9.6.12

மஹா ஆனந்தம்


தஞ்சாவூர் போயிருந்தபோது சரஸ்வதி மஹாலில் நமது பாரம்பர்ய மருத்துவம், ஜோதிடம், கணிதம், நாட்டிய சாஸ்த்திரம், சமையல்கலை, வானசாஸ்திரம், மிருகங்களுக்கான வாகட சாஸ்த்ரம் என்று பல சுவடிகளிலும் கிடைத்த பற்பல செய்திகளும் வரலாறும் என இன்னும் இரண்டு வருஷங்களுக்கு எழுத வண்டி வண்டியாய் சமாச்சாரங்கள் கிடைத்தன.

கணிதம் தொடர்பான நூல்களாக ஆரியபடிதம், பஞ்சாம்மை, வைத்தம், புவனாதீபம், நவசத்திகை, கோவிந்தனார்படிகம் போன்ற சமஸ்க்ருத நூல்களும், ஏரம்பம், கிளராலயம், அதிசாகரம், பூகோளதிலகம், திரிபுவனதீபம், கணிதரத்தினம் என்ற தமிழ் நூல்களும் இருந்திருக்கின்றன என்று இந்தச் சுவடிகள் சொல்கின்றன. 

சரி. அதை இன்னொரு இடுகையில் பார்க்கலாம். 

கொஞ்சம் இந்த வெண்பாக்களைப் பாருங்கள்.  

நற்கோடி நற்சங்கு நல்விந்தம் நல்பதுமம்
தக்கதோர் சமுத்திரம் தாமரை- வற்றாத
வெள்ளம் பிரளயமாம் மெய்தோரை யோசனையாம்
கள்ளவிழும் கோதாய் கருது.

கற்பம் நிகற்பம் கடிமகரம் தண்பனை
உற்பலம் அற்புதம் என்றிவை- கற்க
வரியோ ரறிந்தவை யானதாம் இன்னும்
பெரியோ ரறிவளவுங் கேள்.

(ஆஸ்தான கோலாகலம்- சுவடி எண்: 436)

பலகோடி சங்குவிந்தம் பதுமஞ் சமுத்திரம்
துலைதா மரை வெள்ளம் பிரளயந்தோரை - நல யோசனை
கற்பம் நிகற்பம் கடிமகரம் தண்பனை
உற்பலம் அற்புதமென் றோது.

(ஆஸ்தான கோலாகலம் -சுவடி எண் - 1327)

அதன் விரிவு இப்படிச் செல்கிறது. 

கோடி ஒரு கோடி கொண்டது ஒரு மஹாகோடி
மஹாகோடி ஒரு கோடி கொண்டது ஒரு சங்கம்

சங்கம் ஒரு கோடி கொண்டது மஹாசங்கம்
மஹாசங்கம் ஒரு கோடி கொண்டது ஒரு விந்தம்

விந்தம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாவிந்தம்
மஹாவிந்தம் ஒரு கோடி கொண்டது ஒரு பதுமம்

பதுமம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாபதுமம்
மஹாபதுமம் ஒரு கோடி கொண்டது ஒரு சமுத்திரம்

சமுத்திரம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாசமுத்திரம்
மஹாசமுத்திரம் ஒரு கோடி கொண்டது ஒரு தாமரை

தாமரை ஒரு கோடி கொண்டது ஒரு மஹாதாமரை
மஹாதாமரை ஒரு கோடி கொண்டது ஒரு வெள்ளம்

வெள்ளம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாவெள்ளம்
மஹாவெள்ளம் ஒரு கோடி கொண்டது ஒரு பிரளயம்

பிரளயம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாபிரளயம்
மஹாபிரளயம் ஒரு கோடி கொண்டது ஒரு தோரை.

