6.2.15

மீண்டும் உங்கள் முன்னே-
=========================
வலைப்பூவின் உதவியாலேயே தரமான எழுத்தையும், ரசனையையும் சந்திக்க நேர்ந்தது. பல நேர்த்தியான எழுத்துகள் அறிமுகமான சூழல். அதன் கிறக்கம் இன்னமும் தீரவில்லை. என் முதல் காதல் இன்னமும் வலைப்பூதான்.

இத்தனை நாள் முகநூலில் எழுதிய பின்னாலும் 2008 முதல் எழுதி வந்த என் வலைப்பூ வற்றிக் கிடப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இனி நான் இங்கு ஏற்றும் ஊதுவத்திகளில் ஒன்று முகநூலிலும் இருக்கும்.

என்னை இன்னமும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் என் காலடிகளைப் பதிக்கிறேன்.

அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பு.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வருக... தொடர்க... வாழ்த்துக்கள்...

நிலாமகள் சொன்னது…

இன்றுதான்... இப்போதுதான்....

எப்படி விடுபட்டது கண்ணில் பட?!

நானும் எப்போதேனும் வரும் இடைவெளியால் இருக்கலாம்...

நலம் தானே ஜி?!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...