia" - Arnold
11 "Bijak - Kabir's selected songs"
12 One Dimensional Man by Herbert Marcuse
13 "The I Ching"
14 "Nadi Ke Dvip" - Sachidanand Vatsyayan

1 "My Experiments with Truth" - Mahatma Gandhi
2 "Confessions" - Saint Augustine
3 "Anna Karenina" - Leo Tolstoy 
4 "The Art of Tantra" - Ajit Mukherjee
5 "The Tantra Paintings" - Ajit Mukherjee
6 "Bhaja Govindam" - Adi Shankaracharya
7 "Philosophical Papers" - Ludwig Wittgenstein
8 "Zen Flesh Zen Bones" - Paul Reps 
9 "Zen Buddhism" - Christmas Humphries
10 "The Songs of Chandidas"

1 "Shiva Puri Baba" - Bennett
2 "Listen Little Man" - Wilhelm Reich
3 "Principia Mathematica" - Bertrand Russell and Whitehead
4 "Poetics" - Aristotle
5 "Three Pillars of Zen" - Ross
6 "The Gospel of Ramakrishna" - M
7 "The collected works of Ramatirtha"
8 "Principa Ethica" - G.E. Moore
9 "The Songs of Rahim" (Rahim Khan Khana)
10 "Divan" - Mirza Ghalib
11 "The Book" - Alan Watts

19.6.13

நானும், புத்தகங்களும்


என் வாழ்க்கையில் புத்தகங்கள் மிக முக்கியமானவை. நான் மானசீகமாக உறங்குவதும், உயிர்ப்பதும் அவற்றின் மேல்தான். ஒவ்வொரு புத்தகங்களோடும் ஒவ்வொரு விதமான அனுபவமும், அவற்றால் பெற்ற நினைவுகளும் அந்தந்தப் புத்தகங்களின் பக்கங்களோடு என்றைக்கும் ஈரம் காயாமல் ஒவ்வொரு முறை அவற்றைப் புரட்டும் போதும் நான் உணர்கிறேன்.

அதே போல் ஒவ்வொரு புத்தகத்தையும் நமக்குச் சிபாரிசு செய்பவர்கள் அந்தப் புத்தகங்கள் வாயிலாகத் தங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். துவக்கம் முதலே புரட்டிப்பார்க்கும் ஒரே பக்கத்திலேயே அதன் தரத்தை எடை போட்டுத் தேர்ந்தெடுப்பதும், விலக்குவதும் கை வந்திருக்கிறது.

மிக மோசமான புத்தகங்களை நான் வாசித்ததே இல்லை. என் தோட்டத்தில் எப்போதுமே நறுமணம் சுமந்து வீசும் தென்றலின் ஆதிக்கம்தான். கண்ணீரோ, சிரிப்போ எதுவுமே சோடை போனதில்லை. அநேகமாக சூழல் காரணமாகத் திணிக்கப்பட்டாலும் முதல் பக்கத்துடனேயே உறவை முறித்துக்கொண்டு விடுவேன்.

இன்று வரை கல்கியின் கட்டுரைகளைத் தவிர அவரின் நாவல்களை வாசித்ததில்லை. என் இருபதுகளில் அகிலனையோ, சாண்டில்யனையோ, மு.வரதராசனையோ தொட்டது கூட இல்லை. நா.பா.வின் எழுத்துக்களை அதிகம் வாசித்ததில்லை. ஜெயகாந்தனின் சில நாவல்கள் மட்டுமே என்னை ஈர்த்திருக்கின்றன. என்னைப் பொறுத்த வரை நா.பா.வும், ஜெயகாந்தனும் ஒரே கோட்டில் இரு வேறு துருவங்களில் நிற்பதாய்த் தோன்றினார்கள். 

ஆனால் அதே இருபதுகளில் பாரதிக்குப் பிறகு -பாரதிதாசனைத் தொடாமல்- நேராக புதுமைப்பித்தனுக்கும், ந. பிச்சமூர்த்திக்கும், கு.ப.ராவுக்கும், க.நா.சு.வுக்கும், தேவனுக்கும், அழகிரிசாமிக்கும், சாமிநாத சர்மாவுக்கும், எம்.வி.வி.க்கும், ப.சிங்காரத்துக்கும், கரிச்சான்குஞ்சுக்கும் செல்ல முடிந்த என்னால், அதே நேரத்தில் அசோகமித்திரன், சுந்தரராமசாமி, நாகராஜன், ஞானக்கூத்தன், வண்ணநிலவன், வண்ணதாசன், கல்யாண்ஜி, ப்ரகாஷ் இவர்களிடமும் நெருங்கிச் செல்ல முடிந்திருக்கிறது.

மௌனியின் எழுத்தின் நுட்பம் புரிந்தாலும், காரணமற்ற ஒரே தொனி அலுப்பூட்டுகையில், அதே அளவு குறைவாக எழுதி எளிமையால் ஆழங்களைத் தொட்ட ரஸிகனின் -பலரின் பார்வையில் படாத - பாசாங்கில்லாத எழுத்து நிறைவளிக்கிறது. 

எண்பதுகளில் எழுதத் துவங்கியிருந்த சுகுமாரனின் கவிதைகள் போலவே தஞ்சாவூர்க்கவிராயரின் நா.விச்வநாதனின், அஸ்வகோஷின், கோபிகிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமாயிருந்தன.  சிவசங்கரியும், இந்துமதியும் என் பட்டியலில் இல்லை. அம்பையும், சூடாமணியும் என்னை உலுக்கியிருக்கிறார்கள். பாலகுமாரனை விட மாலன், ஆதவன் எழுத்து என்னைத் தொடுகிறது. 

