தொன்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொன்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.8.13

மந்திரத்தில் தோய்ந்த மலர்கள்

இன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்வீகமாக நிறைக்கும் மந்திர புஷ்பங்களைப் பற்றித்தான்.

யஜுர் வேதத்தைச் சார்ந்த தைத்ரீய ஆரண்யகம் (1.22) இந்த மந்திர புஷ்பத்தைக் கொண்டிருக்கிறது.   

மந்திரமெனும் தேனில் தோய்ந்த இம்மலர்களின் பொருளை அறியும் போது, நம் ப்ரார்த்தனைகளின் தொன்மை கவித்வமான அழகும், பொருளும் கொண்டதாகவும், இயற்கையை வணங்கி, அதனுடன் இணைந்து அதன் மடியில் தவழ்வதாகவும் இருக்கிறது.

“ நிலவே நீரின் மலர்” என்று முதலாம் ச்லோகத்தில் துவங்கும் வசீகரம் கிளர்த்துகிறது; கவிதையின் வேர் கிளை பரப்பி, ப்ரார்த்தனையாக வடிவெடுத்து மயக்கும் மாயம்; 

மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம்; ஆனால் நீரே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று உறுதியாய்ச் சொல்லி முடிக்கிறது.

ஒன்பதாவது ச்லோகத்தில், ஓடத்தால் கடக்க அறிவுறுத்தும் கட்டத்தின் மூலம் அந்த இயற்கையை வணங்கி அதன் அடுத்த தளமான இவை அத்தனையையும் உருவாக்கிக் காக்கும் இறையை அடையும் முயற்சிக்கு ஆதி மனிதனைக் கொண்டு செல்கிறது.

செல்வத்துக்கு அதிபதியான குபேரனை வணங்கும் பத்தாவது ச்லோகத்துடன் மந்திர புஷ்பம் எனும் நறுமணம் வீசும் மலர்கள் இறைவனின் பாதங்களில் சேர்க்கப்படுகின்றன.   
இனி மந்திர புஷ்பத்தின் அந்த 10 ச்லோகங்கள்.

மந்திர புஷ்பம்

”ஓம் பத்ரம் கர்ணேபி” எனும் சாந்தி பாடத்துடன் துவங்குகிறது மந்திர புஷ்பம்.       (சாந்தி பாடம் குறித்த பதிவு அடுத்த சில நாட்களில் எழுதுகிறேன்)

ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத  (1)

யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத  (2)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (3)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)

யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (4)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (5)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5) 

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (6)


யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (7)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)

யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (8)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)

யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி  (9)

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9) 

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம:  (10)

தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள். 

ஓம் பத்ரம் கர்ணேபி.....(எனும் சாந்தி பாடத்துடன் நிறையும்)



ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி

உதவியவை:

அண்ணா/ஸ்வாமி ஆசுதோஷானந்தர் - “வேத மந்திரங்கள்”.

18.7.13

பிக்ஷு ஸுக்தம் - கொடையின் மேன்மையான பாடல்

அங்கிரஸ ரிஷியின் புதல்வனான பிக்ஷுவின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஸுக்தம் ரிக் வேதத்தைச் சேர்ந்தது.

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் 117ஆவது பாகத்தில் அமைந்திருக்கும் ஒன்பது ச்லோகங்களும் கொடையின், பரந்த மனப்பான்மையின், பொதுநலத்தின், தானத்தின் மேன்மையை உலகுக்குச் சொன்ன ஆதிமனிதனின் கவிதைகள்.

கொடையின் சிறப்புக்கென்றே கர்ணன் தொடங்கி நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் நிழலாய் இன்றும் நம் கதைகளில் வாழும் மன்னர்களையும், கடையெழு வள்ளல்களையும் நாம் தொந்தரவு செய்ய வேண்டாம். விட்டுவிடுவோம்.

