4.7.11

யானை



1.
இருப்பதிலேயே
துயரமானது
யானையையும்
ரயிலையும்
முழுமையாய்ப்
பார்க்கமுடியாது
என்பது.

2.
யானை பார்த்தல்
என்பது
நிலா பார்த்தல்
போலல்ல.
யானையைப்
பார்க்க
நீ போகாவிடில்
யானை உன்னைப்
பார்க்க வராது
நிலாவைப் போல.

3.
ஒவ்வொரு தலையிலும்
துதிக்கை
பதிக்கும்போதும்
யானை
தன் காட்டை
நினைக்கிறது.
பாகன்
தன் வீட்டை
நினைக்கிறான்.

4.
பாகனின் மொழியும்
சங்கிலியும்
அங்குசமும்
பழகிய யானை
ஒரு எலி.

5.
இரவுகளில்
அச்சமூட்டுகிறது
யானையை-
அது பள்ளத்தில்
சிக்கிக்கொண்ட கனவு.
பாகனை-
பள்ளத்தில் சிக்காது
அவனைத் துரத்துவதான
கனவு.

-நன்றி- கல்கி

37 கருத்துகள்:

குணசேகரன்... சொன்னது…

பதிவு அருமையாக இருக்கிறது.
என்னோட வலைப்பக்கமும் கொஞ்சம் வந்திட்டு போங்க பாஸ்..

ஹேமா சொன்னது…

யானைபற்றின சிந்தனை.யானையை நிறையத்தரம் பாத்திருக்கேன்.
உண்மைதான் ஒரு நாளும் முழுசா பாக்கமுடியலதான் !

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

தற்போது யானையும் மனிதர்களைப் பார்க்க, காடு தாண்டி வருகிறது!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

யானையைப்பற்றி யானை அளவுக்கு பலவித ஆராய்ச்சிகள் செய்து பகிர்ந்துள்ளிர்களே, சார், நீங்கள் பதிவுலகில் இருப்பது எனக்கு யானை பலம் தருவதாக உள்ளது.

பாராட்டுக்கள். பெரிய யானையாக இருப்பதால் மீண்டும் வருவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

இல்லை ரம்மி.காடுகள் குறைந்துபோனதாலும்-வழி தவறுவதாலும்.மனிதர்களை விரும்பி அவை பார்க்கவருவதில்லை.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அதே போல இதுவரை யானையை ஒரு ஆயிரம் முறையாவது நான் என் ஓவியங்களில் வரைந்திருப்பேன். இருப்பினும் முழுமையாக வரைய முடிவதில்லை. முன்பக்கமோ, பின்பக்கமோ, சைடு போஸிலோ தான் வரைந்து காட்டமுடியும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

யானை இவ்வளவு பலசாலியாக இருப்பினும்,

என்னைப்போல சுத்த சைவம் அது,

பொறுமையாக சத்தியத்திற்கு கட்டுப்பட்டதாக உள்ளது,

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல யானைக்கு மதம் பிடித்தால் போச்சு, தூக்கிப்போட்டு மிதித்து விடுகிறது, சமீபத்தில் ஓட்டளித்த தமிழக மக்களைப்போலவே,

யானைக்கு நல்ல ஞாபக சக்தியுண்டாம்.

குண்டூசி போன்ற சிறு பொருட்களைக்கூட தன் துதிக்கையால் எடுத்து விடும் அளவுக்கு பூதக்கண்ணாடி பார்வையும் உண்டாம்.

அதன் கண்களுக்கு மனிதர்கள் மிகப்பெரிய உருவம் கொண்டவர்களாகத் தெரிவார்களாம்.

இதெல்லாம் நான் கேள்விபட்டது.

துதிக்கையைத்தலையில் வைத்தாலே ஒரு அதிர்வு ஏற்படுகிறது.

அதே நேரம் அது மூச்சுவிட்டால் முடியெல்லாம் பறந்துவிடும் போல உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

காஞ்சீ மஹாஸ்வாமிகளை தரிஸிக்க பலமுறைகள் நான் போனதுண்டு.


அதில் ஒரு முறை சென்றபோது சாயங்காலம் கோ பூஜையும், கஜபூஜையும் நடைபெற்றது.