சுஜாதாவின் தொடர்கதைகளையும், நாவல்களையும் விட அவரின் கணையாழியின் கடைசிப் பக்கங்களை நேசித்திருக்கிறேன். ஸ்ரீரங்கத்து தேவதைகள் தவிர ஒரு பத்துச் சிறுகதைகள், அவர் வாசித்த புத்தகங்களின் சிபாரிசுகள், அவரின் புறநானூறு, குறுந்தொகை முயற்சிகளும் தமிழுக்கு மிக முக்கியமானவை என்று தோன்றுகிறது. 

அதுபோலவே நுட்பமான உணர்வுகளால் எழுதிய ந.முத்துசாமி, திலீப்குமார், ராஜேந்திர சோழன் ஆகியோரின் சிறுகதைகளும் என் எல்லையை விரிவு படுத்தின. 

அதே இருபதுகளில் ருஷ்யாவின் அத்தனை சாகஸக் காரர்களும் என் இரவுகளை நிறைத்தார்கள். தாஸ்தயேவ்ஸ்கி, செகாவ், துர்கனேவ், கோர்க்கி, புஷ்கின், மாயகோவ்ஸ்கி, கொரெலென்கோ ஆகிய மேதைகள் கூட்டமாக வந்து வசீகரித்து என்னை வீழ்த்தினார்கள். 

தோல்ஸ்த்தோய் அப்போது வசீகரிக்கவில்லை. (இப்போதைய மறு வாசிப்பில் தால்ஸ்த்தோய் மிக உயர்வான இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பது எனக்கான அளவுகோலாய் இருக்கிறது). நாஸ்தென்காவை நான் காதலித்துக் கொண்டிருந்தேன். பஸாரவ் என் ஆதர்சமான கதாநாயகனாக இருந்தான். ருஷ்யப் புல்வெளிகளில் திரியும் ஜிப்ஸிகள் என் கனவுகளை ஆக்ரமித்திருந்தார்கள். 

நான் படித்த மலையாள, வங்காளி, ஒரிய, மராத்தி, உர்தூ இலக்கியங்களில் பஷீரும், சச்சிதானந்தனும், பால் சக்காரியாவும், கமலாதாஸும், சரத்சந்திரர், ரவீந்த்ரநாத் டாகூர், தாராசங்கர், விபூதிபூஷண், அதீன் பந்த்யோபாத்யாயாக்கள், சிர்ஷேந்து உள்ளிட்ட  முகோபாத்யாயாக்கள், சட்டோபாத்யாயாக்களும், மொஹபத்ராக்கள், மஹாஸ்வேதா தேவிக்கள், வாத்ஸ்யாயன்கள், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனக் கவிஞன் பைஜூயியும், என்னால் இன்றும் மறக்கமுடியாத நூலான “பெங்கால் நைட்ஸ்” எழுதிய ருமானிய மொழியின் மிர்ச்சா எலியாதேவும் என்று நாட்கள் மாயஜாலங்களால் நிரம்பி வழிந்தன. 

இன்னும் ஒரு மூட்டை எழுத்தாளர்களை உங்களின் நலம் கருதி விட்டுவிடுகிறேன்.

வாசிக்காத நேரங்களுக்கு சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், அடூர் கோபாலகிருஷ்ணன், விஜய் மேத்தா, பாதல் சர்க்கார், ஸ்மிதா பாடில், ஓம் பூரி, நஸீருத்தின் ஷா, அமோல் பாலேகர், பீஷம் சஹானி, பாரத் கோபி, அபர்ணா சென் போன்றவர்களின் துணை வாய்த்தது. 

அந்த நாட்களின் பின்னே ஒரு பெரும் இடைவெளி வீழ்ந்தது. வாசிப்பில்லாத நாளில்லை என்ற சூழல், தொடர்ச்சியான குடும்பச் சூழல்களின் மையத்தில் சிக்கி எப்போதாவது வாசிப்பது, எப்போதாவது எழுதுவது என்று காலம் தலைகீழாக மாறிப்போனது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இடைவிடாத வாசிப்பையும், எழுத்தையும் மீட்டெடுத்திருக்கிறேன்.  அந்த இடைவெளிகளிலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் நான் வாசித்து ரசித்தவர்கள் இன்னொரு பட்டியலில் இடம் பிடிப்பார்கள்.

நம் நாட்டின் வேர்களைக் கவனிக்க மறந்து கிளைகளையும், அவற்றின் இலையசைவையுமே கவனித்து வந்திருக்கிறேன் என்றுணர்ந்த போது, ஆதிசங்கரரின் அண்மை என்னை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தியது.

தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பகவான் ரமணரின் அண்மையும், அரவிந்தரின் வழிகாட்டுதலும் வாய்த்தன. பரமஹம்ஸரும், விவேகானந்தரும் என்னைச் சீராட்டினார்கள். உபநிஷத்துக்களின் கரையில் அலைகள் என் பாதங்களை நனைத்தன. ஆலய மணியின் நாதமாக வேத உச்சாடனங்கள் என்னை அசைத்தன. 

துயர் எனும்  பெருமழையில் சிக்கித் தனியே ஒதுங்கியபோது நம் புராணங்களின் துவாலைகள் தலைதுவட்டித் தாலாட்டின. சதுரகிரியில் எனக்கேற்பட்ட மரண அனுபவம் என் அஞ்ஞானக் கதவுகளைத் திறந்து தன் மாளிகைக்குக் கூட்டிச்சென்ற போது, வாழ்வின் பொருளை உணரத் துவங்கிய அதே வேளையில் அமரத்துவத்தையும் உணரத் தலைப்பட்டேன். 

