9.6.13

வஜ்ர ஸூசிகா உபநிஷத் - யார் ப்ராம்மணன்?


வஜ்ர ஸூசிகா உபநிஷத் ஆஞ்சனேயருக்கு ராமபிரான் உபதேசித்த 108 உபநிஷத்துக்களில் 38வது.

ஸாம வேதத்தைச் சேர்ந்தது வஜ்ர ஸூசிகா உபநிஷத். வஜ்ரம் என்றால் வைரம். ஸூசிகா என்றால் ஊசி. அஞ்ஞானம் எனும் இருளை, கடினமான தாதுப்பொருட்களில் துவாரம் இட்டுச் செல்லும் வைரஊசி இந்த உபநிஷத்.

மெய்யறிவு பெற்றவர்களுக்கு இவ்வுபநிஷத் ஓர் அணிகலன் போலவும், அற்றவர்களுக்குக் கண்களைத் திறக்கும் ஞானமாகவும் அமைகிறது.

உபநிஷத்துக்களில் வைர ஊசி போல விளங்கும் இந்த உபநிஷத் யார் பிராம்மணன்என்ற பொருளை ஊடுருவித் தைக்கிறது.

ப்ராம்மணன் என்பவன் யார்

அவன் ஜீவனாதேகமாஜாதியாஞானமாகர்மமாதர்மமாஎன்ற ஆராய்ச்சியை முன் வைக்கிறது.

1. ஜீவன் ப்ராம்மணன் என்று கருத முடியாது. கடந்ததும்கடக்க இருப்பதுமான பல உடல்களில் ஜீவன் ஒரே வடிவம் உடையதாலும்கர்மத்தின் பலனால் பல உடல்கள் பெறுவதாலும்எல்லா உயிர்களிலும் ஜீவன் ஒரே மாதிரியாய் இருப்பதாலும் ஜீவனை ப்ராம்மணன் என்று கருதுவதற்கில்லை.

2. பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் பிறப்பெடுக்கும் அனைவருக்கும் பொதுவானதாகவும்மூப்பு முதல் மரணம் வரை தர்ம அதர்மங்கள் சமமானதாகவும்தோலின் நிறத்தால் பாகுபடுத்த முடியாததாகவும் இருக்கிறது. ஒரு ப்ராம்மணத் தந்தையை தகனம் செய்யும் புத்திரனுக்கு ப்ரும்மஹத்தி எனும் தோஷம் பீடிக்காமையாலும் உடலை ப்ராம்மணன் என்று கருத முடியாது.

3. மஹரிஷிகளான ஹ்ருஷ்யஷ்ருங்கர் மானிடமும்கௌஷிகர் தர்ப்பையிலும்ஜாம்பூகர் நரியிடமும்வால்மீகி புற்றில் இருந்தும்வ்யாஸர் செம்படவப் பெண்ணிடமும்கௌதமர் முயலிடமும்வஸிஷ்டர் ஊர்வசியிடமும்அகஸ்தியர் கும்பத்திலிருந்தும் தோன்றியவர்கள். இதுபோலவே பிறவியில்லாமலே ஆதியில் ஞானமடைந்த ரிஷிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆகவே ஜாதியால் ஒருவனை ப்ராம்மணன் என்று கருத வாய்ப்பில்லை.

4. க்ஷத்ரியர்களில் ஞான தரிசனம் பெற்ற ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆகையால்அறிவாலோ ஞானத்தாலோ ஒருவனை ப்ராம்மணனாகக் கருத இயலாது.        

5. எல்லா உயிர்களுக்கும் ஊழ்வினை, தொல்வினை, வருவினை போன்ற கர்மங்கள் பொதுவாகக் காணப்படுவதால்முந்தைய வினையின் விளைவுகளாலேயே தூண்டப்பட்டுச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுகொண்டுகர்மத்தாலும் ஒருவன் ப்ராம்மணனாக மாட்டான்.

6. க்ஷத்ரியர்களிலும், வைசியர்களிலும் தான தர்மங்களில் மேலானவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். பொன்னையும்பொருளையும் வாரிவழங்கும் தார்மிகனாக இருந்தாலும்ஒருவனை தர்மத்தின் பொருட்டு ப்ராம்மணனாக அறிய வாய்ப்பில்லை.

7. எல்லா ஆராய்ச்சிகளுக்கும் பின்னர்இன்னமும் யார்தான் ப்ராம்மணன் என்ற கேள்வி உடைபடாமலே நிற்பதை உணர முடிகிறது.

அப்படியானால், ப்ராம்மணன் என்பவன் யாரெனில்,

எவன் ஒருவன்-

#இரண்டற்ற ஸச்சிதானந்த வடிவினனாய் ஆன்மாவை அனுபவித்து அறிபவனாயும், இவ்வான்மாவாகவே இருப்பவனாயும்

#ஜாதிகுணம்செயல் ஆகிய மூன்றும் அற்றவனாயும்,

#பிறப்பு, இருப்பு, வளர்வது, மலர்வது, மெலிவடைவது, இறப்பது முதலிய ஆறு மாற்றங்கள் அற்றவனாயும்,

#மூப்பு, மரணம், வியாதி, உலக மயக்கம், பசி, தாகம் ஆகிய ஆறு அலைகள் அற்றவனாயும்

#குற்றம், குறைகள் அற்றவனாயும்,

#ஸத்யம்ஞானம்ஆனந்தம்அனந்தம் என்ற வடிவுடையவனாகயும்,

#எல்லாக் கற்பனைகளுக்கும் ஆதாரமானாலும் ஒரு கற்பனையிலும் அடங்காதும்எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயக்குபவனாயும், 
#ஆகாயத்தைப் போல் உள்ளும்வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்த வடிவாயும்மனதிற்கெட்டாததாயும் அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியதான குணமுடையவனாகவும்,

#ப்ரகாசிக்கும் ஆன்ம வடிவினனாய் இருந்து, விருப்புவெறுப்பு முதலிய அற்றவனாயும்

#சமம்தமம் முதலிய தன் அடக்கங்களுடன் கூடிய அழுக்காறு, அவா, வெகுளி முதலியன நீங்கியவனாயும்,

#டம்பம்அகந்தை முதலியவற்றால் தொடப்படாதவனாயும்,

#வீடுபேறு எய்தத் தகுந்தவனாயும்-

இருக்கிறானோ அவனே ப்ராம்மணன்.