தோரை ஒரு கோடி கொண்டது ஒரு மஹாதோரை
மஹாதோரை ஒரு கோடி கொண்டது ஒரு யோசனை

யோசனை ஒரு கோடி கொண்டது ஒரு மஹாயோசனை
மஹாயோசனை ஒரு கோடி கொண்டது ஒரு கற்பம்

கற்பம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாகற்பம்
மஹாகற்பம் ஒரு கோடி கொண்டது நிற்பம்

நிகற்பம் ஒரு கோடி கொண்டது மஹாநிற்பம்
மஹாநிற்பம் ஒரு கோடி கொண்டது கடிகம்

கடிகம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாகடிகம்
மஹாகடிகம் ஒரு கோடி கொண்டது ஒரு தண்பனை

தண்பனை ஒரு கோடி கொண்டது ஒரு மஹாதண்பனை
மஹாதண்பனை ஒரு கோடி கொண்டது ஒரு உற்பலம்

உற்பலம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாஉற்பலம்
மஹாஉற்பலம் ஒரு கோடி கொண்டது ஒரு அற்புதம்

அற்புதம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாஅற்புதம்
மஹாஅற்புதம் ஒரு கோடி கொண்டது ஒரு அனந்தம்

அனந்தம் ஒரு கோடி கொண்டது ஒரு மஹாஅனந்தம்.

நம்முடைய கணிதத்தில் எத்தனை கோடிகளைத் தொட்டிருக்கிறோம்? ஒவ்வொரு மடங்கிற்கும் அடுத்த படியாக ’மஹா’வும் அதற்கடுத்த மடங்குகளுக்கு அழகழகான பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன?

இன்னொரு புற ஆச்சர்யம். மஹாஅனந்தம் வரை நமது புழக்கம் இருந்திருக்கிறது என்பது எத்தனை மஹா ஆச்சர்யம்?  

இந்தக் கோணத்தில் அனந்தபத்மநாப ஸ்வாமி எத்தனை கோடித் தாமரைகளுக்கு மத்தியில்? அற்புதம்.அதியற்புதம்.

இந்தப் புழக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் 1,60,000 கோடியெனும் 2ஜியோ, கோல்கேட்டோ வெறும் ஒரு மஹாகோடிக்கும் கீழேதான். இன்னும் நம் அரசியல்வாதிகள் மஹாஅனந்தந்ததை அடைய அனந்தகோடி தூரம் செல்லவேண்டுமே என நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. 

நமக்குப் பக்கத்தில் டாலர்களில் புழங்கும் அதிபர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் அவர்களின் நாட்டின் கணிதத்தின் உச்சம் 1க்குப் பின்னால் எத்தனை பூஜ்யங்கள் வரை என்று தேடியபோது கிடைத்த பதிலைப் பார்த்தபின் நமது புராதனக் கணிதத்தின் மீதான மலைப்பு இன்னும் எகிறியது.

The system used in the U.S. is not as logical as that used in other countries (like Great Britain, France, and Germany). In these other countries, a billion (bi meaning two) has twice as many zeros as a million, and a trillion (tri meaning three) has three times as many zeros as a million, etc. But the scientific community seems to use the American system.

# of zeros......U.S./scientific community.......Other countries 

3......thousand................. thousand
6......million...................... million
9......billion...................... 1000 million (1 milliard)
12....trillion...................... billion
15....quadrillion.............. 1000 billion
18....quintillion................. trillion
21....sextillion.................. 1000 trillion
24....septillion.................. quadrillion
27....octillion.................... 1000 quadrillion
30....nonillion.................... quintillion
33....decillion................... 1000 quintillion
36....undecillion............... sextillion
39....duodecillion............ 1000 sextillion
42....tredecillion.............. septillion
45....quattuordecillion.... 1000 septillion
48....quindecillion........... octillion
51....sexdecillion............ 1000 octillion
54....septendecillion...... nonillion
57....octodecillion.......... 1000 nonillion
60....novemdecillion..... decillion
63....vigintillion............. 1 000 decillion
66 - 120... xxxx .......... undecillion - vigintillion
303....xxxxxxxxxxxxx.... centillion
600....centillion..... xxxxxxxxxxxxxxxx

There are other big numbers with names. A zillion has come to mean an arbitrary or unknown large number. A googol is 10^100. A googolplex is 10^googol (10^10^10^2). This number is too large to write here without exponents. Skewes' number (gesundheit) is 10^10^10^34 was used as an upper bound in a mathematical proof. Recently 10^10^10^10^10^7 was used in a proof.

The googolplex has given rise to the n-plex notation: n-plex is 10^n. n-minex is 10^-n. Donald Knuth invented arrow notation, where m^n (^ is an up arrow) is the regular m^n. m^^n is m^m^m^m...^m, with n up arrows. m^^^n is m^^m^^m...^^m, with n ^^s.

