தாமரையும் அல்லியும் பூத்துக்கெடந்த அந்தியில
தாபத்தோட காதலோட காத்திருந்தேன் கொளத்தருக.
தாமதமா வந்து நீயும் தயங்காம சொல்லிப்புட்ட
கெடைக்காத சம்மதத்த புள்ளத்தாச்சி சாகும்படி.
ஊருசனம் வாறித்தூத்த ஒபகாரம் செஞ்சுபுட்ட.
மீறி நான் என்ன செய்ய ஆயிப்புட்டேன் ஈருயிரா.
எத்தனையோ சொல்லிச்சொல்லி இறுமாந்து போயிருந்தேன்.
அத்தனையும் பொய்யாச்சே அய்யோ நா என்ன செய்வேன்?
ஆதரவா யாரிருக்கா அழுவாதன்னு சொல்லுதக்கு.
அரளியோ கயிறோ கெணறோ புரியலியே .
நாளக்கி நீ வானத்துல நல்லவனாப் பறந்திருப்ப.
நாதி கெட்ட மூதேவி மண்ணுல நா எறந்திருப்பே(ன்).
3 கருத்துகள்:
:(
slang nice.....!
என் கவிதையின் நாயகி (?) தான் இவளுமோ. என்ன பொருத்தம். வளவளன்னு நான் எழுதினதை நீங்க நச்ச்னு சொல்லிப்புட்டீங்க. அவளுக்கு வாழப் புடிக்கல . இவளுக்கு வாழ முடியல. அவ்வளவுதான்.
என்னோட பாத்திரங்கள் எல்லாம் கொஞ்சம் ஓவரா புலம்பராங்களோ ?
ஒங்களப் போல நானும் எழுதி இருக்கேன்னு பெருமையா சொல்லிக்கலாம்.
அப்படில்லாம் இல்லை சிவா.
நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம்னு சந்தோஷமா இருந்தது.
உங்களோடது என்னை விடவும் நல்லா இருந்தது.
கருத்துரையிடுக