கீழ்க்கண்டவற்றைப் பதினெட்டு நிமிடங்களில் பொருத்தமாய்ப் பொருத்தவும்.
அ) கர்ணனின் இயற்பெயர் - மிருகண்டூயன்
ஆ) ஜபாகுஸூமம் - கிராம்பு
இ) வீணையில் உறையும் தெய்வம் - செம்பருத்தி
ஈ) மார்க்கண்டேயனின் தந்தை - அர்ச்சுனன்
உ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- வஸுசேஷன்
ஊ) தேவ குஸுமம் - அபர்ணா.
எ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - கண்டகி
ஏ) சாளக்கிராமம் - கச்சபி
ஐ) இலையையும் உண்ணாதவள் - மாதங்கி
ஒ) ஊகம் - மதம்பிடித்த யானை
ஓ) கும்பகர்ணனின் மனைவி - துச்சலை
ஔ) வழுதுணங்கு - லகான்
ஃ) வடிகயிறு- காதணி
க) முயலகன் - கத்தரிக்காய்
ங) கடநாகம் - எள்ளுருண்டை
ச) நோலை - கருங்குரங்கு
ஞ) சரஸ்வதியின் வீணை - வச்சிரச்சுவாலை
ட) தாடங்கம் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி
(முன்-பின் குறிப்பு):
1) ஒரு வேளை கைகள் அள்ளிய நீரின் வாசகரும், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் அமர்பவரும் ஒரே நேர்க்கோட்டில் வர நேர்ந்தால் இந்தப் பயிற்சி உதவக் கூடும்.
2) இது பதினெண் கீழ்க்கணக்கு அல்ல.
சரியாக விடையைப் பொருத்தி முடித்துவிட்டால் ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகவும். பின் காத்திருக்கவும். விடை தெரியாவிட்டால் கூகுளில் தேடி எழுத வேண்டாம். கிடைக்காது.
_____________________________________________________________
ஆஸ்தான கோலாகலம் சுவடி எண் 1327 சொல்லும் கால அளவைகள் பற்றி இந்தப் பத்தி. அழகழகான கால அளவுகள்.
இரு கண்ணிமை - ஒரு கைநொடி
இரு கைநொடி - ஒரு மாத்திரை
இரு மாத்திரை- ஒரு குரு
பதினொரு குரு - ஒரு உயிர்
ஆறு உயிர் - ஒரு வினாழிகை
அறுபது வினாழிகை - ஒரு நாழிகை
ஏழரை நாழிகை - ஒரு சாமம்
மூன்று சாமம் - ஒரு பொழுது
இரு பொழுது - ஒரு நாள்
முப்பது நாள் - ஒரு திங்கள்
பன்னிரெண்டு திங்கள் - ஒரு ஆண்டு.
ஒரு குரு நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இனி யாரிடமும் ஒரு உயிர் வெய்ட் பண்ணுங்கன்னு உயிரை எடுக்கலாம்.
____________________________________________________________________
படித்துக்கொண்டே இருக்கிறேன். மலைப்புத் தீரவில்லை.
”இந்தக் கணக்கதிகாரம் குண்டூர். வா. சங்கறப்பனார்.
எடுத்தவன் கோவதையை வதை செய்த தேசத்திலே போவான்” என்ற சாபத்துடன் குண்டூர். வா. சங்கறப்பனார் உத்தரவிட சுவடிகளில் பதிவாகியிருக்கிறது கணக்கும், காலமும்.
சுவடி எண் 930ல் ஒரு சுவாரஸ்யமான கணக்கோடு அதன் காலத்தை நமக்குக் காட்டும் மயங்க வைக்கும் மொழி.
”ஒரு செட்டிக்கு 7 ஆண் பிள்ளையளுண்டு. அந்தச் செட்டி சிறிது முத்து ஆசித்தி வச்சு சிவலோகப் பிராத்தியானான். அந்த முத்து மூத்தபிள்ளை கையிலே அகப்பட்டது. அவன் வசத்திலே இருக்கிற பிள்ளையும் ஒருவன் அறிஞ்சு, இரண்டு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. பின்னும் ஒருவன் அறிஞ்சு மூன்று பங்கு வைக்குமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. அந்தச் சேதி நாலு பேருமறிஞ்சு நான்கு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. அந்தச் சேதி அஞ்சு பேருமறிஞ்சு அஞ்சு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. பின்னும் ஒருவன் அறிஞ்சு ஆறு பங்கு வைக்குமிடத்திலும் ஒரு முத்து அதிகமிருந்தது. ஆகப் பின்னே அந்தச் சேதி ஏழு பேரும் அறிஞ்சு ஏழு பங்காகப் பகிருமிடத்தில் மிச்சமில்லாமல் சரியாக இருந்தது.