Source: http://www.jimloy.com/math/billion.htm  


200 வருடங்களுக்கு முன்னால் ராஜா சரபோஜி தன் மந்திரி பரிவாரங்களுடன் சுவடிகளின் மூலம் கிடைத்த பொக்கிஷங்கள் குறித்து ஆனந்தித்தபடி கடந்து சென்றிருக்க வாய்ப்புள்ள அதே பாதையில் இடிந்து சிதிலமான மாளிகை விதானங்களின் வழியே வருத்தம் அழுத்த வெளியேறினேன் நாம் போய்க்கொண்டிருக்கும் இன்றைய பாதையை எண்ணியபடியே.

7 கருத்துகள்:

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி...

பெருமிதமாக உள்ளது. தஞ்சை மண்ணில் பிறந்த பாக்கியம் கிடைத்தமைக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பெருமை கொண்டு அதனை ஏகாந்தமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும்போது எத்தனை பெருமையாக உள்ளது. நமது பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் இதுபோன்ற அனந்தங்கள் ஏராளமாக சுவடிகளில் புதைந்துகிடக்கின்றன. நான் அதைத்தான் தோண்டிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னோடு இருப்பது அனந்த யானைகள் பலம்.

நிலாமகள் சொன்னது…

அடேய‌ப்பா....!!!!!!!!!!!! ம‌ஹாஅன‌ந்த‌ம் இவ்வ‌ள‌வு பெரிதா?!!!!

சிவகுமாரன் சொன்னது…

எண்ணி எண்ணி வியக்கிறேன்.
எண்ண முடியாதும் வியக்கிறேன்.

Ramani சொன்னது…

200 வருடங்களுக்கு முன்னால் ராஜா சரபோஜி தன் மந்திரி பரிவாரங்களுடன் சுவடிகளின் மூலம் கிடைத்த பொக்கிஷங்கள் குறித்து ஆனந்தித்தபடி கடந்து சென்றிருக்க வாய்ப்புள்ள அதே பாதையில் இடிந்து சிதிலமான மாளிகை விதானங்களின் வழியே வருத்தம் அழுத்த வெளியேறினேன் நாம் போய்க்கொண்டிருக்கும் இன்றைய பாதையை எண்ணியபடியே //
.
மடியில் இருக்கும் மாணிக்கத்தின் அருமை தெரியாது
குப்பை பொறுக்கக் கிளம்பிக் கொண்டிருக்கிறோமா ?
பொக்கிசங்களின் தொடர்சியான அறிமுகங்களை
ஆவலுடன் எதிர்பார்த்து...

G.M Balasubramaniam சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,நண்பர் நாகசுப்பிரமணியம் முன்பு ஒரு பதிவு எழுதி இருந்தார்.ஜனவரி 2011-ல் தமிழின் பெருமை என்று. அதில் எண்களைப் பற்றிய நம் மூதாதையரின் ஞானம் குறித்து வியந்து எழுதி இருந்தார். அதில் கோடிக்குப் பிறகு,ஒவ்வொரு பூஜ்யம் சேரும்போது அவற்றை முறையே, கோடி, அற்புதம், நிகற்புதம், கும்பம் கண்ம், கற்பம் ,நிகற்பம், பதுமம், சங்கம், வெள்ளம் அன்னியம், அரிட்டம், பறற்டம்,பூரியம் முக்கோடி மஹாயுகம்
என்று எழுதி இருந்தார். மேலும் அன்னியம் என்பது 100- ஜில்லியனுக்குச் சமம் என்றும் எழுதி இருந்தார். உங்கள் தகவல் இன்னும் மேலே போகிறது. இப்பொழுது கொஞ்சம் புரிகிறது. அனந்த கோடி நமஸ்காரம் என்பதன் பொருள்.

ரிஷபன் சொன்னது…

இந்தப் புழக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் 1,60,000 கோடி என்பது வெறும் ஒரு மஹாகோடிக்கும் கீழேதான். இன்னும் நம் அரசியல்வாதிகள் மஹாஅனந்தந்ததை அடைய அனந்தகோடி தூரம் செல்லவேண்டுமே என நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

அவர்களின் டார்கெட்டை அதிகப்படுத்தி விட்டீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! அர்த்தம் நிறைந்த பதிவு!

///சிதிலமான மாளிகை விதானங்களின் வழியே வருத்தம் அழுத்த வெளியேறினேன் நாம் போய்க்கொண்டிருக்கும் இன்றைய பாதையை எண்ணியபடியே ///

இதே நிலை எனக்குமிருந்தது சில ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்ற போது..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...