நம் சங்க இலக்கியங்களின் அழகும், ஆழமும் எனக்குப் புரியத் துவங்கின. திருக்குறளின் எளிமையில் ஏமாந்து ஏமாந்து மறுமுறை மறுமுறையும் கதவுகளைத் தட்டுகிறேன். ஔவைக் கிழவியின் தமிழில் என் வார்த்தைகளைக் கூர் தீட்டிக் கொள்கிறேன். என் ஈசனுக்கே தாய் காரைக்கால் அம்மையின் தியாகத்துக்கும், குமரகுருபரனின் சாதனைகளுக்கும், தாயுமானவனின் போதனைகளுக்கும் முன்னால் என் அகந்தை கரைந்து வீழ்ந்து கிடக்கிறேன். 

என் உயிரின் தைலம் எஞ்சியிருக்கும் நாட்களில் நான் நகர நினைப்பது கற்றவற்றின் சாரத்தை என் ஆன்மாவின் திரிக்குத் தந்துவிட்டுக், கற்றவைகளின் சுமையைத் துறக்க ஆசை கொள்கிறேன். தயங்கித் தயங்கிக் காற்றில் மிதக்கும் ஓர் சருகின் ஞானத்தை என் ஆடையாக அணிய விரும்புகிறேன்.

க்ரந்த-மப்யஸ்ய மேதாவீ  ஞான-விஞ்ஞான தத்வத:
பலாலமிவ தான்யார்த்தீ த்யஜேத் க்ரந்த-மசேஷத: 

என்கிறது அம்ருத பிந்து உபநிஷத்தின் 18ஆவது வசனம். 

( புத்தியிற் சிறந்தவன், அறிவிலும் அனுபவத்திலுமே சித்தத்தை வைத்தவனாய் நூல்களைக் கற்றுணர்ந்து அதன்பின் தானியத்தை விரும்புபவன் வைக்கோலைத் தள்ளி விடுவது போல நூல்களை அறவே விட்டுவிட வேண்டும்.)

#####

சரி. இந்த உரையின் அடுத்த கட்டமாக நான் எழுத நினைப்பது உலக அளவில் புகழ்பெற்ற சிலரின் சிபாரிசுகளையும், சிலரின் பார்வையில் படாதுபோன சில பொக்கிஷங்களையும் பற்றித்தான்.    

ஒவ்வொரு ஞானாசிரியனும் தான் வாழ்ந்த காலத்தில் சிபாரிசு செய்த புத்தகங்கள் பற்றியும், அவற்றைத் தேடி அவற்றின் பொருள் உணர்ந்து, அவற்றைக் கற்றும், கடந்தும் செல்வது சிலிர்க்கும் அனுபவம்.

ஒரு மரத்தில் ஓர் இலை உதிர்வதும், மற்றொரு இலை துளிர்ப்பதும் போல.

முதலில் என் நினைவில் உதிப்பது ரமண மகரிஷியும் அவரின் சிபாரிசுகளும் தான்.  
தன் வாழ்நாளில் யோக வாசிஷ்டம், ஸ்ரீ திரிபுரா ரகசியம், அஷ்டாவக்ர கீதை, கைவல்ய நவநீதம், ரிபு கீதை, ஈஸ்வர கீதை, பகவத் கீதையில் முக்கியமாய்த் தான் கருதிய 42 ச்லோகங்களுக்குத் தானே வெண்பா எழுதியமை என்று ஒரு பொக்கிஷம் போல் தன் விருப்பப் பட்டியலை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். 

இவற்றில் ஒவ்வொன்றையும் என் கண்களைத் திறந்த ஞானச் சுடர்களாக நான் எண்ணுகிறேன். குறிப்பாக யோக வாசிஷ்டமும், அஷ்டாவக்ர கீதையும். இவை இரண்டும் ஆன்ம அனுபூதிக்கு இட்டுச் செல்லும் பாதையில் உபநிஷத்துக்களையும் கடந்து செல்வதாய் என் அளவில் உணர்கிறேன்.  

அடுத்து ஷிர்டி சாய்பாபா தன் உலக வாழ்வில் பரிந்துரைத்த புத்தகங்களைக் கீழே தொகுத்திருக்கிறேன். 1. அத்யாத்ம ராமாயணம். 2. ஏகநாத பாகவதம் 3. கீதா ரகஸ்யம் - திலகர் 4. குருசரித்ரம் 5. தாசபோதம் 6. யோக வாசிஷ்டம் 7. பஞ்சதசி - வித்யாரண்யர். 8. நாராயண உபநிஷத் (தைத்ரீய பாகம்) 9. ஞானேச்வரி ( கீதையின் மராத்திய விரிவுரை ) 10. ராமவிஜயம். இவற்றில் என் வாசிப்பில் இப்போது இடம் பிடித்திருப்பது வித்யாரண்யரின் “பஞ்ச தசி”. பாபா குறிப்பிடவற்றில் பாதிக்கு மேல் இன்னும் நான் படித்ததில்லை.

பாபாவும் தனது இறுதி நாட்களில் எம்.பி.ரேகேயிடம் “ எந்தப் புத்தகத்தையும் படிக்காதே. இந்தப் புத்தகங்களில் ப்ரம்மனைக் கண்டுவிடலாம் என்று ஜனங்கள் எண்ணுகிறார்கள். நீ என்னை உன் இதயத்தில் அமர்த்திவிட்டால் போதும்” என்றே சொல்லிவிட்டுப் போனார். 
  
இதேபோல் விவேகானந்தர் எப்போதுமே தன் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் குறிப்பிட்டுவந்தது உபநிஷத்துக்களையும், பகவத் கீதையையும், பதஞ்சலி யோக சூத்திரங்களையுமே. மதங்களைக் கடந்த ஆன்மீகம் என்பதை மிகத் தொன்மையான காலத்திலேயே தொட்டுவிட்டன உபநிஷத்துக்கள். 

