1.9.12

ரமணனும், கவிராயரும் பின்னே ஞானும்

நாளை ஞாயிறு மதியம் 1 மணிக்குச் சாப்பிட்ட பின் தூங்குவதற்கு பதிலாக ரிமோட்டை எடுத்துப் பூச்சி பறக்கும் பொதிகை தொலைக்காட்சி நிலையத்தைத் தூசு தட்டி ட்யூன் பண்ணிக்கொள்ளவும்.

வேறொன்றுமில்லை.

அடுத்த அரை மணிநேரத்தில் அடுத்த அரைமணி நேரத்துக்கு தலைப்பில் மலையாளத்தில் உள்ள மூவரும் தமிழில் கவிதைகள் பற்றி ”கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீரு”க்காக அரட்டை அடிக்கிறோம்.

கவிராயர் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை முடிந்து தேறிவருகிறார். அவர் சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னால் பதிவுசெய்யப் பட்ட நிகழ்ச்சி இது. ஒவ்வொரு ஞாயிறும் தன் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதைக் காணக் காத்திருந்தார்.

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது அவரால் பார்க்கமுடியாதபடிக்கு ICUவில் இருக்கிறார். அவரால் பார்க்க முடியுமா? முடியாதா?

தெரியவில்லை.

நீங்கள் அவசியம் பொதிகையின் பூச்சிகளுக்கு நடுவே, எங்கள் மூவருக்கும் இடையே கவிதைகளையும் ரசியுங்கள்.

ஞாயிறு..............மதியம்.................1.30-2.00 மணி வரை.............நாளை................கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்.

11 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஆஹா .. சந்தோஷமாய் காத்திருக்கிறோம்..

vasan சொன்னது…

தவிப்போடு ஒரு காத்திருப்பு!
ம‌க‌ப் பேறு ம‌ருத்துவ‌ம‌னை வாச‌லில்
விழித்திருக்கும் உற‌வுக‌ளில் ஒருத்த‌னாய்,
நாளை ப‌னிமுட்ட‌முட‌ன் தோன்றும் பொதிகைக்காய்.

க‌விராய‌ரிட‌ம் ப‌கிர்ந்திராத‌ விச‌‌ய‌ங்க‌ளையா
"கொஞ்ச‌ம் தேநீரில்" சொல்லிவிடப் போகிறீர்க‌ள்.
நீங்க‌ள் இருவ‌ரும் தான் டெலிப‌தியில் பேசுப‌வ‌ர்க‌ளாயிற்றே!!

அப்பாதுரை சொன்னது…

செய்தியே சந்தோஷம் தான்.

ரவிஉதயன் சொன்னது…

சுந்தர்ஜி! கவிராயர் நலம் பெற பிரர்த்திக்கிறேன். நாளைமதியம் உங்களோடும், கவிராயர்,கவிரமணரோடும்.பின்னே ஞானும்

விமலன் சொன்னது…

கண்டிப்பாக ரசிக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்க்கிறேன் சார்... கவிராயர் அவர்கள் விரைவில் குணமடைந்து வருவார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பார்க்கிறேன் ஜி.

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! கவிராயர் தேறிவருவது மகிழ்ச்சியான செய்தி! இப்போது பொதிகையில் கண்ணதாசன் மகள் சமையல் குறிப்பு சொல்லி வருகிறார். காத்திருக்கிறேன்.. ஏதும் சொதப்பினீரோ... தெரியும் சேதி!

Matangi Mawley சொன்னது…

The way Mr. Ramanan catches the soul of a poetry read out- and harnesses the flow of the discussion- is awesome! His voice is really great too... Kavirayar's poetry about "Running, out of habit..." was witty yet seasoned with layers of thoughts! His poetry on his father's cough too was vivid and poignant...
Death stays alive even after the dead passes on-- a brilliant thought!
A race out there--- clock's ticking away--- sounds and voices filling the mind that refuses to think--- and amidst all that, there is a show- that let's you pause for a while and take a good, luxurious look at life through poetry! Oh yes- and a cup of tea! Ah, bliss!

சித்ரா வெங்கி சொன்னது…

நிகழ்ச்சி மிகவும் அருமை. நீண்ட நாள் கழித்து உங்களைப் பார்த்ததும், உங்கள் கவிதைகளைக் கேட்டதும் மிக்க மகிழ்ச்சி.

G.M Balasubramaniam சொன்னது…

ரமண்ன், கவிராயர் பின்னே நிங்ங்ளையும் கண்டு. கவிதை போன்ற விஷயங்களைப் பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என நினைக்கிறேன். கவிராயரின் பக்கவாட்டுப் பகுதியே காண்பிக்கப் பட்டது. அவரை நேராகப் பார்க்கமுடியவில்லை. ( ரமணனையும் உங்களையும் பார்க்க முடிந்த அளவு.)அவரும் இந்நிகழ்ச்சியைப் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை ரெகார்ட் செய்ததையாவது காட்டுங்கள். நிகழ்ச்சியின் முழு நேரமும் அவர் உடல் தேறி வர வேண்டும் என்றே பிரார்த்தனை. நன்றி சுந்தர்ஜி. நிகழ்ச்சி பற்றி முன்பே தெரிவித்ததற்கு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...