வீடு தேடி வரும் அடியார்க்கு உணவளித்த பின்னே உணவருந்தியவர்களும், விலங்குகள் தங்கள் முதுகைச் சொறிந்து கொள்வதற்கென நடுகல் நட்டவர்களும், தினமும் காக்கைகளுக்கு அன்னம் அளித்த பின் உண்டவர்களும், பூனை- நாய்களுக்கு உணவும், குருவிகளுக்குக் கைப்பிடி தானியமும், அரிசியும் - உளுந்தும் களைந்த கழுநீரை மாடுகளுக்கு அளித்தோரும் கலங்கிய படமாய்ச் சற்றைக்கு முன்னே வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள். நம் கையெட்டும் தொலைவில் பொதுநலத்தின் மணம் வீசும் உதாரணங்கள்.

அரிசி மாவினால் இடப் பட்ட கோலங்களின் வாயிலாக எறும்புகளுக்கு உணவளிப்பதில் துவங்கிய ஒவ்வொரு புதிய நாளும், காக்கைக்கு அளிக்கும் உணவில் கிளைவிட்டு, இரவு நேரங்களில் பசியுடன் திரியும் யாசகர்களின் பசியின் முள்ளை நீக்குவது வரையும் அவர்களின் பரந்த மனம் கொடுத்தலின் தாரையாக, இரக்க குணத்தின் ஊற்றுவாயாக இருந்து வந்தது.

இரு தலைமுறைகளுக்கு முன்னே இரவு பசியுடன் ”அம்மா! வயிறு பசிக்குதம்மா! பிச்சை போடுங்கம்மா!” என்று எல்லாத் தெருக்களிலும் ஒலித்த குரல்கள் காற்றோடு தேய்ந்து போய்விட்டதன் காரணம் வளமை இல்லை. மனிதாபிமானம் தேய்ந்து போனமைதான். அப்படி ஒலித்த குரல்கள் யாசித்தலை விடுத்துத் தாங்களாகவே எடுத்துக்கொள்ளத் துவங்கிவிட்டன. இதைப் பெருகி வரும் குற்றங்கள் நிரூபிக்கின்றன. கொடுப்பவன் அற்றுப்போனபின் பெறுபவன் எங்கிருப்பான்?

தனி வீடுகளில் இருந்த மனிதன் அடுக்குவீடுகளுக்குள் மறைந்து, கதவுகளால் தனக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பைச் சாதகமாக தீர்த்துக் கொண்டுவிட்டான். பரந்து விரிந்த மனங்கள், குறுகி உயர்ந்த கட்டிடங்களில் குடிபுகுந்த பின் கொடையின் விரல் தொடாத நாணயங்கள் அதல பாதாளத்தில் புதைந்து கிடக்கின்றன.

நமது தொன்மையான சிந்தனை வளத்தின் வேர்களில் இருந்து இப்போது கிளை பரப்பி நிற்கும் மரத்தின் நிழல் நம் கால்களையும், மனதையும் பொசுக்குவதாக இருக்கிறது.

ஊன்றப்பட்ட நல்வித்திலிருந்து கிளம்பிய இந்தப் பாரம்பர்யமான மரத்தின், பட்ட மரத் தன்மை மனதின் சுவர்களில் ஏக்கத்தை உண்டுபண்ணுகிறது.

பொன்னுக்கு நிகரான இந்த ஒன்பது ச்லோகங்களின் சிந்தனைகளும் நாளைய மனிதனை மனதை வளப்படுத்தட்டும். இறைவா! எம் மனங்களில் மீண்டும் கொடையின் மழை பெருக்கெடுக்கத் துணை செய்.

பிக்ஷு ஸுக்தம்:

1.
ஓம். 
ந வா உ தேவா: க்ஷுதமித்வம் ததுருதாசிதமுப கச்சந்தி ம்ருத்யவ: 
உதோ ரயி: ப்ருணதோ நோப தஸ்யத்யுதாப்ருணன் மடிர்தாரம் ந விந்ததே

பசியை மரணத்துக்குரிய காரணமாக தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாக உண்பவர்களையும் மரணம் உண்கிறது. தவிர, கொடுப்பவனுக்குச் செல்வம் குறைவதில்லை. கொடுக்காதவனோ தேற்றுவார் அற்றுத் துன்புறுவான். 