விவேகானந்தரின் பார்வையில் மட்டும் திருக்குறளும், கைவல்ய நவநீதம், நாலடியார், ஔவையார், காரைக்கால் அம்மையார், திருமூலர், கம்பர், நால்வர், தாயுமானவர், ஆண்டாள் உள்ளிட்ட பிற பொக்கிஷங்களும் பட்டிருந்தால் அவரின் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு இருக்கும் ஒரே ஆச்சர்யம் இவர் பார்வையில் திருக்குறள் கூடப் படாததுதான்.

அதேபோல் இன்னொரு மறக்கமுடியாத வியக்தியும், மகானுமான அரவிந்தரின் எழுத்துக்களிலும், தமிழ் புழங்கிய புதுச்சேரியில் மிக நீண்ட காலம் வாழ்ந்தும், பாரதி, வ.வே.சு., வ.ரா. போன்றவர்களின் நெருங்கிய தொடர்பில் பத்தாண்டுகளுக்கும் மேல் இருந்தும், தமிழ் எழுத்துக்கள் குறித்து அரவிந்தர் எதுவும் சொன்னதில்லை என்பதும் ஓர் ஆச்சர்யம். 

ஆனால் புதுச்சேரி அன்னையோ மிக அபூர்வமாக திருக்குறளைப் பற்றியும், ஔவையைப் பற்றியும், தமிழில் இருக்கும் சில அபூர்வமான தாலாட்டு, ஒப்பாரிப்பாடல்களையும் குறித்து மேற்கோள் காட்டியிருப்பது பெரும் ஆச்சர்யம்.

இந்தக் கட்டுரையின் தவிர்க்க முடியாத ஓர் ஞானி ஆசார்ய ரஜ்னீஷ் என்றறியப் பட்டுத், தன் பெயரையே இறுதியில் துறந்த ஓஷோதான். இந்த உரையின் நீளம் கருதி, அவரின் விருப்பங்களான புத்தகங்கள் குறித்து என் அடுத்த பதிவில் உங்களைச் சந்திக்கிறேன். 

16.6.13

கடவுள் ஆதி.மிருகம் மீதி.


ஒரு புகழ் பெற்ற ஹோட்டலின் புகழ் பெற்ற விளம்பரம் இது.
கொடியவை என்று மனிதன் ஒதுக்கி வைக்கும் எல்லாவற்றின் மேலும்
ஆதுரத்துடன் நம் கைகளைப் பிணைத்துக் கொள்ள வைக்கிறது.

தனக்கும் பிறருக்கும்  இடையிலான  இடைவெளியைத் தீர்மானிப்பவனாக மனிதன் இருக்கிறான்.
தனக்கும் பிறருக்குமான  நெருக்கத்தைத் தீர்மானிப்பவைகளாக  விலங்குகள் இருக்கின்றன.
மனிதன் மனதில் மறைந்திருக்கும் மிருகம்  எப்போதுமே கூர்மையான  நகங்களுடனும், பற்களுடனும்  விழிப்போடு காத்திருக்கிறது.
மிருகத்தின் நினைவில் வாழும் மனிதம் அதன் கண்களில்  கருணை கசியும்  வாலசைவில்  ஒரு தொடுதலுக்காகத் தயங்கி நிற்கிறது  தவிப்போடு  எப்போதும்.

#######

-இனி இலக்கியத்துக்கான நோபெல் விருது பெற்ற மெக்ஸிகோவின் ஆக்டேவியோ பாஸ் எழுதிய ஒரு அழகான கவிதை.

ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்தது
கார்களுக்கிடையில்.

மேரி ஜோஸ் சொன்னார்:

அந்த வண்ணத்துப்பூச்சிதான்
ந்யூயார்க் சுற்றுப்பயணத்தில் இருக்கும்
சுவாங் சு.

ஆனால் அந்த வண்ணத்துப்பூச்சி
அறியாது இருந்தது

தான்-

சுவான் சு வாகத் தன்னைக்
கனவு கண்டு கொண்டிருந்த
ஒரு வண்ணத்துப்பூச்சி என்றோ

அல்லது

வண்ணத்துப்பூச்சியாக தன்னைக்
கனவு கண்டு கொண்டிருந்த
ஒரு சுவாங் சு என்றோ.

வண்ணத்துபூச்சி ஒருபோதும்
வியப்படைந்ததில்லை.

அது பறந்து விட்டது.


####

அடுத்த கவிதை இலக்கியத்துக்கான நோபெல் விருது பெறாத இந்தியாவின் சுந்தர்ஜி எழுதியது.

எறும்புக்கு ஒற்றை விரல்.
கொசுவுக்கு ஒரு கை.
ஓணானுக்கும்
தட்டானுக்கும் ஒரு சுருக்கு.
குருவிக்கு ஒரு சிறுகல்.
பாம்புக்கு ஒரு கழி.
தவளைக்கு ஒற்றைஅடி.
நத்தைக்கு ஒற்றை மிதி.
நாய்க்கோ கல்லெறி.
மாட்டுக்கும் பன்றிக்கும்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அதனதற்கேற்றாற் போல்.
மீனுக்குப் புழு.
யானைக்குப் பெரும்பள்ளம்.
மானுக்கு ஒற்றைக்குறி.
காளைக்கும் கழுதைக்கும்
பெரும்பாரம்.
ஒட்டகத்துக்கு
முடிவில்லாப் பாலை.
குதிரைக்கோ விதவிதமாய்.
வாழாதிருந்து சாகிறான்
மனிதன்.
சாகாதிருக்க வாழ்கின்றன
உயிர்களெல்லாம்.

