11.2.15

நீலகிரிக் குன்றுகளில்......

நான் ஆஸ்ட்ரேலியாவைச் சென்றடைந்த மறுநாள், சிட்னிக்கு அருகில் ஒரு பூங்காவிற்கு என் பதிப்பாளர் அழைத்துச் சென்றார். அதனுள்ளே இருந்த வனப்பகுதியில் பாறைகளால் அமைந்த குன்றுப் பகுதி நீலகிரி என்றழைக்கப்படுகிறது.

" அவர்கள் மூன்று சகோதரிகள்" என்று சொன்ன என் பதிப்பாளர், கீழ்க்கண்ட செவிவழிக் கதையைக் கூறலானார்.

ஒரு மந்திரவாதி தன் மூன்று சகோதரிகளுடன் சென்று கொண்டிருந்த போது, அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான போர்வீரன் ஒருவன் அவரிடம் சென்று,

" இந்த அழகான சகோதரிகளில் ஒருவரை மணக்க விரும்புகிறேன்" என்றான்.

" இவர்களில் ஒருவரை மட்டும் நீ மணந்தால், மற்ற இருவரும் தாங்கள் அழகற்றவர்கள் என்று கருத நேரிடும். அதனால் மூவரையும் மனைவிகளாய் ஏற்றுக் கொள்ளும் இனத்தைச் சேர்ந்த போர்வீரனைத் தேடிச் செல்கிறேன்" என்ற மந்திரவாதி மேலே கடந்து சென்றார்.

ஆஸ்ட்ரேலியா முழுவதும் பல காலம் சுற்றி அலைந்த பின்னரும் அப்படி ஒரு இனத்தை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

நடந்து நடந்தே வயதாகியும், சோர்ந்தும் போன சகோதரிகளில் ஒருத்தி, " குறைந்த பட்சம் ஒருவராவது சந்தோஷமாய் இருந்திருக்கலாம்" என்றாள்.

" நான் தவறு செய்து விட்டேன். ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது" என்றெண்ணினார்.

ஒருவரின் மகிழ்ச்சி என்பது பிறரின் துயரம் ஆகாது என்ற படிப்பினையை, அந்தக் குன்றுகளைக் கடந்து செல்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில், அவரின் மூன்று சகோதரிகளையும் கற்குன்றுகளாக மாற்றினார் அந்த மந்திரவாதி.

(பௌலோ கோயெலோவின் "நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து In the blue mountains என்ற பத்தி)

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: காதலும் காவியம்படைக்கட்டும்: என்பக்கம் கவிதையாக வாருங்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நிலாமகள் சொன்னது…

ஒருவரின் மகிழ்ச்சி என்பது பிறரின் துயரம் ஆகாது //

காலம் கடந்து விட்டதோ...
இன்னொரு வாய்ப்புக்கு வேண்டி விரும்பி இருக்கலாம் நம்பிக்கையுடன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...