தஞ்சாவூர்க்கவிராயர் - எதிர்பாராத நேற்றிரவின் மழை போல - இன்று மாலை மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார். அவரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்த எல்லா நண்பர்களுக்கும் மெல்லிய குரலில் தன்னுடைய நெகிழ்வான நன்றிகளைத் தெரிவிக்கச் சொன்னார்.
இன்னும் சில மாதங்களில், அவர் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார். அவரின் செல்லப் பேரன்களையும், வீட்டு மரங்களையும், செடிகளையும் பத்து நாட்களுக்குப் பின் இன்று அவரால் தொட்டு உணர முடியும். அவைதான் அவரின் சிகிச்சைக்குப் பிந்தைய நாட்களுக்கான அருமருந்து.
கவிராயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோதும், சிகிச்சையில் இருந்தபோதும் அன்புடன் ப்ரார்த்தித்துக்கொண்ட, பரிவுடன் விசாரித்த அத்தனை நண்பர்களுக்கும் மனதின் ஆழத்திலிருந்து நன்றி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹிந்துவில் டி.வி.எஸ். 1957ல் வெளியிட்ட முதல் விளம்பரத்தில் எத்தனை ஸ்வாரஸ்யங்கள் மறைந்திருக்கின்றன. பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1987ல் எம்.ஜி.ஆர். ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது அவரின் உடல்நிலை குறித்து உண்டான புரளிகளை மறுக்க வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்று.(இதைப் பார்த்திராத தலைமுறைக்காக இது)
6 கருத்துகள்:
எல்லா பகிர்வுகளும் மகிழ்ச்சியையே உள்ளடக்கியிருக்கின்றன சுந்தர்ஜி சார். சென்ற வார கொஞ்சம் தேனீர், கொஞ்சம் கவிதை நிகழ்ச்சியில் (பார்த்துவிட்டதில் இன்னும் மகிழ்ச்சி)கவிராயரை கவனித்தேன் அவரிடமிருக்கும் அத்தனை உற்சாகமும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. அவரிடம் உரையாட ஆவலாயிருக்கிறேன் சுந்தர்ஜி சார்.
பள்ளிப் பிள்ளைகள் வீடு திரும்பல் போலும், திரவியம் தேட திரைகடலோடியவர்கள் மீண்டும் தம் சுற்றத்தோடு இணைதல் போலும் குதூகலிக்கிறது மனசு கவிராயர் உடல் தேறி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புதல்! மகிழ்வும் நன்றியும்!
கவிராயர் அவர்கள் நலமுடன் வந்தது மன நிறைவைத் தந்தது... விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுகிறேன்...
தலைவர் படத்தை மறக்க முடியுமா...?
santhosham...:)
டி.வி.எஸ். விளம்பரம் பார்த்து மகிழ்ச்சி. சமீபத்தில் 1949-ஆம் ஆண்டு வெளிவந்த ப்யூக் ஸூபர் கார் விளம்பரம் [டி.வி.எஸ்] பார்த்தேன்....
விரைவில் எனது பக்கத்தில் பகிர்கிறேன்..
மகிழ்ச்சி.
+2 படித்துக் கொண்டிருந்த சமயம் ஊரெங்கும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி
கருத்துரையிடுக