1.
அருகில்
நீயில்லைஎனும்போதுதான்
தெரிந்தது
அருகில் நீ இருந்தது.
2.
இனிச் செல்ல
எங்குமில்லைஎன்கையில்தான்
புரிகிறது
சேருமிடம்
தொலைத்த இழப்பு.
3.
சுமக்கிறவனுக்கும்
இறக்கிவைத்தவனுக்கும்
வித்தியாசம் உணராது
காலத்தில் புதைந்திருக்கிறது
சுமைதாங்கியின்
அறியாமை.
4.
புறப்பட இருப்பவனுக்கும்
சென்றடந்தவனுக்கும்
பொதுவாய்
நடுவில் கிடக்கிறது
புதிரின் துகட்களால்
மூடப்பட்ட
நெடும்பாதை.
16 கருத்துகள்:
அருமை.
அருகாமை...இடம் தொலைத்தல்..பலன் நோக்கா சுமைதாங்கி... புதிர் பாதை..அருமையான கவி வரிகள்...
உங்கள் கவிதைகளில் கட்டுண்டு கிடப்பதை எப்போதும் என் மனம் ரசிக்கிறது..
அதுவும் முதல் கவிதையிலேயே..
அருகில் நீயில்லை
எனும்போதுதான்
தெரிந்ததுஅருகில் நீ
இருந்தது.
நான்குமே நல்ல கவிதை ஜி!....
நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி...
முதல் கவிதை முத்தான கவிதை!
நல்லாருக்கு சார் வரிகளின் ஆழம் அனுபவித்து வாசிக்கும் போது ஆத்மாவின் சுவாசமாய் நீந்திச் செல்கிறது ...
yellaamum nantru..
sumaithaangi en choice!
vaazhthukal sundarji..:)
இழப்புணர்வில் ஆரம்பித்து வாழ்வின் புதிரைச் சுட்டி முடிகிற ஒரு நேர்த்தியான கவிதை. இந்த கவிதைக்கான படத்தில் ஒரு மூட்டை/சுமை கல்லில் இருக்கிறது. ஒரு சாயலில் அது ஒரு ஜென் துறவி போலத் தெரிகிறது. கருங்கல்லிற்கு எதிரிடையாக அதன் நிழல் போல பசிய புற்களும், ஒரு பூவும் இருக்கின்றன. அவையும் ஒரு சாயலில் ஒரு பறவை போல இருக்கின்றன. கவிதையின் பிற வரிகளும், அதிகமாக இறுதி வரிகளும் சுமத்தும் கனத்தைப் படத்தில் ஒளிந்திருப்பவை கொண்டு மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. முழுமையான ஒரு வாசிப்பனுவம். நன்றி சுந்தர்ஜி.
அன்பாய் ஒரே ஒரு வார்த்தைக்காக காத்திருக்கும் உள்ளத்துக்கு தான் தெரியும் அந்த அன்பைப்பெற தான் படும் பாட்டை.....
சிறப்பான வரிகள் சுந்தர்ஜீ.... அன்பு வாழ்த்துகள்.....
ஆஹா பூங்கொத்து!
அருமை சுந்தர்ஜி
உங்க பாதை தெரியுதுங்க தலைவரே!! நாலு நாலு வரியில நச்சுன்னு சொல்றீங்க... அருமை!! :-)
இலக்கு நோக்கிப் பயணிக்கையில் சில நேரங்களில் இப்படியெல்லாம் தோன்றுவது இயல்பு. எதிர்பார்ப்புகளும் சில இயலாமைகளும் எண்ணங்களை அலைக்கழிக்கும். என் கணிப்பும் தவறாயிருக்கலாம் .
1. உருத்தல் இல்லா இருப்பு.
வருத்தம் மிகும் பிறிவு.
2. அலைக்கலைப்பின் பின்பான
அவதானிப்பு.
3. அறிந்த துக்கத்தை விட
அறியாமை சுகமே!
4. நடுவில் கிடக்கும் நெடும்பாதையின்
நடுவில் இன்னும் எதிரும் புதிருமாய் பயணிக்கும் பலர் அங்கங்கே.
arumai
//மூட்டை/சுமை கல்லில் இருக்கிறது. ஒரு சாயலில் அது ஒரு ஜென் துறவி போலத் தெரிகிறது. கருங்கல்லிற்கு எதிரிடையாக அதன் நிழல் போல பசிய புற்களும், ஒரு பூவும் இருக்கின்றன//
I too had seen that in the same angle but up to this level only.
Appreciate Ms. Miruna`s scope
கருத்துரையிடுக