கடிக்கமுடியாத
கம்மர்கட்டைதம்மர்தட்
என்றே சொல்வான்
சின்னவன்.
கோககோலா
தோததோலாதான்.
தன்னுத்துட்டிதான்.
கொக்கு.
தாத்தாவா எனப்
புரிய
ஆகும் கொஞ்ச நேரம்.
படிக்கும்போதும்
சொல்லிச்சொல்லி
தாவன்னாவும்
பழகிக்கொண்டான்.
நான்
பிராயத்தோடு
தொலைத்த
தாவன்னாவையும்
துணைக்குவந்த
காவன்னாவையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக