இந்தக் குறிப்புகள் மற்றும் கதைகள் அவர் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் எழுதியவை. இவை பல்வேறு பத்திரிகைகளில் போர்ச்சுக்கீஸிய மொழியில் வெளியானது.
அவரின் எழுத்துக்களில் தொனிக்கும் தத்துவச் சுவை தனித்தன்மையானது. வாக்கியங்களின் அமைப்பில் எளிமை, சிக்கனம் இவரின் மற்றொரு அற்புதம்.
இன்றைக்கு நான் மொழிபெயர்த்த இந்த சிந்தனையின் வீச்சை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்:
ஒரு ஆஸ்ட்ரேலியரும் தினசரி விளம்பரமும்:
ஸிட்னி துறைமுகத்தில் நகரத்தின் இருபகுதிகளை இணக்கும் அழகான பாலத்தை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஆஸ்ட்ரேலியர் கையில் ஒரு செய்தித்தாளுடன் என்னிடம் வந்து, அதில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை என்னை வாசிக்கச்சொன்னார்.
“எழுத்து மிகவும் சிறியதாக இருக்கிறது. என்ன அச்சிட்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார்.
நானும் முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் நானும் என் கண்ணாடியை எடுத்துவர மறந்திருந்தேன். அவரிடம் இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தேன்.
“ ஓ! அதனால் பரவாயில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கடவுளுக்கும் பார்வைக்கோளாறு இருக்கிறது. அவர் முதியவராகி விட்டதால் அல்ல. ஆனால் அப்படிக்காட்டிக்கொள்ளத்தான் அவர் விரும்புகிறார் என நினைக்கிறேன். அதனால்தான், யாராதொருவர் ஏதாவது ஓர் தவறிழைத்தால் அதைத் தன்னால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அதனால் அவரை மன்னித்துவிடுகிறேன் என்று சொல்லித்தப்பித்துக் கொண்டு விடுகிறார். அவரின் முடிவு அநீதியாய்ப் போவதை அவர் விரும்புவதில்லை”
“ அப்படியானால், யாராவது ஏதாவது நல்லது செய்யும்போது?”
அந்த ஆஸ்ட்ரேலியர் சிரித்தபடியே “ கடவுள் ஒரு போதும் தன் கண்ணாடியை வீட்டில் மறந்து வைத்து விட்டு வருவதில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
3 கருத்துகள்:
அழகானதொரு சிந்தனை.
கருத்துரையிடும் பக்கத்தில் உள்ள வாசகம் "மௌனம் அவிழ்ந்த ஒரு வார்த்தைக்காக" மிக அருமை!!!
அவரின் முடிவு அநீதியாய்ப் போவதை அவர் விரும்புவதில்லை”
இந்த நம்பிக்கையில்தானே அச்சு சுழல்கிறது
நன்றி ஜி! எங்களுக்கான நல்லனவற்றைத் தரும் அக்கறைக்கு!
கருத்துரையிடுக