15.3.12

ஆனந்தவிகடனில் “ப்ரின்டர் குறித்து ஒரு கவிதை”.






இன்று எனக்கு மிகவும் பிடித்த இந்தக் கவிதை வெளியாகிறது. -நன்றி- ஆனந்தவிகடன்- 21.03.2012. 

என் இடப்புறம்
முட்டாள்த்தனமான
மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்

அந்த எட்டு வயது
ப்ரின்டர் இயந்திரத்தைக்
குறித்து ஒரு கவிதை
எழுதுவேன் என
ஒருபோதும் நினைக்கவில்லை.

சின்ன வயதில் மகன் கிறுக்கிய
ஒரு கிராமச்சாலைப் படமோ-

கண்ணீரால்
நனையவிருக்கும்
ஒரு மரண அறிக்கையையோ-

உற்சாகம் மிக எழுதப்பட்ட
ஒரு கவிதையையோ-

வேலைநிறுத்தத்துக்கான
ஓர் அறிவிப்பையோ-

ஆயுள் காப்பீட்டுக்கு
அழைக்கும் விற்பனைக்
கடிதத்தையோ-

ஒரே ஸ்வரத்தில்
வெளியே துப்புகிறது.

சில சமயங்களில்
-பிடிக்காமல் போகுமோ
தெரியாது-
வெற்றுத் தாளையும்
வெளியே தள்ளும்.

வேறொரு சமயம்
கோபத்தின் உச்சமாய்க்
காகிதத்தைக் கசக்கி எறியும்.

எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் 
அதை எல்லா நேரமும்
நம்ப முடியாது.

எல்லாம் அதனுள்ளே
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும் அதன் வசமில்லை.

32 கருத்துகள்:

manichudar சொன்னது…

பிரிண்டர் குறித்தான கவிதை நன்றாக இருக்கிறது. எல்லா நேரமும் நம்ப முடியாத அதன் நம்பகத்தன்மை நானும் உணர்ந்துள்ளேன், எல்லாம் நிறைந்திருந்தும் அதன் வசத்தில் அது இல்லை இங்கே தான் கவிதை மலர்ந்துள்ளதாக நினைக்கிறன்.

மனோ சாமிநாதன் சொன்னது…

மிக வித்தியாசமான, சிறப்பான கவிதை!

விஸ்வநாத் சொன்னது…

முட்டாள்தனமாய் எழுதி அச்சடிக்கச் சொன்னாலும்
முனகாது வேலை முடிக்கும்.
அட்டகாசமாய் எழுதி அச்சடிக்கச் சொன்னாலும்
அமைதியாய் வேலை முடிக்கும்.

vasan சொன்னது…

ம‌னித‌ம் இய‌ந்திர‌மாக,
இய‌ந்திர‌த‌தை ம‌னித‌‌னாய்
மாற்றி கொண்டிருக்கிறோம்.

நிலாமகள் சொன்னது…

//எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் அதை
எல்லா நேரமும்
என்னைப் போலவே
நம்ப முடியாது.
அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.//

பிரிண்டருக்கு மின்தடை போல் சூழலின் நெருக்கடி.

4-5-2011

வெ.சிவகுமார் சொன்னது…

VERY NICE,ATTRACTIVE PHOTOGRAPHY

16-4-2011

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் அதை
எல்லா நேரமும்
என்னைப் போலவே
நம்ப முடியாது.//
சிறபான வரிகள்.

5-4-2011

நாகசுப்ரமணியம் சொன்னது…

பிரமாதம்

4-5-2011

ரமணி சொன்னது…

வல்லவன் கையில் புல் மட்டுமா
பிரிண்டரும் கூட நல்ல கவிதரும்
ஈற்றடி மிக அருமை
வாழ்த்துக்கள்����

4-5-2011

கமலேஷ் சொன்னது…

கவிதையோட துவக்கம் மிக மிக அருமையாக இருக்கிறது சுந்தர் சார்.

சுண்டி இழுத்துப் போகும் அழகு.

4-6-2011

மாதங்கி மாலி சொன்னது…

haa ha! :) loved the concept-- that printer doesn't actually like things it is being asked to print- so it throws out a blank paper! :)makes me want to pity it for its plight...

sometimes- even humans do things they do not actually want to do. makes me wonder- would it be the same with the printers, if they could think? human who has lost his limit of tolerance-- gets into a spirit of revolt-- an out-cry? or just- all that turned inwards... blank?

A Kaleidoscope... :) once again...

great one, sir-ji...

4-4-2011

ரிஷபன் சொன்னது…

எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் அதை
எல்லா நேரமும்
என்னைப் போலவே
நம்ப முடியாது.

இதை வெகுவாக ரசித்தேன்..

4-4-2011

போகன் சொன்னது…

சட்டுவம் அறியுமோ கறியின் சுவை என்ற சொல் நினைவு வருகிறது.

4-4-2011

க.ரா. சொன்னது…

:)

4-4-2011

வெங்கட் நாகராஜ் சொன்னது…

யாரோ கொடுத்த கட்டளைப்படி, எதை எதையோ உள்ளே வாங்கி, அதை அதை வெளியே கொடுக்கும் இந்த பிரிண்டர் பாவம்தான்! கண்களிருந்தால் இரண்டிலும் கண்ணீர் துளிகள் வழியும் என்பதில் சந்தேகமில்லை. நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி!

