ஒரு புகழ் பெற்ற ஹோட்டலின் புகழ் பெற்ற விளம்பரம் இது.
கொடியவை என்று மனிதன் ஒதுக்கி வைக்கும் எல்லாவற்றின் மேலும்
ஆதுரத்துடன் நம் கைகளைப் பிணைத்துக் கொள்ள வைக்கிறது.
தனக்கும் பிறருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிப்பவனாக மனிதன் இருக்கிறான்.
தனக்கும் பிறருக்குமான நெருக்கத்தைத் தீர்மானிப்பவைகளாக விலங்குகள் இருக்கின்றன.
மனிதன் மனதில் மறைந்திருக்கும் மிருகம் எப்போதுமே கூர்மையான நகங்களுடனும், பற்களுடனும் விழிப்போடு காத்திருக்கிறது.
மிருகத்தின் நினைவில் வாழும் மனிதம் அதன் கண்களில் கருணை கசியும் வாலசைவில் ஒரு தொடுதலுக்காகத் தயங்கி நிற்கிறது தவிப்போடு எப்போதும்.
#######
-இனி இலக்கியத்துக்கான நோபெல் விருது பெற்ற மெக்ஸிகோவின் ஆக்டேவியோ பாஸ் எழுதிய ஒரு அழகான கவிதை.
ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்தது
கார்களுக்கிடையில்.
மேரி ஜோஸ் சொன்னார்:
அந்த வண்ணத்துப்பூச்சிதான்
ந்யூயார்க் சுற்றுப்பயணத்தில் இருக்கும்
சுவாங் சு.
ஆனால் அந்த வண்ணத்துப்பூச்சி
அறியாது இருந்தது
தான்-
சுவான் சு வாகத் தன்னைக்
கனவு கண்டு கொண்டிருந்த
ஒரு வண்ணத்துப்பூச்சி என்றோ
அல்லது
வண்ணத்துப்பூச்சியாக தன்னைக்
கனவு கண்டு கொண்டிருந்த
ஒரு சுவாங் சு என்றோ.
வண்ணத்துபூச்சி ஒருபோதும்
வியப்படைந்ததில்லை.
அது பறந்து விட்டது.
####
அடுத்த கவிதை இலக்கியத்துக்கான நோபெல் விருது பெறாத இந்தியாவின் சுந்தர்ஜி எழுதியது.
எறும்புக்கு ஒற்றை விரல்.
கொசுவுக்கு ஒரு கை.
ஓணானுக்கும்
தட்டானுக்கும் ஒரு சுருக்கு.
தட்டானுக்கும் ஒரு சுருக்கு.
குருவிக்கு ஒரு சிறுகல்.
பாம்புக்கு ஒரு கழி.
தவளைக்கு ஒற்றைஅடி.
நத்தைக்கு ஒற்றை மிதி.
நாய்க்கோ கல்லெறி.
மாட்டுக்கும் பன்றிக்கும்
ஆட்டுக்கும் கோழிக்கும்
அதனதற்கேற்றாற் போல்.
மீனுக்குப் புழு.
யானைக்குப் பெரும்பள்ளம்.
மானுக்கு ஒற்றைக்குறி.
காளைக்கும் கழுதைக்கும்
பெரும்பாரம்.
ஒட்டகத்துக்கு
முடிவில்லாப் பாலை.
குதிரைக்கோ விதவிதமாய்.
வாழாதிருந்து சாகிறான்
மனிதன்.
சாகாதிருக்க வாழ்கின்றன
உயிர்களெல்லாம்.
9 கருத்துகள்:
/// மிருகத்தின் நினைவில்
வாழும் மனிதம்...
வாழாதிருந்து சாகிறான்
மனிதன்... ///
வாழ்த்துக்கள்... நன்றி...
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறாத சுந்தர்ஜியின் கவிதை அட்டகாசம். ஆனால் சுந்தர்ஜியின் இதே எழுத்துக்களை முன்பே கைகளில் நீர் தாங்கி வந்திருக்கிறதா?....எங்கோ பொறி தட்டுகிறார்போல் இருக்கிறது.வாழ்த்துகள்.
வாழாதிருந்து சாகிறான்
மனிதன்.
சாகாதிருக்க வாழ்கின்றன
உயிர்களெல்லாம்.
உயிர்த்துடிப்பு மிக்க பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
//அடுத்த கவிதை இலக்கியத்துக்கான நோபெல் விருது பெறாத இந்தியாவின் சுந்தர்ஜி எழுதியது.//
விரைவில் இல்க்கியத்துக்கான் நோபெல் பரிசோ, சாஹித்ய அஹடெமி விருதோ அல்லது இரண்டுமோ கிடைக்க என் அன்பான வாழ்த்துகள்.;))))))
//வாழாதிருந்து சாகிறான் மனிதன்.
சாகாதிருக்க வாழ்கின்றன உயிர்களெல்லாம்.
உயிர்த்துடிப்பு மிக்க வரிகள். பாராட்டுக்கள் ஜி. .
//தனக்கும் பிறருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிப்பவனாக மனிதன் இருக்கிறான்.
தனக்கும் பிறருக்குமான நெருக்கத்தைத் தீர்மானிப்பவைகளாக விலங்குகள் இருக்கின்றன.
மனிதன் மனதில் மறைந்திருக்கும் மிருகம் எப்போதுமே கூர்மையான நகங்களுடனும், பற்களுடனும் விழிப்போடு காத்திருக்கிறது.
மிருகத்தின் நினைவில் வாழும் மனிதம் அதன் கண்களில் கருணை கசியும் வாலசைவில் ஒரு தொடுதலுக்காகத் தயங்கி நிற்கிறது தவிப்போடு எப்போதும்.//
அருமையான சிந்தனையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், ஜி.
//வண்ணத்துபூச்சி ஒருபோதும் வியப்படைந்ததில்லை. அது பறந்து விட்டது.//
பட்டுப்போன்ற மென்மையான வரிகள் ...... அந்தப்பட்டாம் பூச்சி போன்றே ;))))))
தனக்கும் பிறருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிப்பவனாக மனிதன் இருக்கிறான்.
தனக்கும் பிறருக்குமான நெருக்கத்தைத் தீர்மானிப்பவைகளாக விலங்குகள் இருக்கின்றன....
ஆம் அய்யா யோசித்துப் பார்த்தால் உண்மைதான்
நோபெல் பரிசுக்கு உடனடியாகச் சிபாரிசு செய்கிறேன்.
(ஒபாமா வாங்கிய நொண்டிப்பல் பரிசு உங்களுக்குத் தேவையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்)
காட்சியும் கீழ் வரிகளும் யதார்த்த அழகு. நோபல் பரிசா.. எங்க அன்பா எது பெருசுன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க
கருத்துரையிடுக