15.5.13

சில விளம்பரங்கள்.

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே! என்னிடம் வாருங்கள். தோராயமாகப் பதினைந்து நிமிடம் செலவழியுங்கள். உங்கள் உற்சாகத்துக்கும், இளமைக்கும் நான் கியாரண்டி.

சில விளம்பரங்கள் நம் பாரத்தைக் குறைப்பதாய் இருக்கின்றன.
பல விளம்பரங்கள் நம் மீது பாரத்தை ஏற்றுகின்றன என்றுதானே எழுதப்போகிறேன் என்று நினைத்தீர்கள்.
அதுதான் இல்லை. ஆயுளையே குறைக்கின்றன.

இதற்கு முன் என் பதிவுகளில் பலமுறை தாய்லந்து விளம்பரங்களின் மேன்மை பற்றி என் நடுவிரலும், சுட்டுவிரலும் தேய எழுதியாயிற்று.

பயப்பட வேண்டாம். அதன் முந்தைய சுட்டிகளை இணைக்கப்போவதில்லை இப்போது. (நீங்களே லேபிளில் தேடிப் பார்க்கவும் என்று அர்த்தம்.) இந்த முறை பூராவும் இந்தியாவின் சமீபத்தைய விளம்பரங்கள் பற்றித்தான்.

ஒரு விளம்பரம் பார்க்கும்போது நம்மை அறியாமலே, அதனுடன் சேர்ந்து ஒரு துணுக்கு சிரிப்பை அல்லது கண்ணீரை அல்லது நெகிழ்வை வரவழைத்துவிட்டால் அது சாதனை.

விளம்பரப் படங்களின் வாழ்நாள் குறுகியது. ஆனால் அது அந்தக் குறுகிய நேரத்தில் ரசிகனை அசைத்துவிட்டால் காலகாலத்துக்கும் அதன் நினைவு மக்காது.

பார்த்தவர்கள் மீண்டும் ஒரு முறையும், இதற்கு முன் பார்த்திராதவர்கள் இருமுறையும் பார்க்கவும்.

நம் பாரத்தைக் குறைக்கும் கட்சியிடம் நாம் போவோம்.








எளிமையிலும், அறியாமையிலும்தான் நிறைந்திருக்கிறது வாழ்வின் பேரானந்தம். 

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Voda Super...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அனைத்தும் அருமை அய்யா

கீத மஞ்சரி சொன்னது…

இதுவரை நான் பார்த்திராத விளம்பரங்கள். மூன்றாவது விளம்பரத்தின் முடிவில் கண்ணில் ஈரம். குழந்தைகள் தாம் எவ்வளவு எளிதாக நம்மை இளக்கிவிடுகிறார்கள். முட்டைத்தலை மனிதர்களின் அட்டகாசம் நினைக்க நினைக்க முறுவல் உண்டாக்கும் அதிசயம். அனைத்துக்குமாய் மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.

G.M Balasubramaniam சொன்னது…


சில விளம்பரங்கள் இதழ்களில் முறுவலைக் கொணரும். சில எரிச்சலூட்டும். சில சம்பந்தமே இல்லாததாய் அல்லது நமக்குப் புரியாததாய், சில சலிப்பூட்டும். சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ரசிக்க வைக்கும் உங்கள் பாணி ரசனையானது சுந்தர்ஜி. வாழ்த்துக்கள்.

அப்பாதுரை சொன்னது…

sprite விளம்பரம் கவர்ந்தது. விற்கப்படும் பொருள் அல்லது பொருளின் பயன் பற்றியும் ஏதாவது தெரிவிப்பது விளம்பரத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். IOB விளம்பரம் புரியவில்லையே?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி தனபாலன். வோடோ என் ஃபேவரைட்டும்.

நன்றி ஜெயக்குமார் உங்கள் மேன்மையான ரசனைக்கு.

எளிதில் கரையும் மென்மையான மனம் உங்களது.உங்கள் பலமும் அதுவாகவே இருக்கட்டும் கீதமஞ்சரி. நன்றியோ நன்றி.

பாலு சார்! உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருந்ததுல எனக்கும் சந்தோஷம். எல்லாம் அலைவரிசையின் மாயம்.

பொருளின் பயன் குறித்து நேரடியாக நன்றி அப்பாதுரை. முகத்தில் அறையாமல் தோளில் இருந்து புடவைத் தலைப்பு நழுவும் மென்மையுடன் விளம்பரங்கள் சொல்லப்பட வேண்டும். இதில் தாய்லந்து விளம்பரங்களை அசைக்க யாருமில்லை.

’உங்கள் பணத்துக்கு நாங்கள் காவல்’ இதுதான் அநத விளம்பரம் சொல்ல வருவது. இதில் ஐஓபி விளம்பரம் சற்றுக் குறி தவறி இருக்கிறது.

Matangi Mawley சொன்னது…

Piggy Bank and ICICI-- Brilliant. I never change the channels during these Ads. Sprite too... Though the piggy bank ad doesnt come these days. I ve never seen the IOB Ad before... Really good. Thanks for sharing!

Seen this? :) One of my favs. .... http://www.youtube.com/watch?v=MidLOhRnpnU

சிவகுமாரன் சொன்னது…

An error occured. Try again later என்று வருகிறது. என்ன செய்ய ?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...