2.
ய ஆத்ராய சகமானாய பித்வோன்னவான் ஸன் ரஃபிதாயோபஜக்முஷே
ஸ்திரம் மன: க்ருணுதே ஸேவதே புரோதோ சித்ஸ மர்டிதாரம் ந விந்ததே

எவனொருவன் ஏராளமான உணவு படைத்தவனாய் இருந்தும், உணவு தேவைப்படும் பலவீனர்களுக்கும், உதவி நாடி வரும் தீனர்களுக்கும், மனதைக் கல்லாக்கி உதவ மறுத்து, அவர்களுக்கு முன்னாலேயே உண்டு மகிழ்கிறானோ, அவன் தேற்றுவார் அற்றுத் துன்புறுவான்.   

3.
ஸ இக்போஜோ யோ க்ருஹவே ததாத்யன்னகாமாய சரதே க்ருசாய
அரமஸ்மை பவதி யாமஹூதா உதாபரிஷுக்ருணுதே ஸகாயம்

பலவீனமுற்று உணவைத் தேடி வருபவனுக்கு யார் உடனடியாக உணவளிக்கிறானோ அவனே வள்ளல். அவனுக்கு ஏராளமான வெகுமதிகள் காத்திருக்கின்றன. பகைவர்களிடமும் அவன் நட்பை விதைக்கிறான்.    

4.
ந ஸ ஸகா யோ ந ததாதி ஸக்யே ஸசாபுவே ஸசமானாய பித்வ:
அபாஸ்மாத் ப்ரேயான்ன ததோகோ அஸ்தி ப்ருணந்தமன்யமரணம் சிதித்சேத்

தன் நண்பனுக்கோ, கூடவே இருப்பவனுக்கோ, முன்பு உதவியவனுக்கோ  எவனொருவன் கொடுப்பதில்லையோ அவன் நண்பன் அல்லன்; அவனைத் துறந்து விடுதல் நலம். அந்த வீடு வீடல்ல. கொடுக்க வல்ல வேறொருவரை அவன் நாடட்டும்.

5.
ப்ருணீயாதின்னாதமானாய தவ்யான் த்ராகீயாம்ஸமனு பச்யேதே பந்தாம்
ஓ ஹி வர்த்தந்தே ரத்யேவ சக்ராண்யன்யமன்யமுப திஷ்டந்த ராய:

நிதி மிகுந்தவன் கட்டாயமாக வறியவனுக்குக் கொடுக்க வேண்டும். தொலைநோக்குள்ள வழிகளை எண்ணிச் செல்வத்தைப் பெருக்க முயலவேண்டும். ஏனெனில், சுழலும் ரதத்தின் சக்கரங்களைப் போல் ஒருவரிலிருந்து மற்றொருவருக்குச் செல்வம் மாறி மாறிச் செல்கிறது.

6.
மோகமன்னம் விந்ததே அப்ரசேதா ஸத்யம் ப்ரவீமி வத இத்ஸ தஸ்ய
நார்யமணம் புஷ்யதி நோ ஸகாயம் கேவலாகோ பவதி கேவலாதீ

அழியக்கூடிய உணவைப் பகிராமல் மூடன் ஆசையினால் சேமிக்கிறான்; அது அவனுக்கு அழிவையே கொடுக்கும் - இது சத்தியம். இறைவனுக்கு அர்ப்பணிக்காமலோ, நண்பனுடன் பகிராமலோ தான் மட்டும் உண்பவன் பாவியாகவே ஆகிறான்.