இது ஸ்ம்ருதிஸ்ருதிபுராணஇதிஹாஸங்களின் முடிவான கருத்து. இதற்குப் புறம்பாக ப்ராம்மணத் தன்மை இல்லவே இல்லை.

துணை நூல்கள்: 

உபநிஷத் ஸாரம் - அண்ணா
www.dharmicscriptures.org/VajraSuchika_Upanishad.doc

7 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி அய்யா.

G.M Balasubramaniam சொன்னது…


அது இதுவா. இது அதுவா எது எதுவா என்று கேட்டு இவையேதுமல்லாததுஅகத்தை உணர்ந்தது அகத்தில் இருப்பது ஒன்றேயானது என்றெல்லாம் சொல்லிப் போகும் விதம் சாதாரணனர்களுக்குப் புரியாதது, புரிந்ததுபோல் தோன்றுவது எல்லோரும் தேடி அலைவது........ஆமாம் இது பிரம்மமா பிராமணனா..... ?

சுந்தர்ஜி சொன்னது…

ப்ரும்மத்தை உணர்ந்தவனே ப்ராம்மணன்.

ஆறு விதமாய்க் கூறு போட்டு, இதனால் எல்லாம் ஒருவன் ப்ராம்மணனாகக் கருதப் படுவதில்லை. ப்ரும்மத்தை அறிந்தவன் யாரானாலும் அவன் ப்ராம்மணன் என்பதே இந்த உபநிஷத்தின் சுருக்கம்.

அப்பாதுரை சொன்னது…

ப்ரம்மம் என்பதே உடான்சு. மூவாயிரம் வருடத்துக்கு முந்தைய அறிவின் - அந்தக் காலக் கட்டத்தின் சூழலுக்கேற்ப - வெளிப்பாடுகள் எல்லாமே தெள்ளந்தெளிவாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. இன்றைக்கு இத்தனை 'ஞான விசாலம்' இருக்கும் பொழுதும் குட்டையைக் குழப்புகிறோம்.

இதில் யார் ப்ராம்மணன் என்று கேட்டுக் கொண்டேயிருந்தால் குழப்பமும் தோன்றிக் கொண்டே இருக்கும் :) ப்ரம்மம் ப்ராம்மணீயம் ப்ராமணன் மூணுக்குமே வித்தியாசம் சொல்லலாம்.

உபநிஷது இப்படிச் சொன்னால் மனுஸ்ம்ருதி இன்னொன்றைச் சொல்கிறது. அப்புறம் யார் உசத்தி என்று கட்சி கட்ட வேண்டியிருக்கிறது. அல்லது மனுஸ்ம்ருதி சொல்வது வர்ணம், உபநிஷது சொல்வது தத்துவம் என்று சப்பை கட்ட வேண்டியிருக்கிறது.

எனக்கென்னவோ அந்தக் காலத்தில் - இப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்களே என்பது தான் பெரிய ஆச்சரியம். அதனால் தான் இந்தப் படைப்புகளை மதிக்க முடிகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகும் இப்படி யாராவது விவாதிக்க முடிகிறது.

அப்பாதுரை சொன்னது…

வஜ்ரஸூசிகா - அருமையான சொல்.

க்ஷத்ரியனான ராமன் 'யார் ப்ராமணன்' என்பது பற்றிய உபதேசம் செய்தது - ஹ்ம்ம். அதனால் தான் 'ப்ரம்மத்தை உணர்ந்தவன்' என்கிற வர்ணத்துக்கு அப்பாற்பட்ட விசாலமான விளக்கத்தைச் சொன்னானோ?

மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதையெல்லாம் உங்களைப் போன்றோர் அறிமுகம் செய்தால் தான் உண்டு சுந்தர்ஜி. நன்றி.

அப்பாதுரை சொன்னது…

'அஹம் ப்ரம்மாஸ்மி' என்ற தத்துவம் எல்லாத் தேடல்களையும் தூக்கி எறியச் சொல்கிறதே?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நன்றி அப்பாதுரை.

உங்கள் யூகங்கள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன.

அகம் ப்ரும்மாஸ்மி என்பதே மனதின் வ்ருத்தி என்று சொல்கிறார் ரமணர் காவ்ய கண்டரின் ஒரு கேள்விக்கு. அதே போல சிவ ரஹஸ்யத்தில் ஒரு பகுதியான ரிபு கீதை அகம் ப்ரும்மாஸ்மி என்ற ஒரு மந்திரத்தை விட உயர்வானது எதுவுமில்லை என்கிறது.

சில விஷயங்களை அறிவால் எட்டமுடியாது.மனதால் எட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.

மிகப் பழமையான தத்துவங்கள் மீது கருத்துச் சொல்லும் யோக்யதை எனக்கு இல்லை என நான் நம்புகிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...