11.6.13

தி க்ரேட் டிக்டேட்டர் - ஒரு மகத்தான இறுதிக்காட்சி.


மன்னியுங்கள்.

நான் ஒரு பேரரசனாக விரும்பவில்லை.

அது என் வேலையல்ல. நான் யாரையும் ஆளவோ, வெல்லவோ விரும்பவில்லை. முடிந்தமட்டும் நான் ஒவ்வொருவருக்கும் - யூதரோ, ஹீப்ருவோ, கறுப்பரோ, வெளுத்தவரோ - உதவ விரும்புகிறேன்.

நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவே விரும்புகிறோம். மனிதப்பிறவியானது அப்படிப்பட்டதுதான். நாம் பிறரின் மகிழ்ச்சியாலேயே அன்றி அவர்களின் துயரோடு வாழ விரும்புவதில்லை. நாம் யாரொருவரையும் வெறுக்கவும், ஒதுக்கவும் விரும்புவதில்லை. 

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமிருக்கிறது. பூமித்தாயிடம் நம் ஒவ்வொருக்கும் தருவதற்கு நிரம்ப இருக்கிறது. வாழ்க்கையின் பாதை சுதந்திரமானதும், அற்புதமானதுமாக இருக்கிறது. ஆனால் நாம் பாதை தவறிவிட்டோம்.  

பேராசை மனிதனின் ஆன்மாவை விஷமாக்கி விட்டது; வெறுப்பின் வேலியால் பிரித்துவிட்டது; வறுமையிலும், ரத்தச் சேற்றிலும் நம்மைத் தள்ளிவிட்டது. நாம் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு, நம்மைக் கைதிகளாக்கிக் கொண்டுவிட்டோம். 

இயந்திரங்களால் உற்பத்தி அதிகரித்தாலும், தேவை தீரவில்லை. நம் அறிவு நம்மை சுயநலமிகளாய் மாற்றிவிட்டது. நம் புத்திசாலித்தனம் நம்மைக் கரடுமுரடாகவும், அன்பற்றவர்களாயும் மாற்றிவிட்டது. 

நாம் நிறைய சிந்திக்கிறோம். குறைவாய் உணர்கிறோம். இயந்திரங்களைக் காட்டிலும் மனிதநேயமே நம் தேவை. புத்திசாலித்தனத்தைக் காட்டிலும் கருணையும், மென்மையுமே நம் தேவை. இந்தக் குணங்கள் இல்லாதுபோனால், வாழ்க்கை வன்முறை மிக்கதாகி, வாழ்க்கையைத் தொலைத்துவிடுவோம். 

விமானமும், வானொலியும் நம் இடைவெளிகளைக் குறைத்து நம்மை இணைத்தன. இந்தக் கண்டுபிடிப்புக்களின் ஆதார இயல்பே மனிதனின் மேன்மைக்காகவும், உலக சகோதரத்துக்காகவும், நம் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதும்தான்.    

இப்பொழுது கூட, உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான நம்பிக்கையிழந்த ஆண்களை, பெண்களை, சிறு குழந்தைகளை என் குரல் சென்றடைகிறது. அப்பாவி மக்களைத் துன்புறுத்திச் சிறையிலிடும் அமைப்பினால் பாதிக்கப்பட்டவர்களை என் குரல் சென்றடைகிறது.

என் குரலைக் கேட்பவர்களுக்கெல்லாம் “நம்பிக்கை இழந்து விடாதீர்கள்” என நான் சொல்கிறேன்.

நம் மீது இப்போது கவிழ்ந்துள்ள துயர்- பேராசை, மனித மேம்பாட்டின் பாதை குறித்து பயம் கொள்ளும் மனிதனின் கசப்புணர்வு ஆகியவையே. 

வெறுப்பு கரைந்து செல்லும்; சர்வாதிகாரிகள் மறைவார்கள்; மக்களிடமிருந்து அவர்கள் பறித்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதன் சாகும் மட்டும்  சுதந்திரம் அழியாது.

வீரர்களே! உங்களிடம் வெறுப்பை ஊட்டி, அடிமைப்படுத்தி, வாழ்வை நிர்பந்தித்து, எதை நீங்கள் செய்யலாம், எதை நீங்கள் யோசிக்கலாம், எதை நீங்கள் உணரலாம் என்று தீர்மானிக்க அந்தக் கொடுங்கோலர்களிடம் அடிபணியாதீர்கள். உங்களைச் சக்கையாய்ப் பிழிந்து, உங்கள் உணவைக் கட்டுப்படுத்தி, கால்நடைகளாய் உங்களைக் கருதி, கொட்டில் மிருகங்கள் போல் உபயோகப்படுத்துபவர்களிடம் பணியாதீர்கள்.  

இயந்திர மனமும், இயந்திர நெஞ்சும் படைத்த இந்தச் செயற்கையான இயந்திர மனிதர்களிடம் அடி பணியாதீர்கள். நீங்கள் இயந்திரங்கள் இல்லை; கால்நடைகள் இல்லை; நீங்கள் மனிதர்கள். மனித சமுதாயத்துக்கான அன்பு ததும்பும் மனம் உங்களிடம் இருக்கிறது. யாரையும் வெறுக்காதீர்கள்.

நேசிக்கப்படாதவர்களே, செயற்கையானவர்களே வெறுப்பை உமிழ்வார்கள்.

வீரர்களே! அடிமைத்தனத்துக்காகப் போராடாதீர்கள். சுதந்திரத்துக்காய்ப் போராடுங்கள்.

