9.7.11
தெரு
1.
இதே தெருவில்தான்
அவளும் நானும்
இருந்தோம்.
இதே தெருவில்தான்
இப்போது
அவளும் நானும்
இல்லாதிருக்க
வேறு யாருடனோ
இருக்கிறது தெரு.
2.
அந்தக்
கம்பத்திலிருந்து
விழுந்துதான்
என்
கை ஒடிந்தது.
இந்த வீட்டில்தான்
தாத்தா இறுதிவார்த்தை
உதிர்த்தது.
இந்தக்
குளத்தில்தான்
பாம்பைப் பிடித்து
கழுத்தில்
போட்டுக்கொண்டது.
இந்தக் கோயில்
சன்னதியில்தான்
முதல் முத்தத்தை
அவளிடம் பறித்தது.
விட்டுச்
செல்கையில்
இம்மரத்தடியில்தான்
கண்ணீர் சிந்தியது.
3.
எனக்கான தெரு
என்னோடு தொலைந்தது.
உனக்கான தெரு
உன்னோடு தொலைந்தது.
யாருக்காகவும்
தெரு தனியே
காத்திருப்பதில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தனியே ஒரு கரித்துண்டு
தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...
-
தனக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களையும் பற்றித் தனிப்பட்ட முறையில் ஓஷோ பேசிய உரைகளின் தொகுப்பு இவை. ”நான் நேசி...
-
1. அலைகள் நினைவுறுத்துகின்றன விடாது கேட்கப்படும் கேள்விகளின் இரைச்சலை. கரை நினைவுறுத்துகிறது ஒருபோதும் கேட்கப்படாத கேள்விகளின் நிசப்தத்தை. 2...
28 கருத்துகள்:
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே....அருமை..
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
மனதை கவர்ந்த
மனம் லயித்த கவிதை அண்ணா
ஒரு தெருதான் ஆயினும்
அது ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களுக்கானதாய்
மாய உருவம் காட்டி
மௌனமாய் நிற்பதாகவும் கொள்ளலாமா?
ஸுப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அன்பு சுந்தர்ஜி,
நல்ல கவிதைகள்... தெருக்கள் கதைகளால் மேவப்படுகிறது... அதில் எல்லோருக்குமான பொதுமை கதைகள் அனேகம்... திரும்ப வாழ்தல் எல்லோருக்கும் சாத்தியம் ஆகிறது...
அதை இது போல கவிதையாக்குவது உங்களை போல சிலருக்கே வாய்க்கிறது சுந்தர்ஜி...
அற்புதமான வார்ப்பும்... படமும்... இத்தனை அழகியல் பார்வை என்று எனக்கு வாய்க்குமோ...
அன்புடன்
ராகவன்
மிகுந்த நெருக்கத்தை கொடுத்த கவிதை இது ஜி
தெருப்புகழ் கவிதை உயிரோட்டமாக இருந்தது....
தெரு யாருக்காகவும் தன் வசந்தத்தை இழப்பதில்லை...
கவிதைகள் அருமை... ஒவ்வோர் தெருவிலும் நினைவுகள் கொட்டிக் கிடக்கின்றன....
அவரவர்க்கான நினைவுகள் அவர்களுடனே.....
நாங்கள் UNEMPLOYED ஆக இருக்கும் போது,தெருவில் அமர்ந்து ‘சைட்’அடித்த பெண் பாட்டியாகி விட்டாள்... நானும் தாத்தாவாகி விட்டேன்!
இன்று என் பேத்தி நடக்க,
அவள் பேரன் அவன் நண்பர்களுடன்!!
- இன்னமும் மெளனமே ஒரு மெல்லிய சாட்சியாய்...
அதே தெரு!!!!
தெரு எப்போதும் அதன் சுயம் இழப்பதில்லை.. இந்தக் கவிதையைப் போல!
//எனக்கான தெரு
என்னோடு தொலைந்தது.
உனக்கான தெரு
உன்னோடு தொலைந்தது.
யாருக்காகவும்
தெரு தனியே
காத்திருப்பதில்லை.//
சத்தியம்.
"எல்லாம் தனித்தனியாக நடக்கிறது நாம்தான் அவறைக் கோர்த்துக் கொள்கிறோம்," என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு.
யானை பற்றிய உங்கள் கவிதையும் அருமையாக இருந்தது; பின்னூட்டம் இட ஆவல் கொண்டு திறந்தால் - இந்தக் காலத்திலுமா இப்படி! - ஏற்கெனவே இடப்பட்டிருந்த பின்னூட்டங்களின் - பால்மரத்துத் தூக்கியதாயினும் ஈற்றுக்கழிவு கழிவுதான் என - நெடி துரத்த ஒதுங்கிவிட்டேன், மன்னிக்கவும்.
