போன இடுகையில் குறிப்பிட்டதைப் போல என் வாழ்வின் அடுத்த கட்டப் பயணமாக சென்னையை நேற்றிரவு-மழைத்துளிகள் தலையில் வீழ்ந்து ஆசீர்வதிக்க- அடைந்தேன்.
வாழ்க்கையை உற்று நோக்குதலும் எழுத்தும் என்னை இந்தக் கட்டம் வரை நகர்த்திக்கொண்டுவந்திருக்கிறது.
தன் கைகளுக்குள் பொதிந்து வைத்த ரகஸ்யமாய் என் எதிர்காலம் இருந்தாலும் விரல்களை மெல்ல மெல்லத் திறக்க நான் எத்தனிக்கும் தருணங்கள் அதை விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் மறைந்திருந்ததான ரஸவாதத்தை நிகழ்த்திக்காட்டும்.
வாழ்க்கையின் அத்தனை ரகஸ்யங்களும் புதிர்களும் என்றும் எழுதித் தீர்க்கப்படாததாகவே மொழியின் சக்தியை மீறியதாகவே எனக்குப் படுகிறது.
இதையும் தாண்டி ஒரு கலைஞன் தன் முயற்சிகளைத் தந்தபடியே பாய்மரத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பத் தன் பயணத்தைத் தொடர்கிறான்.
நான் எல்லாருடைய எழுத்துக்களையும் கடந்த ஐந்து நாட்களாக வாசிக்கத் தவறவிட்டிருக்கிறேன். நானும் எதுவும் எழுதவில்லை-முடியவில்லை.
என் முயற்சிகளின் சுவடுகள் தயக்கங்களைக் கடந்து பதிய எத்தனிக்கும் கணத்தில் நான் தொடர்ந்து இடைவெளியற்று மறுபடியும் எழுத நேரிடும். எழுதாமல் இருப்பதன் வலியைக் கதறும் குழந்தைக்குப் பால் புகட்டமுடியாது தவிக்கும் ஒரு தாய் உணரக்கூடும்.
சென்னையை விட்டுச் சென்று கிட்டத்தட்ட 17 வருடங்கள் தந்த இனிமையான அனுபவங்களின் துணையோடு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மெழுகாய்த் திரும்பியிருக்கிறேன்.
வாழ்க்கையை உற்று நோக்குதலும் எழுத்தும் என்னை இந்தக் கட்டம் வரை நகர்த்திக்கொண்டுவந்திருக்கிறது.
தன் கைகளுக்குள் பொதிந்து வைத்த ரகஸ்யமாய் என் எதிர்காலம் இருந்தாலும் விரல்களை மெல்ல மெல்லத் திறக்க நான் எத்தனிக்கும் தருணங்கள் அதை விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் மறைந்திருந்ததான ரஸவாதத்தை நிகழ்த்திக்காட்டும்.
வாழ்க்கையின் அத்தனை ரகஸ்யங்களும் புதிர்களும் என்றும் எழுதித் தீர்க்கப்படாததாகவே மொழியின் சக்தியை மீறியதாகவே எனக்குப் படுகிறது.
இதையும் தாண்டி ஒரு கலைஞன் தன் முயற்சிகளைத் தந்தபடியே பாய்மரத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பத் தன் பயணத்தைத் தொடர்கிறான்.
நான் எல்லாருடைய எழுத்துக்களையும் கடந்த ஐந்து நாட்களாக வாசிக்கத் தவறவிட்டிருக்கிறேன். நானும் எதுவும் எழுதவில்லை-முடியவில்லை.
என் முயற்சிகளின் சுவடுகள் தயக்கங்களைக் கடந்து பதிய எத்தனிக்கும் கணத்தில் நான் தொடர்ந்து இடைவெளியற்று மறுபடியும் எழுத நேரிடும். எழுதாமல் இருப்பதன் வலியைக் கதறும் குழந்தைக்குப் பால் புகட்டமுடியாது தவிக்கும் ஒரு தாய் உணரக்கூடும்.
வாராவாரம் என் குடும்பத்தின் பிரிவைச் சுமந்தபடி நான் மேற்கொள்ளவிருக்கும் இந்த இடைவெளியை ஆதரிப்பீர்கள் என்ற நப்பாசையுடன் கையசைக்கிறேன்.