7.
க்ருஷன்னித் ஃபால ஆசிதம் க்ருணோதி யன்னத்வானமப வ்ருங்க்தே சரித்ரை:
வதன் ப்ரஹ்மாவததோ வனீயான் ப்ருணன்னாபிரப்ருணந்தமபி ஷ்யாத்

விவசாயிக்குக் கலப்பை உணவளிக்கிறது; பயணங்களாலும் உழைப்பாலும் ஒருவன் பொருளீட்டுகிறான். வெறுமனே இருப்பவனை விடச் சாத்திரங்களை எடுத்துரைப்பவன் உயர்ந்தவன். கொடுக்க வல்லவன் கொடுப்பதற்கு எதுவுமற்றவன் அருகே இருக்கவேண்டும்.   

8.
ஏக பாத்பூயோ த்விபதோ விசக்ரமே த்விபாத் த்ரிபாதமப்யேதி பச்சாத்
சதுஷ்பாதேதி த்விபதாமபிஸ்வரே ஸம்பச்யன் பங்க்தீருபதிஷ்ட்டமான:  

இரு மடங்கு செல்வம் உள்ளவன் ஒரு மடங்கு செல்வம் உள்ளவனை விரைந்து கடந்து, மூன்று மடங்கு உள்ளவன் பின் செல்கிறான். நான்கு மடங்கு செல்வம் பெற்றவன் இரண்டு மடங்கு செல்வமுள்ளவன் விட்டுச் சென்ற பாதையை உற்றுக் கவனித்துப் பின் கடந்து செல்கிறான்.  

9.
ஸமௌ சித்தஸ்தௌ ந ஸமம் விவிஷ்ட்ட: ஸம்மாதரா சின்ன ஸமம் துஹாதே
யமயோச்சின்ன ஸமாவீர்யாணி ஜ்ஞாதீ சித் ஸந்தௌ ந ஸமம் ப்ருணீத:

கைகள் இரண்டும் ஒன்றாய்த் தோற்றமளித்தாலும் சம ஆற்றலுடன் இருப்பதில்லை;  ஒரே பசுவிற்குப் பிறந்த இரு பசுக்கள் சமமாய்ப் பால் தருவதில்லை; இரட்டையராய்ப் பிறந்திருந்தாலும் சம ஆற்றலுடன் இருப்பதில்லை; ஒரே பெற்றோரின் இரு பிள்ளைகள் ஒத்த தர்ம சிந்தனையோடு இருப்பதில்லை.  


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(வேத மந்திரங்கள் அனைத்தின் இறுதியிலும் மும்முறை சாந்தியுடன் நிறைவடைவதைக் காணலாம். சாந்தி என்றால் அமைதி. மூன்று விதமான துன்பங்களிலிருந்து நாம் அமைதி பெறுவதற்காக மூன்று முறை வேண்டப் படுகிறது.

1. அத்யாத்மிகம் ( நம்மால் நமக்கு நேரும் துன்பம்). 2. ஆதிபௌதீகம் (பிற சூழல்களால் நமக்கு உண்டாகும் துன்பம்) 3. ஆதிதைவிகம் (தெய்வ சக்திகளால் வரும் துன்பம்)

உதவியவை:
வேத மந்திரங்கள் - சுவாமி அசுதோஷானந்தர்
www.sanskritdocuments.com
www.sacred-texts.com

9.6.13

வஜ்ர ஸூசிகா உபநிஷத் - யார் ப்ராம்மணன்?


வஜ்ர ஸூசிகா உபநிஷத் ஆஞ்சனேயருக்கு ராமபிரான் உபதேசித்த 108 உபநிஷத்துக்களில் 38வது.

ஸாம வேதத்தைச் சேர்ந்தது வஜ்ர ஸூசிகா உபநிஷத். வஜ்ரம் என்றால் வைரம். ஸூசிகா என்றால் ஊசி. அஞ்ஞானம் எனும் இருளை, கடினமான தாதுப்பொருட்களில் துவாரம் இட்டுச் செல்லும் வைரஊசி இந்த உபநிஷத்.

மெய்யறிவு பெற்றவர்களுக்கு இவ்வுபநிஷத் ஓர் அணிகலன் போலவும், அற்றவர்களுக்குக் கண்களைத் திறக்கும் ஞானமாகவும் அமைகிறது.