மடத்தில் நடந்த ஒரு பழைய கதையை, தரிஸனத்திற்கு வந்திருந்த வேறொரு பெரியவர் கூறினார்:

ஒரு நாள் மடத்து யானையொன்று எங்கோ உலாவச் சென்றபோது, ஒரு முள்ளுக்காட்டில் மாட்டிக்கொண்டு, உடம்பு பூராவும் ஒரே முள் தைத்துக்கொண்டு விட்டதாம். கண்ணீர் விட்டு அழுததாம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு செய்தி சென்றதாம். 10 படி டின் அளவு மொத்தம் 10 டின் நல்லெண்ணெயை, அதன் உடம்பில் ஊற்றச்சொல்லி உத்தரவாகி விட்டது.

பாகனுடன் பக்தர்களும் சென்று அது போலவே செய்தார்களாம். ஒரு மணி நேரம் ஊறட்டும் என்று விட்டு விட்டார்களாம்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து அதை குளத்திற்கு கூட்டிச்சென்று குளிப்பாட்டி கூட்டி வரச் சொன்னார்கள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள்.

சரியாக ஒரு மணி நேரம் சென்றதும், சிறுமலை என்ற எஸ்டேட் அதிபர், ஒரு லாரி நிறைய சிறுமலை வாழைப்பழங்களைக் கொண்டு வந்திருப்பதாகவும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாப்பெரியவா ஸ்ரீ மடத்து பூஜைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லி நமஸ்கரித்தாராம்.

அவரை ஆசீர்வதித்த மஹா ஸ்வாமிகள் அந்தப்பழங்கள் அந்த லாரியுடன் இங்கேயே இருக்கட்டும். லாரியை மட்டும் நாளை காலையில் எடுத்துப்போகலாம் என்று சொன்னாராம்.

குளித்து விட்டு உடம்பிலுள்ள முட்கள் யாவும் சுத்தமாக நீங்கிய நிலையில், ரணப்பட்ட அந்த யானையை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் கூட்டி வந்தார்களாம்.

அந்த யானையை அப்படியே அந்த லாரி அருகே கூட்டிச்சென்று, பழங்கள் அத்தனையும் சாப்பிட ஏற்பாடு செய்தாராம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள்.

என்னவோ இந்தத் தங்கள் பதிவைப்பார்த்ததும் இதை தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.

தனிப்பதிவாகவே போட்டிருக்கலாமோ!

நெல்லி. மூர்த்தி சொன்னது…

யானையைக் குறித்து இப்படி ஒரு அருமையான கவிதையினை நான் எதிர்பார்க்கவில்லை! வாசித்ததும் ஒரு வித மனநிறைவினை தந்தது!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

யானை....

சிறு வயதில் பயத்துடன் வாங்கிய தும்பிக்கை ஆசீர்வாதம் நினைவுக்கு வருகிறது...

4ம், 5ம் நிதர்சனம்.....

Ramani சொன்னது…

யானை, ரயில், ரோடு ரோலர்
இவைகள் எல்லாம் எத்தனை முறைப் பார்த்தாலும்
மீண்டும் ஒருமுறை யாரையும் பார்க்கச் சொல்லும் காரணம்
அதன் பிரமாண்டம் மட்டும் அல்ல
எல்லோரும் அதன் மூலம் மீண்டும் ஒருமுறை
குழந்தைப் பருவத்தை அடைந்துவிடுகிறோம்
மனங்கவர்ந்த பதிவு

முரளிகுமார் பத்மநாபன் சொன்னது…

2, 3, 4,அப்புறம் 1, 5 எல்லாமே நல்லா இருக்கு போங்க.. :-)
2 ஸ்பெசல் எனக்கு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

யானையின் தன்மையை அபாரமாய் வடித்த கவிதைகுப் பாராடுக்கள். வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... சொன்னது…

ஆக, யானையைக் கொஞ்சம் பார்த்து விட்ட மாதிரி இருக்கிறது ...நல்ல கவிதை.

மிருணா சொன்னது…

இந்த கவிதை கூட யானையை அதன் ஒவ்வொரு பரிமாணமாகப் பார்க்கிறது. ஆனால் அழகாகப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு கோணமும் அருமை.

க ரா சொன்னது…

கவிதையை படிக்கும் போது விநாயகமுருகனின் கோயில்மிருகம் கவிதைதொகுப்பு நியாபகத்திற்கு வருகிறது சுந்தர்ஜீ.. அனைத்தும் அருமை ...