ஆனபடியினாலே செட்டியார் வச்சிப்போன ஆசித்தி இருந்த முத்து எத்தனை? மொத்த முத்து ---------.”
(சில முடிவுகள்:
1. செட்டிக்கு ஏழு பிள்ளைகள் என்பதிலிருந்து கணக்கின் மேலும் முத்தின் மேலும் இருந்த ஆர்வம் குடும்பக் கட்டுப்பாட்டின் மீதில்லை என்பது உள்ளங்கை அம்லா.
2. ஒவ்வொருத்தருக்காக செட்டி விட்டுச் சென்ற ஆஸ்தியின் விவரம் தெரிந்தும் யாரும் இன்றைய டி.வி.யின் சீரியல்கள் போல அடுத்தடுத்த சகோதரர்களைப் போட்டுத் தள்ள விரும்பாமல் நேர்மையாய் முத்துக்களைப் பிரித்துக் கொண்ட தன்மை.
3. நல்ல வேளையாக ’மிஞ்சும் முத்தை யார் எடுத்துக்கொள்வது’ என்ற பெரும் பிரச்சினை வராத படிக்கு முன்கூட்டியே ஏழு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட தைரியத்தையும், அவர்களுக்கு ஒரு நாள் முத்துக்கணக்கு தெரிய நேரலாம் என்ற யூகத்தில் மிகச் சரியான எண்ணிக்கையில் முத்துக்களை ஆஸ்தியாக விட்டுச் சென்ற செட்டியின் தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டுகிறது கை.அ.நீ. )
விடை தெரிந்தால் முத்துக்குப் பின்னாலிருக்கும் கோடிட்ட இடத்தில் நிரப்புக.
_______________________________________________________
வர்ட்டா?
மனம் மகிழ்வடைந்த மக்கள் தமிழ் பிழைத்தது என கோஷங்கள் எழுப்பியபடியே சமீபத்தில் நிம்மதியாகக் கலைந்துசென்ற ஒரே நிகழ்வு இதுதான் என விக்கிபீடியா தெரிவிக்கிறது.
அந்த விடைகள்:
அ) கர்ணனின் இயற்பெயர் -வஸுசேஷன்
ஆ) ஜபாகுஸூமம் - செம்பருத்தி
இ) வீணையில் உறையும் தெய்வம் - மாதங்கி
ஈ) மார்க்கண்டேயனின் தந்தை - மிருகண்டூயன்
உ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- அர்ச்சுனன் (அர்ச்சுனன் பெற்ற சாபத்தின் மறுபிறவி)
ஊ) தேவ குஸுமம் - கிராம்பு
எ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - துச்சலை
ஏ) சாளக்கிராமம் - கண்டகி (கண்டகி நதியில் வக்ர தந்தி என்ற பூச்சியின் கூடுதான் சாளக்கிராமம். அது சால மரங்கள் நிரம்பிய பகுதியாய் இருந்ததால் சாளக்கிராமம்.)
ஐ) இலையையும் உண்ணாதவள் - அபர்ணா.(பர்ணா என்றால் இலைதழை. பர்ணசாலையின் origin)
ஒ) ஊகம் - கருங்குரங்கு
ஓ) கும்பகர்ணனின் மனைவி - வச்சிரச்சுவாலை
ஔ) வழுதுணங்கு - கத்தரிக்காய்
ஃ) வடிகயிறு- லகான்
க) முயலகன் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி
ங) கடநாகம் - மதம்பிடித்த யானை
ச) நோலை - எள்ளுருண்டை
ஞ) சரஸ்வதியின் வீணை - கச்சபி
ட) தாடங்கம் - காதணி
செட்டி விட்டுச் சென்ற ஆசுத்தி 301 முத்துக்கள்.
பங்கெடுத்துக்கொண்ட எல்லோருக்கும் நன்றி.
301 என்று ஒரே போடு போட்ட கீதமஞ்சரிக்கும், அப்பாத்துரைக்கும் ராமானுஜம் விருது பகிரப்படுகிறது.
தனியே பதிலளித்த மாதங்கி மற்றும் அவருக்கு நிழலாக உதவிய பெற்றோர்களின் தமிழ் தைரியத்தைப் பாராட்டி அகத்தியர் விருது அளிக்கப்படுகிறது.
மற்றுமொரு பயிற்சியில் சந்திக்கும்வரை நிம்மதியாக இருக்கவும்.
**************************************************************************
இரு நாட்களுக்குப் பின் ஒரு இளங்காலையில் தமிழுலகத்தையே ஆட்டிப்படைத்த புதிருக்கான விடைகள் பலத்த பாதுகாப்புக்கு நடுவே வெளியாகத் துவங்குகின்றன.