உபநிஷத்துக்களில் வைர ஊசி போல விளங்கும் இந்த உபநிஷத் யார் பிராம்மணன்? என்ற பொருளை ஊடுருவித் தைக்கிறது.

ப்ராம்மணன் என்பவன் யார்? 

அவன் ஜீவனா? தேகமா? ஜாதியா? ஞானமா? கர்மமா? தர்மமா? என்ற ஆராய்ச்சியை முன் வைக்கிறது.

1. ஜீவன் ப்ராம்மணன் என்று கருத முடியாது. கடந்ததும், கடக்க இருப்பதுமான பல உடல்களில் ஜீவன் ஒரே வடிவம் உடையதாலும், கர்மத்தின் பலனால் பல உடல்கள் பெறுவதாலும், எல்லா உயிர்களிலும் ஜீவன் ஒரே மாதிரியாய் இருப்பதாலும் ஜீவனை ப்ராம்மணன் என்று கருதுவதற்கில்லை.

2. பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் பிறப்பெடுக்கும் அனைவருக்கும் பொதுவானதாகவும், மூப்பு முதல் மரணம் வரை தர்ம அதர்மங்கள் சமமானதாகவும், தோலின் நிறத்தால் பாகுபடுத்த முடியாததாகவும் இருக்கிறது. ஒரு ப்ராம்மணத் தந்தையை தகனம் செய்யும் புத்திரனுக்கு ப்ரும்மஹத்தி எனும் தோஷம் பீடிக்காமையாலும் உடலை ப்ராம்மணன் என்று கருத முடியாது.

3. மஹரிஷிகளான ஹ்ருஷ்யஷ்ருங்கர் மானிடமும், கௌஷிகர் தர்ப்பையிலும், ஜாம்பூகர் நரியிடமும், வால்மீகி புற்றில் இருந்தும், வ்யாஸர் செம்படவப் பெண்ணிடமும், கௌதமர் முயலிடமும், வஸிஷ்டர் ஊர்வசியிடமும், அகஸ்தியர் கும்பத்திலிருந்தும் தோன்றியவர்கள். இதுபோலவே பிறவியில்லாமலே ஆதியில் ஞானமடைந்த ரிஷிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆகவே ஜாதியால் ஒருவனை ப்ராம்மணன் என்று கருத வாய்ப்பில்லை.

4. க்ஷத்ரியர்களில் ஞான தரிசனம் பெற்ற ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆகையால், அறிவாலோ ஞானத்தாலோ ஒருவனை ப்ராம்மணனாகக் கருத இயலாது.        

5. எல்லா உயிர்களுக்கும் ஊழ்வினை, தொல்வினை, வருவினை போன்ற கர்மங்கள் பொதுவாகக் காணப்படுவதால், முந்தைய வினையின் விளைவுகளாலேயே தூண்டப்பட்டுச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுகொண்டு, கர்மத்தாலும் ஒருவன் ப்ராம்மணனாக மாட்டான்.

6. க்ஷத்ரியர்களிலும், வைசியர்களிலும் தான தர்மங்களில் மேலானவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். பொன்னையும், பொருளையும் வாரிவழங்கும் தார்மிகனாக இருந்தாலும், ஒருவனை தர்மத்தின் பொருட்டு ப்ராம்மணனாக அறிய வாய்ப்பில்லை.

7. எல்லா ஆராய்ச்சிகளுக்கும் பின்னர், இன்னமும் யார்தான் ப்ராம்மணன் என்ற கேள்வி உடைபடாமலே நிற்பதை உணர முடிகிறது.