பதினேழாவது அதிகாரத்தில் ” இறைவனின் பேரரசு மனிதனில் இருக்கிறது” என்று தூய லூக் போதிப்பதாக எழுதப்பட்டிருப்பது தனி ஒரு மனிதனுக்கோ, ஒரு குழுவுக்கோ அன்றி எல்லோருக்குமாய்த்தான்.

இயந்திரங்களை உருவாக்கும் சக்தி, மகிழ்ச்சியை உருவாக்கும் சக்தி உங்களில் நிறைந்திருக்கிறது. உங்களிடமே இந்த வாழ்வைச் சுதந்திரமானதாகவும், அழகானதாகவும், அற்புதமான மாயாஜாலம் நிறைந்ததாகவும் உருவாக்கும் சக்தி நிரம்பியிருக்கிறது. ஆகவே, ஜனநாயகத்தின் பெயரால், நாம் இந்தச் சக்தியை உபயோகிப்போம்.

நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

மனிதர்களுக்கு உழைப்பும், இளைஞர்களுக்கு எதிர்காலமும், முதியோர்களுக்குப் பாதுகாப்பும் அளிக்கும் ஒரு நாகரீகமான புதியதோர் உலகத்துக்காக நாம் போராடுவோம். இந்த வாக்குறுதிகளை அளித்தே கொடுங்கோலர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைத்தார்கள். அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள்.

தங்களை விடுவித்துக்கொண்டு, மக்களை அடிமைப்படுத்தினார்கள் சர்வாதிகாரிகள்.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இப்பொழுது நாம் போராடுவோம். இந்த உலகத்தை விடுவிக்க நாம் போராடுவோம். நாடுகளுக்கிடையிலான தடைகளைக் கடப்போம். பேராசை, வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை இவற்றையும் விலக்குவோம்.

விஞ்ஞானமும், வளர்ச்சியும் மனிதனின் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் அர்த்தம் நிறைந்த உலகுக்காக நாம் போராடுவோம். 

வீரர்களே! ஜனநாயகத்தின் பெயரால், நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

                                                                        ######
ஒரு யூத சவரத் தொழிலாளியாக, சர்வாதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடக்கும் ஒரு பொதுஜனமாக நடித்த சர். சாள்ஸ் சாப்ளினின் "The Great Dictator" எனும்அமர காவியத்தின் இறுதிக் காட்சி இது.

உருவ ஒற்றுமையால், சந்தர்ப்ப சூழ்நிலையால் உரையாற்ற நேரும் அந்தக் கதாபாத்திரம், நம்பிக்கையற்றுத் தளர்ந்த நடையுடன் மேடையை அடையும் காட்சியில் துவங்குகிறது. 

மெல்ல மெல்லத் தன் மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் சாமான்ய -ஆனால்- உலக அமைதிக்கும், வாழ்வின் ஆனந்தத்துக்குமான சூத்திரத்தை வெளியிடும்போது அது மணம் நிரம்பிய ஒரு பூவாய் மலர்ந்து, பெரும் அருவியாய்ச் சீறிப் பாய்கிறது. 

ஒவ்வொரு கட்டத்திலும் உருமாறும் குரலின் தொனியும், விதவிதமாய் மாறும் உடல்மொழியும் என்றைக்கும் காணத் திகட்டாதது. இன்றைக்கும் அடிமைத்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் உடைத்து நொறுக்கும் உரையானதுமான இந்தக் காட்சி, நிரந்தரமாய் உலக சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. 

இந்தக் காட்சியின் வயது 73 என்றால் யாரால் நம்ப முடியும்?   

9.6.13

வஜ்ர ஸூசிகா உபநிஷத் - யார் ப்ராம்மணன்?


வஜ்ர ஸூசிகா உபநிஷத் ஆஞ்சனேயருக்கு ராமபிரான் உபதேசித்த 108 உபநிஷத்துக்களில் 38வது.

ஸாம வேதத்தைச் சேர்ந்தது வஜ்ர ஸூசிகா உபநிஷத். வஜ்ரம் என்றால் வைரம். ஸூசிகா என்றால் ஊசி. அஞ்ஞானம் எனும் இருளை, கடினமான தாதுப்பொருட்களில் துவாரம் இட்டுச் செல்லும் வைரஊசி இந்த உபநிஷத்.

மெய்யறிவு பெற்றவர்களுக்கு இவ்வுபநிஷத் ஓர் அணிகலன் போலவும், அற்றவர்களுக்குக் கண்களைத் திறக்கும் ஞானமாகவும் அமைகிறது.

உபநிஷத்துக்களில் வைர ஊசி போல விளங்கும் இந்த உபநிஷத் யார் பிராம்மணன்என்ற பொருளை ஊடுருவித் தைக்கிறது.

ப்ராம்மணன் என்பவன் யார்

அவன் ஜீவனாதேகமாஜாதியாஞானமாகர்மமாதர்மமாஎன்ற ஆராய்ச்சியை முன் வைக்கிறது.

1. ஜீவன் ப்ராம்மணன் என்று கருத முடியாது. கடந்ததும்கடக்க இருப்பதுமான பல உடல்களில் ஜீவன் ஒரே வடிவம் உடையதாலும்கர்மத்தின் பலனால் பல உடல்கள் பெறுவதாலும்எல்லா உயிர்களிலும் ஜீவன் ஒரே மாதிரியாய் இருப்பதாலும் ஜீவனை ப்ராம்மணன் என்று கருதுவதற்கில்லை.

2. பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் பிறப்பெடுக்கும் அனைவருக்கும் பொதுவானதாகவும்மூப்பு முதல் மரணம் வரை தர்ம அதர்மங்கள் சமமானதாகவும்தோலின் நிறத்தால் பாகுபடுத்த முடியாததாகவும் இருக்கிறது. ஒரு ப்ராம்மணத் தந்தையை தகனம் செய்யும் புத்திரனுக்கு ப்ரும்மஹத்தி எனும் தோஷம் பீடிக்காமையாலும் உடலை ப்ராம்மணன் என்று கருத முடியாது.