4-4-2011

ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பிரிண்டர் பேசுமா என்ற என் கேள்விக்கு பதிலாய் அமைந்தது உம் கவிதை! ஆஃபீஸில் எங்களிடம் அந்த பிரிண்ட்..ட்ட்....ட்ட்....ட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.,,,படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா!

4-4-2011

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அதனுள்ளே எல்லாம் நிறைந்திருந்தும்
என் போலவே எதுவும் அதன் வசமில்லை.//

ஆஹா, சரியாகச்சொல்லியுள்ளீர்கள்.
கோடை வெய்யில் கொளுத்துவதால், எதுவுமே யார் வசமுமே இல்லாமல் தான் உள்ளது, இப்போது கொஞ்சநாட்களாகவே. (நடுவில் இந்த எலெக்‌ஷன் வேறு, எரிச்சலை அதிகரிக்க)

4-4-2011

ஜி.என்.பாலசுப்ரமண்யம் சொன்னது…

சுந்தர்ஜி, சிறிது இடைவெளிக்குப் பிறகு நான் வந்து பார்க்கையில் உங்கள் வெளிப்பாடும் குறைந்திருக்கக் கண்டேன். எதையும் கவிதையில் கொண்டுவரும் உங்கள் ஆற்றல் இதிலும் தெரிகிறது. மனச்சோர்வும் உடல் சோர்வும் நீங்கி புதுப்பொலிவுடன் பவனி வர என் வாழ்த்துக்கள்.

4-4-2011

சிவகுமாரன் சொன்னது…

லேசர் பிரின்ட் போல வழுக்கிக் கொண்டு போகிறது நடை. அருமை

4-4-2011

கே. பி. ஜனா... சொன்னது…

தொடக்க வரிகளை மிகவும் ரசித்தேன்...

ப.தியாகு சொன்னது…

பிரிண்டெர்!
அது ஒரு எந்திரம்,

க்ரிக்... க்ரிக்... என்று அது ஒலியெழுப்புவது பேசுவதுதான் போல சுந்தர்ஜி சார்.
ஏனெனில், நீங்கள்தான் அதற்கு ஜீவனை கொடுத்திருக்கிறீர்களே கவிதையில்.

எனக்கும் மிக பிடித்த கவிதை இக்கவிதை.
அன்பு வாழ்த்துகள் சுந்தர்ஜி சார்

பத்மா, காகித ஓடம் சொன்னது…

vaazhthukkal.kadaisi vaqrikal nachhhhhh

20:08

வை. கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கவிதை படித்து முடித்ததும் மகிழ்ச்சியாகவும் பொருத்தமாகவும் உள்ளது.

//சில சமயங்களில்
-பிடிக்காமல் போகுமோ
தெரியாது-
வெற்றுத் தாளையும்
வெளியே தள்ளும்.

வேறொரு சமயம்
கோபத்தின் உச்சமாய்க்
காகிதத்தைக்
கசக்கி எறியும்.//

இந்த வரிகளும் மிக அருமை தான்.

ஆனந்த விகடனில் பிரசுரம் ஆகியுள்ளதற்கு வாழ்த்துகள். vgk

23:37

நாணற்காடன், ராசிபுரம் சொன்னது…

விகடனில் ப்ரின்டர் கவிதை டாப்.

சக்தி சொன்னது…

மீண்டும் ஒரு முறை படித்தேன்... ரசித்தேன்... விகடனில் வெளியானதற்கு
பாராட்டுக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மீண்டும் ஒரு முறை படித்தேன்... ரசித்தேன்... விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்...

அப்பாதுரை சொன்னது…

crisp

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி

உங்களது கவிதைகளின் காதலன் நான்.

இந்த வார சொல்வனம் பகுதியில்
பிரிண்டர் கவிதை அழகாக இருந்தது..

ஆனால் உங்களது
இன்னும் ஆழமான
அழுத்தமான
உட்பொருள் கனமிக்க
வசீகர மொழியிலான
கவிதைகள் இருக்கின்றனவே
அவற்றை ஏன்
விகடனுக்கு அனுப்பக் கூடாது?

எஸ் வி வி

முஹம்மது ரஸ்வி சொன்னது…

ப்ரிண்டர் கவிதையைப் படித்ததும் இயல்பாய் அதன் பக்கம் என் கண்கள் திரும்பிய போது அது (தன்னைப் பற்றியும் கவிதை வந்திருக்கிறது என்ற)கர்வமுடன் என்னைப் பார்ப்பது போல் தோன்றியது.

வித்யா சொன்னது…

//எல்லாம் அதனுள்ளே நிறைந்திருந்தும்
என் போலவே எதுவும் அதன் வசமில்லை//

அருமை.

இறைவா! நின்னைச் சரணடைந்தேன். எல்லாமே என்னுள் இருப்பதை உணர்ந்தேன். உன்னிடம் சரணடைந்தபின் என்வசம் எதுவுமில்லை.

தமிழ்க்குமரன் சொன்னது…

சுந்தர்ஜி! நன்று.

ராதாரங்கராஜு சொன்னது…

//எல்லாம் அதனுள்ளே நிறைந்திருந்தும்
என் போலவே எதுவும் அதன் வசமில்லை//

அருமையான வரிகள் சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...