10.2.15

ஒன்றில் எல்லாம்

சௌ பௌலோவில் பிறந்து ந்யூயார்க்கில் வசிக்கும் ஓர் ஓவியரின் இல்லத்தில் ஒரு கூட்டம்.

கோணங்கள் மற்றும் ரசவாதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் 'நம் ஒவ்வொருவரிலும் இந்தப் பிரபஞ்சம் அடங்கியிருக்கிறது. அதனால் அதன் வளத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்' என்ற ஒரு ரசவாத சிந்தனையை நான் விளக்க முயன்ற போது, என் வாதத்தை விளக்க சரியான வார்த்தைகளோ, உருவகமோ கிடைக்காமல் தடுமாறினேன்.

அமைதியாய் இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த ஓவியர் எழுந்து, அவர் அறையின் சாளரம் வழியே சாலையை அனைவரையும் பார்க்கும்படிச் சொன்னார்.

" என்ன தெரிகிறது?" என்று கேட்டார்.

" இந்தச் சாலை தெரிகிறது" என்றார் ஒருவர்.

அந்தக் காட்சி தெரியாதபடி சாளரத்தை ஒரு தாளால் அந்த ஓவியர் மூடினார். பிறகு ஒரு பேனாக்கத்தியால் கீறி, ஒரு சதுரத்தை உருவாக்கினார்.

" இதன் வழியே யாராவது பார்க்க நேர்ந்தால் என்ன காட்சி தெரியும்?"

" அதே சாலைதான்" என்ற பதில் வந்தது.

அந்த சதுரத்தின் மேலே மேலும் பல சதுரங்களை வெட்டி உருவாக்கினார்.

" எப்படி ஒவ்வொரு சதுரத்தின் உள்ளும் இந்தச் சாலையின் முழுக் காட்சியும் மறைந்திருக்கிறதோ, அதுபோல் நம் ஒவ்வொருவரின் ஆன்மாவினுள்ளும் இந்தப் பிரபஞ்சம் மறைந்திருக்கிறது" என்றார் ஓவியர்.

அவர் உருவாக்கிய அற்புதமான அந்த உருவகத்தை அனைவரும் பாராட்டினோம்.

( பௌலோ கோயெலோவின் " நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து " how one thing contain everything" என்ற பத்தி.)

4 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சிந்தனைக்கு அறிவான கதை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடடா...! அருமை... அருமை...

நிலாமகள் சொன்னது…

நம் ஒவ்வொருவரின் ஆன்மாவினுள்ளும் இந்தப் பிரபஞ்சம்//

தேடித் தேடிப் படித்து... தேடித் தேடிப் பகிர்ந்து...! நன்றி ஜி!

Iniya சொன்னது…

ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு முத்துக்கள் தான். அருமை அருமை !

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...