9.8.11

திசைகாட்டி

I

”அன்றைக்கு 
அப்படித்தான்”
என்று துவங்கும்
வாக்கியங்களைப்
போலல்ல
”இன்றைக்கு” என்று
துவங்க
இருக்கிறவை.
இருப்பதிலும்
பேராபத்தானவை
”நாளைக்கு” என்று
துவக்கம் கொள்பவை.

II

இற்றுப்போன
கயிற்றைப் பற்றி
மலையேறிக்
கொண்டிருக்கிறவனை
நினைவுபடுத்துகிறான்
நாட்காட்டியின்
தாளைக் கிழிப்பவன்.
அலைக்குப் பயந்து
கரையில்
காத்திருப்பவனை
நினைவுபடுத்துகிறான்
மூப்பின் சாரலில்
நனைய மறுப்பவன்.

III

ஆளற்ற ஒரு
ரயில்நிலைய 
இருக்கையில் 
உறைந்திருந்த காலம்
இடமற்ற ஒரு
ரயில் பெட்டியின்
படிக்கட்டுக்களில்
இறைந்து கிடந்தது.

16 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உயிரோட்டமுள்ள கவிதை...

வாழ்க்கையில் ஒவ்வோறு திசையையும் கவிதையில் ஊயிருட்டியிருப்பது அருமை...

வாழ்த்துக்கள்...

Nagasubramanian சொன்னது…

superb sundharji

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மூன்றுமே அருமை.

’இடமற்ற ஒரு ரயில் பெட்டியின்படிக்கட்டுக்களில்இறைந்து கிடந்த’ மூனறாவது மிகவும் அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மூன்று கவிதைகளுமே அருமை.... சென்னை எப்படி இருக்கிறது....

ஹேமா சொன்னது…

மூன்றாவது காலம் பிடிச்சிருக்கு சுந்தர்ஜி !

சுந்தர்ஜி சொன்னது…

நான் எழுதும் எல்லா இடுகைகளுக்கும் பின்னூட்டங்களிட்ட இடும் என் உயிர்த் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் நன்றி சொல்ல மட்டுமே காலம் அனுமதிக்கிறது.

சென்னையின் கடிவாளம் அடங்க மறுத்து விரைந்தாலும் வெகு விரைவில் என் பழைய தொடர்ச்சியான எழுத்துக்கும் வாசிப்புக்கும் திரும்பிவிடுவேன்.

அதுவரை யாரையும் வாசிக்கமுடியாததை மன்னியுங்கள்.

ரிஷபன் சொன்னது…

ஆளற்ற ஒரு
ரயில்நிலைய
இருக்கையில்
உறைந்திருந்த காலம்
இடமற்ற ஒரு
ரயில் பெட்டியின்
படிக்கட்டுக்களில்
இறைந்து கிடந்தது.

இந்த ஒரு கவிதை என்னை தன் கைகளில் உருட்டிக் கொண்டிருக்கிறது.

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....

இரசிகை சொன்னது…

’இடமற்ற ஒரு ரயில் பெட்டியின்படிக்கட்டுக்களில்இறைந்து கிடந்த’

wow...

இரசிகை சொன்னது…

naan yellaam vaasithen....
athanaiyum nallaayirukku.

vazhthukal sundarji..

பத்மநாபன் சொன்னது…

காலத் திசைகளை காட்டின கவிதைகள் மூன்றும்...

Matangi Mawley சொன்னது…

Absolutely Brilliant!

G.M Balasubramaniam சொன்னது…

ஆனால் கையில் கடிகாரம் கட்டிக்கொண்டிருப்பதாலேயே காலத்தை வென்றவர்களாக நினைப்பவர் நம்மில் இருக்கிறார்கள். அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

மூன்றும் முத்தே-நெஞ்சில்
முளைத்திடும் வித்தே!

நீண்டநாள் இடையில்!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்

இந்திரா சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரவும்..

http://blogintamil.blogspot.com/2011/08/6.html

மாய உலகம் சொன்னது…

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோ

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...