5.3.12

ஒண்ணு ரெண்டு மூணு.




















1.

சோழநாடு சோறுடைத்து. இது தெரியும். சோழ நாடு கோயில்களும் உடைத்து. அதுவும் தெரியும். அதற்குப் பின்னால் எத்தனை அழகான ஒரு பின்னணி இருக்கிறது பாருங்கள்.

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவலஞ்சுழி பிள்ளையார் கோயிலில் பார்த்த ஒரு அற்புதமான செய்தியை உங்களுடன் பகிர ஆசை- அதில் கண்ட மொழியுடன்.

”எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்கினி மூலையில் சோமாஸ்கந்தரும், ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள்.

மத்தியார்ஜுனத்திற்கு நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம்.

அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி.

திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம்.

திருவிடைமருதூருக்கு நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில்.

திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி.

திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.”

2.

கைகேயி ராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கூறுகிறாள். அதற்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்.

கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள் ஆக யுகங்கள் நான்கு 

இந்தக் கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல் ) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும என்கிறது இந்துமத சாஸ்திரம். 

இந்தப் பிரிவின் அளவு துவாபர யுகத்தில் 13 ஆண்டுகளாகவும், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகளாகவும், கிருத யுகத்தில் 15 ஆண்டுகளாகவும் இருந்தன..

ராமாயணம் நடந்தது திரேதா யுகத்தில். ஆக தசரதனும், ராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் ராமனுக்குப் பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான் என்பதுதான் கூனி கைகேயிக்குச் சொல்லிக் கொடுத்த குயுக்தியின் பின்னணி.

என்ன வில்லத்தனம் கூனி?

3.

ராமையாவுக்கு ரஜினி மூலம் வைரமுத்து சொல்லி பாலு பாடியது எட்டு எட்டா பிரிப்பது பற்றி. 

ஆனால் இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் ஒன்பது விஷயங்களை
ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

1. தனது வயது
2. பணம் கொடுக்கல்-வாங்கல்
3. வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்படும் மூலிகைகள்
5. கணவன் மனைவிக்குள்ளான காம அனுபவங்கள்
6. செய்த தான தருமங்கள்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானங்கள்
9. பயன்படுத்திய மந்திரம்

ஒவ்வொருவரின் பானையிலிருந்தும் இந்த ஒன்பதில் எத்தனை ரகசியங்கள் பாக்கி இருக்கின்றன ஒழுகாமல்? 

(மிகத் தொன்மையான சிந்துசமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் தியானத்தில் சிறந்திருந்தார்கள். அவர்கள் தியானித்து வழிபட்ட பசுபதி மேலே.) 

4 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மூன்றுமே நல்ல தகவல்கள்....

G.M Balasubramaniam சொன்னது…

மூன்றுமே இதுவரை தெரியாத ,அறியாத தகவ்ல்கள் சுந்தர்ஜி. INFORMATIVE AND INTERESTING. நன்றி.

இரசிகை சொன்னது…

3 vathu class...

Matangi Mawley சொன்னது…

இதுல point 1 அப்பா சொல்லி கேட்டதுண்டு.
point 2 -- புது தகவல்... kautilya
வ மிஞ்சின கில்லாடியா இருப்பா போலருக்கே!
point 3 யும் அப்பா சொல்லி கேட்டிருக்கேன்... neethi shaastram ல ஒரு shlokam இருக்கு "navagopyaa maneeshibhih" ன்னு வரும்... But don't remember... எங்காத்து நடமாடும் "Google" அ
தான் கேக்கணும்...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...