3. மஹரிஷிகளான ஹ்ருஷ்யஷ்ருங்கர் மானிடமும்கௌஷிகர் தர்ப்பையிலும்ஜாம்பூகர் நரியிடமும்வால்மீகி புற்றில் இருந்தும்வ்யாஸர் செம்படவப் பெண்ணிடமும்கௌதமர் முயலிடமும்வஸிஷ்டர் ஊர்வசியிடமும்அகஸ்தியர் கும்பத்திலிருந்தும் தோன்றியவர்கள். இதுபோலவே பிறவியில்லாமலே ஆதியில் ஞானமடைந்த ரிஷிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆகவே ஜாதியால் ஒருவனை ப்ராம்மணன் என்று கருத வாய்ப்பில்லை.

4. க்ஷத்ரியர்களில் ஞான தரிசனம் பெற்ற ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆகையால்அறிவாலோ ஞானத்தாலோ ஒருவனை ப்ராம்மணனாகக் கருத இயலாது.        

5. எல்லா உயிர்களுக்கும் ஊழ்வினை, தொல்வினை, வருவினை போன்ற கர்மங்கள் பொதுவாகக் காணப்படுவதால்முந்தைய வினையின் விளைவுகளாலேயே தூண்டப்பட்டுச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுகொண்டுகர்மத்தாலும் ஒருவன் ப்ராம்மணனாக மாட்டான்.

6. க்ஷத்ரியர்களிலும், வைசியர்களிலும் தான தர்மங்களில் மேலானவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். பொன்னையும்பொருளையும் வாரிவழங்கும் தார்மிகனாக இருந்தாலும்ஒருவனை தர்மத்தின் பொருட்டு ப்ராம்மணனாக அறிய வாய்ப்பில்லை.

7. எல்லா ஆராய்ச்சிகளுக்கும் பின்னர்இன்னமும் யார்தான் ப்ராம்மணன் என்ற கேள்வி உடைபடாமலே நிற்பதை உணர முடிகிறது.

அப்படியானால், ப்ராம்மணன் என்பவன் யாரெனில்,

எவன் ஒருவன்-

#இரண்டற்ற ஸச்சிதானந்த வடிவினனாய் ஆன்மாவை அனுபவித்து அறிபவனாயும், இவ்வான்மாவாகவே இருப்பவனாயும்

#ஜாதிகுணம்செயல் ஆகிய மூன்றும் அற்றவனாயும்,

#பிறப்பு, இருப்பு, வளர்வது, மலர்வது, மெலிவடைவது, இறப்பது முதலிய ஆறு மாற்றங்கள் அற்றவனாயும்,

#மூப்பு, மரணம், வியாதி, உலக மயக்கம், பசி, தாகம் ஆகிய ஆறு அலைகள் அற்றவனாயும்

#குற்றம், குறைகள் அற்றவனாயும்,

#ஸத்யம்ஞானம்ஆனந்தம்அனந்தம் என்ற வடிவுடையவனாகயும்,

#எல்லாக் கற்பனைகளுக்கும் ஆதாரமானாலும் ஒரு கற்பனையிலும் அடங்காதும்எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயக்குபவனாயும், 
#ஆகாயத்தைப் போல் உள்ளும்வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்த வடிவாயும்மனதிற்கெட்டாததாயும் அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியதான குணமுடையவனாகவும்,

#ப்ரகாசிக்கும் ஆன்ம வடிவினனாய் இருந்து, விருப்புவெறுப்பு முதலிய அற்றவனாயும்

#சமம்தமம் முதலிய தன் அடக்கங்களுடன் கூடிய அழுக்காறு, அவா, வெகுளி முதலியன நீங்கியவனாயும்,

#டம்பம்அகந்தை முதலியவற்றால் தொடப்படாதவனாயும்,

#வீடுபேறு எய்தத் தகுந்தவனாயும்-

இருக்கிறானோ அவனே ப்ராம்மணன்.

இது ஸ்ம்ருதிஸ்ருதிபுராணஇதிஹாஸங்களின் முடிவான கருத்து. இதற்குப் புறம்பாக ப்ராம்மணத் தன்மை இல்லவே இல்லை.

துணை நூல்கள்: 

உபநிஷத் ஸாரம் - அண்ணா
www.dharmicscriptures.org/VajraSuchika_Upanishad.doc

7.6.13

மே ஃகயால் ஹூம் கிஸி ஓரு கா - யாருடைய கற்பனையிலோ நானிருக்க.....

இந்தியா இரண்டாகப் பிரிந்த 1947ல் பானிப்பட்டில் பிறந்த சலீம் கௌஸர், இன்றைய மிகச் சிறந்த உர்தூக் கவிஞர். அவர் தன்னுடைய மிகப் பிரபலமான மே கயால் ஹூம் கிஸி ஓர் கா என்கிற கஸலை ஒரு முஷைராவில் வாசிக்கும் வீடியோக் காட்சியிது. அவரின் உர்தூ உச்சரிப்பு அந்த மொழி தெரிந்தவர்கள் மட்டுமன்றித் தெரியாதவர்களுக்கும் கூடத் தேன் போலக் காதில் பாய்கிறது. 