கொசுவர்த்தி சுத்த வைக்கறீங்க ஜி . நன்றி
அன்பு சுந்தர் G உங்களின் கவிதைகள் நான் மட்டும் தான் விரும்பி படிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஓஹியோவிலிருந்து இங்கு கலிபோர்னியாவுக்கு வந்து பின் தான் தெரிகிறது இங்கும் உங்கள் விசிறி ஒருவர் இருக்கிறார்.அம்மா கைகள் அள்ளிய நீர் வாசிக்கிறீர்களா என்று கேட்கும் மகன். ஆச்சரியமாக இருந்தது. உடனே போன் போட்டு பாராட்டத் தோன்றுமாம் . இது வரை நான் பின்னூட்டம் இட்டதில்லை. நாகரத்தின பாம்பு, தெரு படித்த உடன் சொல்லணும் போல் தோன்றியது . வாழ்த்துக்கள்
நன்றி குணா. நினைவுகள் போல் சுமையானது எதுவுமில்லை.
எனக்கும் அப்படித்தான் தோன்றும் ரமணியண்ணா.ஒத்த அலைவரிசைக்கு மகிழ்ச்சி.
உங்கள் மனம் கவர்ந்த கவிதையை எழுத வைத்த அந்தக் கவிதைக்கு நன்றி ராஜு.
உங்களுடன் மிக நெருக்கத்தைக் கொடுக்கிறது இப்படிப்பட்ட வார்த்தைகள் வேல்கண்ணன்.
என்ன ராகவன்!ரொம்பல்லாம் என்னைத் திக்குமுக்காட வைக்கறீங்க? உங்கள் ஆழமும் அழகுணர்ச்சியும் எனக்குத் தெரியும்.
ஆனாலும் வெளிப்படையான பாராட்டுக்கு ஏங்கும் மனம் இப்படி ஒரு சக கலைஞன் வார்த்தைகளில் சந்தோஷத்தில் அங்கேயே செத்துவிட நினைக்கிறது.
அன்புக்கு ரொம்பவும் நன்றி ராகவன்.
நெடுநாட்கள் நெய்வேலியை விட்டு விலகி இருக்கும் உங்களை விடவா நான் சொல்லிவிடப் போகிறேன் வெங்கட்?
நன்றி பத்துஜி. என் தளத்தில் நீங்களும் இணைவது எனக்கு மகிழ்வாயும் பெருமையாகவும் இருக்கிறது.
நன்றி ரிஷபன்.சுயமான பாராட்டு.
எனக்கு உங்களைப் பார்க்க வரும்போது அந்தப் பாட்டியையும் பார்க்கும் ஆவல் உபரியாய் இப்போ.
நன்றி ஆர்.ஆர்.ஆர்.சார். மறக்கமாட்டேன்.
நெடி தாங்கமுடியலையோ எல்.கே. பொறுத்துக்கோங்க.
உங்கள் வருகை இப்போதெல்லாம் அத்திப்பூவை நினைவு படுத்துகிறது ராஜு அண்ணா.
உங்களுக்குத்தான் ஈற்றுக் கழிவு.எனக்கல்ல.வரிசையில் மேலானாலும் கீழானாலும் உங்கள் வார்த்தைகள் எப்போதுமே மேல்தான் அண்ணா.
அடிக்கடி வாருங்கள்.
நன்றி மஹிம்மா. இப்படிக் கூப்பிடலாமில்லையா?
ராகவனின் தளத்தில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது எண்ணிக்கொள்வேன் நாம் எழுதும் எழுத்து அத்தனை சிலாக்கியமில்லை போல என்று.
இன்று பால் பாயசம் பருகிய ஒரு விசேஷ நாள் போல் என் தளம் நிறைவடைந்தது உங்கள் வார்த்தைகளால்.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் மனதுக்கு நிறைவளிப்பது போல எழுதுவேன் தொடர்ந்து.
//எனக்கான தெரு
என்னோடு தொலைந்தது.
உனக்கான தெரு
உன்னோடு தொலைந்தது.
யாருக்காகவும்
தெரு தனியே
காத்திருப்பதில்லை//
சொற்களில் எளிமை -எடுத்து
சொல்வதோ இனிமை
நற்கவி தந்தீர்-தெருவில்
நடந்துநீர் வந்தீர்
நன்றி
புலவர் சா இரமாநுசம்
நன்றி ராமாநுசம் ஐயா.உங்கள் ஊக்கம் என்னுடைய ஆக்கம்.
அருமையான கவிதைகள். ஒவ்வொருவருக்கும் அவரவர் தெருவின் நினைவுகள் ஆயிரமிருக்கும்.....
நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நான் வசித்த சில இடங்களுக்குப் போய் மிகவும் ஏமாற்றமடைந்து திரும்பி, மறுபடியும் எண்ணக்களிலேயே வாழ நேரும் என் போன்றோருக்கு மனம் லயிக்க வைக்கும் கவிதை. பாராட்டுக்கள் சுந்தர்ஜி.
கருத்துரையிடுக