24.9.12

விடியும் தருணம் - பாவ்லோ கோயெலோ - 3-

பாவ்லோ கோயெலோ தாவோஸ் உச்சிமாநாட்டில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதிய குறிப்பு இன்றைக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விடியும் தருணம். 

தாவோஸில் நடந்த உலகப் பொருளாதார உச்சிமாநாட்டின் போது அமைதிக்கான நோபெல் விருது பெற்ற ஷிமோன் பெரெஸ்(Shimon Peres- שמעון פרס ) ஒரு குட்டிக்கதை சொன்னார்.

ஒரு Rabbi (யூத துறவி ) அவருடைய சீடர்களுடன் உரையாடுகையில் அவர்களிடம் கேட்டார்:

“ இரவு முடிந்து உதயமாகும் அந்தச் சரியான தருணத்தை எப்படி நாம் அறிந்துகொள்ளலாம்?”

”ஒரு நாய்க்கும் ஆட்டுக்கும் வித்யாசம் காட்டக்கூடிய ஒளி வந்த நேரம்” என்றான் ஒரு சீடன்.

“ இல்லை. ஃபிக் மரத்துக்கும், ஆலிவ் மரத்துக்குமான வேற்றுமை தெரியக்கூடிய தருணம்” என்றான் இன்னொரு சீடன்.

“அதுவும் சரியான தருணம் அல்ல”

“அப்படியானால் எதுதான் சரியான தருணம்?” என்று கேட்டார்கள் சீடர்கள்.

அந்தத் துறவி சொன்னார்:

“ எப்போது ஓர் அறிமுகமில்லா அந்நியன் நம்மை அணுகும்போது அவனை நம் சகோதரனாக நாம் நினைக்கிறோமோ, எப்போது எல்லா சிக்கல்களும் மறைகிறதோ, அந்தத் தருணத்தில்தான் இரவு மறைகிறது. உதயம் மலர்கிறது.”

7 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…


அப்படியானால் பெரும்பாலோர் உதயம் ஆவது தெரியாமலேயே இருக்கிறார்கள்.

RVS சொன்னது…

இருள் விலகும் நேரம் புரிந்தது ஜி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கதை... முந்தைய பகிர்வையும் படிக்கிறேன்... நன்றி...

Matangi Mawley சொன்னது…

Good that I've caught up! Like they say- "The man in Kashi knows not the value of Ganga"- I was too caught up to follow blogs when in Chennai- yet now, sans power, with a slow mobile connection- I am being too enthusiastic about catching up on blogs... In this cognitive dissonance, I found a perfect sync in the 1st post in the series! I esp. liked the Aus. man's insight into working of God's mind. Isn't it awesome how people's imagination works when they try and interpret the unknown? Reminded me of Appa-paatti- she used to remark- "Yaman en seetta tholachchittaan polarukku"! As simple as that...! Brilliant translations... Can't even imagine how such complex thoughts could be written so well in Tamil!

மாற்றுப்பார்வை சொன்னது…

supper

நிலாமகள் சொன்னது…

இனிய‌ உத‌ய‌ம்! எத்த‌னை பேருக்கு சாத்திய‌ம்?!மொழிபெய‌ர்ப்பின் அத்தியாவ‌சிய‌ம் வெளிச்சமாகிற‌து த‌ங்க‌ள் ப‌திவுக‌ளில்!

ஆ.செல்லத்துரை. சொன்னது…

இதையேதான்,”உன்னைப்போல் உன் அயலானையும் நேசி” என்று ஜீசஸ் சொல்கிறார். விடியலின் உவமானம் உன்னதம். கவித்துவமான கதை.நடுவுல ஒரு சின்ன பிட்டு.ஜனங்களுக்கு இப்போல்லாம் முகம்தெரியாத அன்னியன்கிட்ட கொஞ்சம் அன்ப காட்டுறதுல எந்த பிரச்சனையுமிருக்கிறதா தெரியல! ஏன்னா அவன் நம்ம கூடவே இருக்க போறதில்ல. எதிர் வீட்டுக்காரங்கிட்டயும்,பக்கத்து வீட்டுகாரங்கிட்டயும் சொந்த பங்காளிகிட்டயும் அன்ப காட்டுறதுதான் பெரிய பிரச்னையா தெரியுது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...