பாரதி சொல்லுவான்- சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்க வேண்டுமென்று. ஆனால் அவன் ஒருவேளை உர்தூக் கவிதைகள் வாசிக்கப்படுவதைக் கேட்டிருந்தால், தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டிருக்கக் கூடும். கீழேயுள்ள இணைப்பில் சலீம் கௌஸர் ஒரு கவிஞராக வாசிக்கும் கவிதை மொழிபெயர்ப்புக்குப் பின் எப்படி ஆன்மாவை உலுக்கும் அநுபவத்தைத் தருகிறது என்பதை உணர்ந்து ரசியுங்கள்.  
Main Khayaal Hun Kisi Aur Ka Mujhe Sochtaa koi aur hai
யாருடைய கற்பனையிலோ நானிருக்க
யாரையோ கற்பனை செய்தபடி இருக்கிறேன் நான்.

Sar-E-Aeenah Mera Aks Hai Pas-E -Aeenah Koi Aur Hai
வேறேதோ கண்ணாடி என்னைப் ப்ரதிபலிக்க்
என் கண்ணாடியில் வேறு யாருடைய ப்ரதிபலிப்போ

Main Kisi Ke Daste Talab Main Hoon, To Kisi Kay Harf-E -Dua Main Hoon
யாரோ ஒருவரின் விருப்பத்தின் கைகளில் நான்
யாரோ ஒருவரின் ப்ரார்த்தனைகளின் சொற்களாக நான்

Main Naseeb Hoon Kisi Aur Ka Mujhe Maangata Koi Aur Hain
யாரோடோ விதி என்னை இணைத்திருக்க
யாரோ எனைவேண்டிக் கெஞ்சியபடிக் கழிகின்றன நாட்கள்

Ajab Aitabar-O-Bey Aitabaree, Keh Darmayan Hai Zindagi
வாழ்க்கையோ நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும்
நடுவே தவிக்கிறது

Main Qareeb Hoon Kisi Aur Ke Mujhe Janataa Koi Aur Hain
யாரோ ஒருவருக்கு நெருக்கமாக நானிருக்கிறேன்
ஆனால் வேறு யாரோ என்னை நன்கறிந்தவராய் இருக்கிறார்கள்

Meri Roshni Teri Khaddo-Khaal Se Mukhtalif To Nahin Magar
என்னுடலின் ஜொலிப்பும் உன் கன்னத்து மச்சமும் வேறானதல்ல எனினும்

Tu Qareeb Aa Tujhe Dekh Lun Tu Whohi Hain Ya Koi Aur Hain
அருகே வா அது நீதானா அல்லது வேறு யாருமா என்று பார்க்கவேண்டும்

Tujhe Dushmanon Ki Khabar Nati, Mujhey doston ka pata nahi
நீயோ உன் எதிரிகளை அறிந்திருக்கவில்லை; நானோ என் நண்பர்களை அறிந்திருக்கவில்லை

Teri Daastan Koi Aur Thi, Mera Waaqaya Koi Aur Hai
உன் கதையில் வேறு யாரோ இருக்க, என் நிஜத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள்

Wohi Munsifon Ki Rwaayaten Wohi Faisalon Ki Ibaaraten
அந்த நீதிபதிகளின் விசாரணைகளும் தீர்ப்பும் ஒருபுறமிருக்க

Mera Jurm To Koi Aur Tha Par Meri Sazaa Koi Aur hain 
என் குற்றம் வேறேதோ அதற்கான தண்டனையும் வேறேதோ 

Kabhi Laut Aayen To Na Poochna, Nahin Dekhnaa Onay Ghaur Se
Jinhen Raaste Main Khabar Hoyi Ki Yain Raasta Koi Aur hain
வேறெங்கோ பாதை இருக்க, இதுவல்ல போகும் பாதை என்றுணர்ந்தவனை 
நீ சந்திப்பாயானால் அவனிடம் எதுவும் கேட்பதோ வலிந்து உற்றுப் பார்ப்பதோ வேண்டாம்

Jo Meri Riyaazat-E-Nim Shab Ko Saleem Subho Na Mil Saki 
என் நள்ளிரவுப் ப்ரார்த்தனைகளின் பலனும் உதயத்தில் கிட்டாதபோது

To Phir Is Ke Mahni Yain Hoye Ke Yahaan Khudaa Koi Aur Hain 
வேறு யாரோ ஒருவரே கடவுளாய் இருக்கக்கூடுமோ?

#########

சலீம் கௌஸரின் உர்தூவுக்கு இணையாக என் மொழிபெயர்ப்பு இருக்கமுடியாது. அது தவிர அரைகுறை ஹிந்தி ஞானம், ஒரு ஆஃப்கன் ப்ளாக்கில் கிடைத்த அரைகுறை ஆங்கில் மொழிபெயர்ப்பையும் படித்துக் கிடைத்த லாகிரியில் செய்த முயற்சி இது.

இந்த கஸலை கீழே பிரபலமான பல கஸல் பாடகர்கள் பல உருவங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள். இசையும் பொருளும் உச்சரிப்பும் வதைக்கிறது.   
நஸ்ரத் பஃடே அலி காஃன்.
மனதைத் துளைக்கும் சாரங்கியுடன், முன்னி பேகம் பாடும் இந்தப் பாடல் ”கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்” பாடலை மோஹன ராகத்தின் நிறங்களுடன் நினைவு படுத்துகிறது.
ஜகஜித்சிங்
ஹரிஹரன்
லலித் ராகத்தில் மெஹதி ஹஸன் பாடுகையில் கண்கள் பனிக்கின்றன.
மெஹதி ஹஸனின் மகன் தரீக் ஹஸன்.

நேரம் வாய்க்கும்போது, பொறுமையாய்க் கேட்டுவிட்டுக் கடந்து செல்லுங்கள். உங்கள் காலடியில் சமர்ப்பிக்கப்படும் இவை அத்தனையும் பொக்கிஷங்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...