அப்படியானால், ப்ராம்மணன் என்பவன் யாரெனில்,

எவன் ஒருவன்-

#இரண்டற்ற ஸச்சிதானந்த வடிவினனாய் ஆன்மாவை அனுபவித்து அறிபவனாயும், இவ்வான்மாவாகவே இருப்பவனாயும், 

#ஜாதி, குணம், செயல் ஆகிய மூன்றும் அற்றவனாயும்,

#பிறப்பு, இருப்பு, வளர்வது, மலர்வது, மெலிவடைவது, இறப்பது முதலிய ஆறு மாற்றங்கள் அற்றவனாயும்,

#மூப்பு, மரணம், வியாதி, உலக மயக்கம், பசி, தாகம் ஆகிய ஆறு அலைகள் அற்றவனாயும், 

#குற்றம், குறைகள் அற்றவனாயும்,

#ஸத்யம், ஞானம், ஆனந்தம், அனந்தம் என்ற வடிவுடையவனாகயும்,

#எல்லாக் கற்பனைகளுக்கும் ஆதாரமானாலும் ஒரு கற்பனையிலும் அடங்காதும், எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயக்குபவனாயும், 
#ஆகாயத்தைப் போல் உள்ளும், வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்த வடிவாயும், மனதிற்கெட்டாததாயும் அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியதான குணமுடையவனாகவும்,

#ப்ரகாசிக்கும் ஆன்ம வடிவினனாய் இருந்து, விருப்பு, வெறுப்பு முதலிய அற்றவனாயும், 

#சமம், தமம் முதலிய தன் அடக்கங்களுடன் கூடிய அழுக்காறு, அவா, வெகுளி முதலியன நீங்கியவனாயும்,

#டம்பம், அகந்தை முதலியவற்றால் தொடப்படாதவனாயும்,

#வீடுபேறு எய்தத் தகுந்தவனாயும்-

இருக்கிறானோ அவனே ப்ராம்மணன்.

இது ஸ்ம்ருதி, ஸ்ருதி, புராண, இதிஹாஸங்களின் முடிவான கருத்து. இதற்குப் புறம்பாக ப்ராம்மணத் தன்மை இல்லவே இல்லை.

துணை நூல்கள்: 

உபநிஷத் ஸாரம் - அண்ணா
www.dharmicscriptures.org/VajraSuchika_Upanishad.doc‎

30.5.13

பவானி அஷ்டகம் - ஆதி சங்கரர்

இந்த உலகுக்கே ஆன்ம குருவாய்த் திகழ்ந்த ஆதிசங்கரர் இயற்றிய இன்னொரு பொக்கிஷம் இது.

பொதுவாகவே சங்கரரின் அத்வைத வேதாந்தங்களைப் புரிந்து கொள்ளப் பெரிய பயிற்சி தேவையில்லாத அளவுக்கு, மிகவும் கனமான விஷயங்களை எளிமையான மொழியில் நமக்குத் தந்திருக்கிறார். 

அந்த உண்மைகளையும் அறிந்து கொள்வது கஷ்டம் என உணரும் என் போன்றோருக்காகவும், இது போன்ற தோத்திரப் பாடல்கள் மூலமாக மனம் கரையும் படி அந்த இறைவனிடம் உருகிய அந்த மனம் வடித்த கருணையின் உருவங்கள் இவை.

சத்தியத்தின் உருவமான, கடவுளின் வடிவமான சங்கரரின் ப்ரார்த்தனை இத்தகையதாக இருக்குமானால், உடலாலும், மனத்தாலும் அகங்காரமும் செருக்கும் பொறாமையும் பேராசையும் காமமும் ஒருங்கே அமையப் பெற்ற என் போன்றவர்களின் ப்ரார்த்தனையின் மொழி என்னவாக இருக்கும்?

தான் இன்னதென்று வகைப்படுத்த வழியற்ற இந்தக் கடையனின் ப்ரார்த்தனையைப், பெருகும் கண்ணீரின் மூலம்தான் பவானியின் பாதங்களில் அர்ச்சிக்கமுடியும்.

