1962ல் வெளியான ஆந்தை அலறும் பாலத்தில் ஓர் நிகழ்வு ( An Occurence at Owl Creek Bridge) ஃப்ரென்ச் இயக்குனர் ராபெர்ட் என்ரிகோ (Robert Enrico)வால் இயக்கப்பட்டு, கான் சர்வதேசத் திரைப்பட விழா விருதையும், அகாதமி விருதையும் வென்றது.
ஒற்றைக் கழுகின் அலறல் - அந்த ராணுவ வீரர்களின் எந்திர கதியிலான உத்தரவுகள் எதிரொலிக்கும் பின்னணியில் 30 நிமிடங்களும் ஒரு யுகமாய் நீளும் அந்தக் கைதியின் இறுதி நொடிகள்.
பாலத்துக்குக் குண்டு வைத்த புரட்சியாளர்களில் ஒருவன் என்று குற்றம் சுமத்தப்பட்டவனின் உயிரின் பரிதவிப்பு கண்களையும் , மனதையும் கலங்கச் செய்கிறது.
தூக்குக் கயிறு அறுந்து தப்பிச் செல்லும் நிமிடங்களில் அந்தக் கைதியாக நம் ஒவ்வொருவரையும் மாறச் செய்து பதைபதைக்க வைக்கிறது ஹோஜே ஷாத்தேவின் ( Roger Jacquet ) நடிப்பும், இயக்குனரின் கலை நேர்த்தியும்.
கண்ணுக்குக் கண் என்னும் செய்கை இந்த உலகத்தையே குருடாக்கி விடும் என்ற மஹாத்மா காந்தியின் குரலும், மரண தண்டனைக்கு எதிராக எழும் குரல்கள் வெளிப்படுத்தும் ஜீவகாருண்யமும், நேயமும் இந்தக் குறும்படம் வெளியாகி ஐம்பது ஆண்டுகளாகியும் வெறுமனே காற்றில் கரைந்தபடி இருக்கிறது.
இன்றைய தினத்தை அர்த்தப்படுத்தும் இக்குறும்படம், நிச்சயமாக நாளைய தினத்தில் குற்றங்களுக்கான தண்டனையின் தடத்தை மாற்றி அமைக்கும்.