30.9.11

ஹரிஹரனின் தர்த் கே ரிஷ்தே



(இந்தப் பாடலின் துவக்கத்திலும் முடிவிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது என்ன என்பது மற்றொரு ரகசியம். அதைப் பின்னூட்டத்தில் மட்டுமே சொல்லுவேன் ஒரு வாரத்துக்குப் பின்.)

பார்வையற்ற ஒரு யாசகனான நான் ஊரெல்லாம் உறங்கும் ஓர் நள்ளிரவில் ஆட்களற்ற ஒரு கோயிலின் வாசலில் அமர்கிறேன்.

என் அருகில் இருக்கும் அந்த நாய் சற்றுமுன் ஈன்ற தன் குட்டிகளை அரவணைத்து நாவால் நக்கி நக்கி அவற்றிற்குக் கதகதப்பூட்டிக்கொண்டிருப்பதை என் காதுகளால் உணரமுடிகிறது.எனக்கான அதன் குரலில் தன்னைப் பற்றி என்னிடம் சொல்ல அதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.

குட்டிகளை ஈன்று பெரும் பசியிலும் தாகத்திலும் இன்றைய நாளை அது கழித்திருக்க வேண்டும். எத்தனை கொடுமை பசியின் விஷ நாக்கால் தீண்டப்படுவது என்பதை நான் நன்கறிவேன்.

என் இரவு உணவுக்கென நான் பத்திரப்படுத்தியிருந்த  அந்த காய்ந்த ரொட்டியைப் பையில் இருந்து எடுத்து அதற்கு உணவாய் அளித்தேன். நன்றி சொல்லியபடியே பசியின் ஆவலாதியை வெளிப்படுத்தியபடியே உண்டு தீர்த்தது.

மூலையில் கிடந்த வட்டிலில் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி வைக்க அதையும் குடித்து முடித்து என்னை ஒரு முறை நக்கிக் கொடுத்துவிட்டுக் குட்டிகளிடம் சேர்ந்துகொண்டு அவற்றிற்குப் பால் புகட்டத் தொடங்கியது. 

பசியும் இரவும் என் மேல் இரக்கமின்றிக் கவிழ மெதுவாய் விரிகிறது ஹரிஹரனின் தர்த் கே ரிஷ்தே. உடன் என் வயிற்றுப் பசி போல உருள்கிறது ஸாகீர் ஹுஸைனின் தபேலா.

9 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பாடல்.... இரவு மீண்டும் கேட்கிறேன்....

ரிஷபன் சொன்னது…

என் அருகில் இருக்கும் அந்த நாய் சற்றுமுன் ஈன்ற தன் குட்டிகளை அரவணைத்து நாவால் நக்கி நக்கி அவற்றிற்குக் கதகதப்பூட்டிக்கொண்டிருப்பதை என் காதுகளால் உணரமுடிகிறது.எனக்கான அதன் குரலில் தன்னைப் பற்றி என்னிடம் சொல்ல அதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.

இசையில் தொலைகிறது மனசு.

மோகன்ஜி சொன்னது…

தர்த் கே ரிஷ்தே பாடலை நீங்கள் தந்திருக்கும் விதம் மனசில் சுற்றி சுழன்றாடிக்கிறது. வாழ்க்கையின் கவிதைக் கணங்கள் எங்கெல்லாம் பொதிந்திருக்கிறது? உங்கள் விடுகதையை யோசிக்கிறேன்...

இரசிகை சொன்னது…

oru vaarathil solliduveengathaane...??

:)

sollunga.

வானம்பாடிகள் சொன்னது…

class. thanks

ஆர்.சண்முகம் சொன்னது…

//இந்தப் பாடலின் துவக்கத்திலும் முடிவிலும் ஒரு ரகசியம் இருக்கிறது//

துவக்கத்தில் தான் பாடல் ஆரம்பம் ஆகுது,
முடிவில் தான் முடியுது.
இது தான் ரகசியமா பாஸ்,,,

raji சொன்னது…

thanks for sharing

சுந்தர்ஜி சொன்னது…

//இந்தப் பாடலின் துவக்கத்திலும் முடிவிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது என்ன என்பது மற்றொரு ரகசியம். அதைப் பின்னூட்டத்தில் மட்டுமே சொல்லுவேன் ஒரு வாரத்துக்குப் பின்//

எந்த ரகசியமும் இல்லை.அப்படியாவது பாட்டைக் கேட்க வைத்துவிடலாம் என்று ஒரு ப்ரயத்தனம்தான்.

ரொம்பவும் எதிர்பாத்தீங்களோ? சாரி மோகன்ஜி-ரசிகை.

நன்றி-
வெங்கட்
ரிஷபன்
மோகன்ஜி
ரசிகை
வானம்பாடிகள்
சண்முகம்
ராஜி.

Anonymous சொன்னது…

ஹரிகரனின் பனிக்குழைவு
உங்கள் எழுத்துக்களிலும் ஒளிர்கிறது.தொடருங்கள் இனிய இடுகைகளை.வாழ்த்துக்கள்.நேசமிகு... எஸ்.ராஜகுமாரன்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...