இனி, பவானியின் பாதங்களில் அர்ச்சிக்கப்படும் மலர்களாக இந்தச் சரணாகதியின் மேன்மையான கீதம். மேலே இணைத்திருக்கும் யூட்யூப் இணையத்தின் பாடலுடன் இந்தப் பதிவைக் கடக்கும்போது, மனதின் தடதடப்பைத் தவிர்ப்பது கடினமாகவே இருக்குமென நினைக்கிறேன்.

இந்த உருவாக்கத்தில் இருக்கும் பிழைகளைச சான்றோர் பொறுத்து திருத்தக் கோருகிறேன்.

பவானி அஷ்டகம்
1. 
ந தாதோ, ந மாதா, ந பந்துர் ந தாதா,
ந புத்ரோ, ந புத்ரீ, ந ப்ரத்யோ, ந பர்த்தா,
ந ஜாயா ந வித்யா, ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

தாய்தந்தை இல்லை; சுற்றம் நட்பில்லை;
பெண்பிள்ளை, பதியில்லை; மனையாளும் இல்லை;
அறிவு, தொழில் இல்லை; எதுவும் புகல் இல்லை;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

2
பவாப்தா வபாரே மஹாதுக்க பீரு
ப்ர-பாத ப்ர-காமி ப்ர-லோபி ப்ர-மத்த
கு-சம்சார பாஷ ப்ர-பத்தா ஸதாகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

கடலில் ஓர் துரும்பெனவே துயர் சூழ்ந்த கோழை;
காமமும் பாவமும் போதையும் பாதை;
ஆசை, பொறாமையால் கட்டுண்ட பேதை
காப்பாய் பவானீ!என்றென்றும் புகல் நீ.
3
ந ஜானாமி தானம்; ந ச த்யான யோகம்;
ந ஜானாமி தந்ரம்; ந ச ஸ்தோத்ர மந்ரம்;
ந ஜானாமி பூஜாம்; ந ச ந்யாஸ யோகம்;
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

ஈகைவழி அறியேன்; தியானமும் அறியேன்;
தந்திரம் தோத்திரம் மந்திரமும் அறியேன்;   
தொழுவதும் அறியேன்; யோகமும் அறியேன்.
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

4
ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கடாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாதர்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

புண்ணியம் பாவங்கள் தீர்த்தங்கள் அறியேன்;
முக்தித் தலங்கள், உளம் ஒன்றல் அறியேன்;
பக்தி மார்க்கங்கள் விரதங்கள் அறியேன்;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

5
கு கர்மீ, கு சங்கீ, கு புத்தி: கு தாஸ:
குலாசார ஹீன: கதாசார லீன:
கு த்ருஷ்டி:கு வாக்ய ப்ரபந்த: சதாகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

தீது என் செயல், சேர்க்கை எண்ணங்கள் யாவும்
தீது என் குலப்பாதை;  நடத்தையும் தீதே;
தீது என் நோக்கு, வாக்கு, எழுத்தெல்லாம் ;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

6
ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிஷீதேஷ்வரம் வா கடாசித்
ந ஜானாமி சான்யத் ஸதாகம் ஷரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

ஆக்குவோன் காப்போன் அழிப்போனை அறியேன்;
ஞாயிறும் திங்களும் வேறாரும் அறியேன்;
உன் பதங்களன்றியே அரண் வேறு அறியேன்.
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

 7
விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே சா னலே பர்வதே ஷத்ரு மத்யே
அரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹீ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

சர்ச்சை, துயர், மதி மயக்கம், கண்டங்கள் நடுவே
நெடும் பயணம், நீர், நெருப்பு, காடு, மலை எதிலும்,
சூழும் பகை தாழும் வகை ஒருபோதுமின்றிக்
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.
 8
அனாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹாக்ஷீண தீன: ஸதா ஜாட்ய வக்த்ரா
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரனஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

நாதியற்ற ஏழை; மூப்புற்ற ரோகி;
வலுவற்றுச் சோர்ந்தேன்; இழிநிலை சேர்ந்தேன்;
வினையுற்று வழியற்ற பெரும்பாவி என்னைக்   
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...