Matangi Mawley சொன்னது…

# 3 & # 5-- அருமை!

எங்க ஸ்ரீரங்கம் யானை ஞாபகம் வந்துடுத்து!

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

அருமையான கவிதைகள். நானும் கூட எனது வலையில் ஒரு யானைக் கவிதை எழுதியிருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும் http://vidyasubramaniam.blogspot.com/2010/12/blog-post.html

ஹ ர ணி சொன்னது…

கல்கியில் யானை வாழ்க்கை என்று ஒரு கதை எழுதினேன். யானை பற்றி நினைத்தலே சுகம். உங்கள் கவிதை சுகத்தின் சுகம். பாரதியைத் தாக்கிய யானையை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வருகைக்கும் பின் தொடர்தலுக்கும் நன்றி குணா. உங்கள் வலைப்பதிவுக்கும் வந்தேன்.

சுந்தர்ஜி சொன்னது…

முழுசா உண்மையை ஒத்துக்க யானையளவு பெரிய மனசு வேணும்.யானையை முழுசா நானும் பார்த்ததில்லை ஹேமா.நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கோபு சார். யானை சைஸுக்கு நீங்களும் நிறைய ஒரு பதிவு போலப் பின்னூட்டம் போட்டுடீங்க. காஞ்சிப் பெரியவரைப் பற்றிச் சொன்ன சம்பவம் மனதைத் தொட்டது.மஹான்கள் எல்லா உயிரையும் சமமாய்ப் பாவித்த காரணத்தினால்தான் மஹான்களாய் வாழ்ந்தார்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி நெல்லி மூர்த்தி.

நானே இப்படி ஒரு கவிதை எழுதுவேனென்று எதிர்பார்க்காத போது பிறந்த கவிதை இது. சற்றேறக்குறைய நம்மையறியாமலே ஒரு கர்ப்பம் தரிப்பது போல.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வெங்கட்.

யானையின் துதிக்கை மொத்தென்று தலையில் படும் அநுபவமே ஒப்புமை இல்லாதது. தும்பிக்கையின் மணமும் தனி.

சுந்தர்ஜி சொன்னது…

ரமணியண்ணா!நீங்கள் சொன்ன வரிசை எல்லோரையும் கவர்ந்த காரணத்தையும் சொன்ன விதம் அழகு.

சுந்தர்ஜி சொன்னது…

முதல்ல மூணு அப்புறம் ரெண்டு ஆக மொத்தம் அஞ்சு நன்றி முரளி உங்களுக்கு.நீங்கள் எழுதிய கடவுள் இருந்துவிட்டுப் போகட்டுமே ஒரு நல்ல காத்திரமான பதிவு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி இராஜராஜேஸ்வரி. உங்கள் ரசனை என்னை மகிழ்வித்தது.

சுந்தர்ஜி சொன்னது…

கொஞ்சமாய்ப் பார்த்தாலும் ஆழமாய்ப் பார்க்கிறது உங்களின் பார்வை. நன்றி ஜனா சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மிருணா.உங்களின் யானை பார்த்தலும் கோணமும் அழகு.

இந்தக் கவிதை மறுபடியும் படிக்கும் போது உங்களின் யானை கவிதை நினைவுக்கு வந்தது.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ராம்ஸ் உங்கள் வாழ்த்துக்கு.விநாயகமுருகனின் கவிதையை வாசிக்கவில்லை.வாசிக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரத்னவேல் ஐயா தொடர் வாசிப்புக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மாதங்கி. இதுவும் ஸ்ரீரங்கம் யானைதான்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வித்யா.உங்கள் யானைக் கவிதையையும் வாசித்துப் பின்னூட்டமிட்டேன் நேற்று.நல்ல கவிதை.

சுந்தர்ஜி சொன்னது…

அந்தக் கதையையும் பதிவிடலாமே ஹரணி.

பாரதியைத் தூக்கியதும் தாக்கியதும் அதே யானைதான்.என்ன செய்வது?

Vel Kannan சொன்னது…

ஐந்தும் அருமை ஜி
இனி யானை பார்க்கும் போதெல்லாம் இவைகளும் நினைவிற்கு வரும்

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வேல்கண்ணன். அடிக்கடி யானையைப் பாருங்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...