I
கொஞ்சம் கொஞ்சமாய்
உங்களுக்கே தெரியாது
உங்களின் சமையலறை
களவாடப்பட்டது.
உங்கள் ருசி-
உங்கள் மொழி
அதல பாதாளப்
படுகுழியில் தள்ளப்
பட்டதும்-நுனிநாக்குத்
தமிழ் பரவியதும்
கொஞ்சம் கொஞ்சமாய்
வேர்கள் உருவப்பட்டதும்
எல்லாமே இழந்ததும்
கல்லறையின் நிசப்தமாய்
என்னை உலுக்குகிறது.
IIசமையலறை அழிந்து
மெல்ல மெல்லப்
படுக்கைஅறையும்
சுவர்களை இழந்தன.
வெட்கம் பிடுங்கும்
அருவெறுப்போடு
கைகளில் சுமக்கும்
ரிமோட்களைத் துரக்க
மனமின்றி வரவேற்பறைக்கு
படுக்கை அறையை
அனுமதித்து
அங்கலாய்க்கிறீர்கள்.
IIIமாறுதலைத் தவிர
எதுவுமே மாறாதது
என்றாலும்-
எது மாறியதோ
அது மாற்றப்பட்டது.
எது மாறாதிருக்கிறதோ
அது மாற்றமுடியாதது.
எது மாற்றப்பட்டபோதும்
மாற்றமடையாதிருப்பது
தீர்மானிக்கும்
என் வார்த்தைகளை.
3 கருத்துகள்:
//
.III
மாறுதலைத் தவிரஎதுவுமே மாறாததுஎன்றாலும்-எது மாறியதோஅது மாற்றப்பட்டது.எது மாறாதிருக்கிறதோஅது மாற்றமுடியாதது.எது மாற்றப்பட்டபோதும் மாற்றமடையாதிருப்பதுதீர்மானிக்கும்என் வார்த்தைகளை.
//
!!
atta boy
The "Change" remains unchanged since
The 'UNCHANGE' decides the change?
கருத்துரையிடுக