எந்த நேரத்தில் போன இடுகைத் தலைப்பை எழுதினேனோ தெரியவில்லை.
விலகிச் சென்ற ஜனவரி 4ம் தேதிக்குப் பின்னால் எதிர்பார்த்த எதுவும் நிகழாமல் எதிர்பாராதவைகள் நிகழ்ந்தன.
ஜனவரி 20ம் தேதி வழக்கம் போல் எனக்குப் புலரவில்லை. எழுதுபவனுக்கு மிக அவசியமான முதுகின் தண்டுவடம் (L 4- 5) விலகியும், சிதைந்தும் போனதில் என்னால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை.
தமிழின் மேல் அதீத ஆர்வம் கொண்டு அலையும் நான் உருவத்திலும் பொருத்தமாக ஔவை போல் ஆனேன்.
அறுவைச் சிகிச்சைதான் இதற்கு ஒரே மாற்று என்று சொன்ன ஒரு ப்ரபல மருத்துவரின் அறிவுரையைத் தவிர்த்துவிட்டு, நிறைந்த வலியுடனும், நம்பிக்கைகளுடனும் சித்த மருத்துவ மனையில் அனுமதி பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வர்மம், தொக்கணம், கஷாயங்கள், சூரணங்கள் , மருத்துவர்கள் காட்டிய அதீத பரிவு இவற்றால் அதியமானாக மறுபடி சீரானேன்.
எனக்கு நானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டினால் மார்ச் முடியும் வரை கணினி முன்னால் உட்கார அனுமதி மறுத்தேன்.கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன. மெதுவாய் வாசிக்கலாம்.
எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், உதவிய செவிலியர்களுக்கும் அவர்களுக்கு மருந்து அளித்து உதவிய திருமூலர், அகத்தியர் துவங்கி சகல சித்தர்களுக்கும் நன்றிபா.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை இத்தனை நாட்கள் ஓய்வை நான் ருசித்தவனில்லை. படுக்கையிலும் படுத்தவன் இல்லை. நிறைய வாசிக்க முடிந்தது. வாசிக்க வாசிக்க நான் இதுவரை எழுதியது ஒன்றுமில்லை என்ற உண்மை பட்டவர்த்தனமானது.
எனக்கு நிறைய நண்பர்கள் பல்வேறு கட்டங்களிலும் உதவியாய் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என் ஈரமான நன்றிகள்.
இனி எழுதுவதன் வேகத்தையும், அவசியத்தையும் எழுத்து தீர்மானிக்கட்டும். பழைய நம் தொடர்பு மீண்டுவிட்டது என்ற ம்கிழ்ச்சியுடன் இன்று நான் உறங்குவேன்.
21 கருத்துகள்:
மகிழ்ச்சி..கடவுளுக்கு நன்றி ....ஓராயிரம் நன்றி...தேவையான ஓய்வு கொண்டு தேறிய பிறகு
வேண்டிய எழுத்தை வடிக்கலாம்...பொறுமையாகக் காத்திருக்கிறோம்
உடல்நலன் நன்கு தேறி வர வாழ்த்துக்கள்.
//வாசிக்க வாசிக்க நான் இதுவரை எழுதியது ஒன்றுமில்லை என்ற உண்மை பட்டவர்த்தனமானது. //
அடிக்கடி நான் உணர்வது.
மீண்டும் பதிவுலகுக்கு வருகை எனக்கு மட்டற்ற ம்கிழ்ச்சி தருகிறது.என்னவாயிருந்தாலும் உடல் நலம் பேணுங்கள்.
Get Well soon.
கடவுளே...! வேறு தளத்தில் வேறு விதமாய் பரிணமித்து ஒளி ஏற்றுவதாய் நினைத்திருந்தோம்...
மீண்டது (உடல்நலமும்) நிம்மதி.
அடடா....
தற்போது குணமடைந்ததில் மகிழ்ச்சி.
தொடரட்டும் சந்திப்புகள்.
எல்லாம் வல்ல ஈசன் உங்களுக்கு பூரண நலம் அளிக்கட்டும்.
உடம்பை மேலும் நலமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்... மற்றவை அப்புறம் தான்..
Welcome back! :)
விரைவாக நலமடைய வாழ்த்துக்கள்
கடவுள் அனுக்கிரஹம் தான் தங்களை மீட்டுள்ளது.
உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.
சற்றே விலகி ...
மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி..!
விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்..
terrible..terrible..terrible.
terrible!
மெதுவாக எழுதங்களேன் ...அதனாலென்ன....உடம்பை நன்றாகப் பார்த்துக் கொண்டு பிறகு எழுதலாம் ...மேலும் தங்களுக்கு
எழுத்து வேறு..சுவாசம் வேறா என்ன ?
பணி நிறைந்த ஓய்வு.
அன்புள்ள சுந்தர்ஜி...
எல்லாம் நன்மைக்கே.
எந்த விலகலும் மறுபடியும் வெகு இறுக்கமுடன் உறுதியுடன் சேர்வதற்குத்தான் என்பதுதான் இயற்கை விதித்த விதி. அது உடலாக இருந்தாலும் சரி உள்ளமாக இருந்தாலும் சரி. விலகி இறுகும்போது அது பல்லாயிரம் மடங்கு சக்தியுடன் இணையும். அப்படித்தான் நீங்கள்.
அவசரமில்லை. நிதானம் காத்து மெதுவே எழுதுங்கள். காத்திருக்கலாம் நல்லதை வாசிக்க எப்போதும் தவ வலிமையுடன்.
"ஹு...ம்" ....ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு..
மீண்டு வந்தமைக்கும்,எழுத்துக்கும் வாழ்த்துக்கள்!
இத்தனை நாள் வரலைங்கறதாலே இந்தப் பதிவைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் வருத்தம் மேலிட்டது. இப்போப் பரவாயில்லைனு நினைக்கிறேன். மருத்துவமனை மற்றும் சிகிச்சை குறித்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன்படுமே. அல்லது அடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்களானு பார்க்கணும்.
சினிமாவுக்கெல்லாம் எழுதறீங்க போல, பெரிய ஆள் தான். ஆனால் பாருங்க இத்தனை நாட்கள் எனக்குத் தெரியாமலே போச்சு! நம்ம நண்பர்கள் எல்லாம் இங்கே அடிக்கடி வந்து பழகினவங்களா இருக்காங்க.
நல்லா இருக்கு பதிவின் வடிவமைப்பு. :)))
எனக்கான கோப்பையின் திரவமாய் உங்கள் அன்பு இருக்குபோது வேறென்ன வேண்டும்?
ஒவ்வொருவருக்கும் என் தனித்தனியான நன்றியும், அன்பும்.
கருத்துரையிடுக