22.8.10

வன வாசம்


இத்தனை நாள் வன வாசம் போயிருந்தேன்.
தொழில் விரிவாக்கம் தொடர்பான பின்னல் வலையில் சிக்கியிருந்தேன்.
ரெண்டே கவிதைகள் எழுதினேன்.
நூறு எழுதும் அநுபவம் கண்டேன்.
என் தனி இதழ் ”சுந்தர்ஜி”-காலாண்டிதழ் வருவதும் தாமதப்பட்டிருக்கிறது.
எத்தனை பெரிய இழப்பு!
நல்ல கவிதைகளை இழந்திருக்கிறேன்.
நல்ல நண் பர்/பி களின் தொடர்பு எல்லைக்கு வெளியில் திரிந்து கொண்டிருந்தேன்.
நிறையப் பேருக்கு நன்றி சொல்ல விடுபட்டிருக்கிறது.
கண் அறுவை சிகிச்சை முடிந்த நபரின் வேகத்தில் இருக்கிறது என் வாசிப்பு. வாசிக்கத் துவங்க வேண்டும்.
அநேகமாக நாளை முதல் என் பதிவுகளும் என் தொடர்புகளும் மீண்டுவிடும்.
தமிழ் முத்தங்களுடன் -
சுந்தர்ஜி

9 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

ஓ.. அதான் நீ.....ண்ட மௌனமா?!
வாங்க.. வாங்க..

Matangi Mawley சொன்னது…

:) welcome back!

நிலா மகள் சொன்னது…

எதை விரிக்கவும் ஏதேனும் வலையில் சிக்க வேண்டியிருக்கு! எழுத்தாகாத மிச்சமிருக்கும் அனுபவங்களின் அழுத்தம் கவி மழையாகி எங்களைக் கரைக்கட்டும்! நத்தை வேகத்திலேனும் நகரும் வாழ்க்கை தேவலாம் நிற்பதை விடவும்...

Madumitha சொன்னது…

காத்திருக்கிறேன்.

ஹேமா சொன்னது…

உங்களை நிறையத் தரம் தேடிவிட்டேன்.வந்திட்டீங்களா சுந்தர்ஜி.நானும் தொலைந்திருக்கிறேன்.
என்னைத் தூசு தட்டி நானும் வர முயற்சிக்கிறேன்.எழுதுங்கள்.என் பாரம் குறைய ஒரு கவிதை !

vasan சொன்னது…

Wey MISSED you dearly, SUNDARJEE.

சுந்தர்ஜி சொன்னது…

வேலி ஓரத்தில் கவனிப்பற்றுக் கிடக்கும் காட்டுச்செடியையும் கவனிக்க ஆளிருப்பது சற்று நெகிழ்வாகவும் சந்தோஷமாகவும்.

மனதின் ஆழத்திலிருந்து நன்றி-
-ரிஷபன்.
-மாதங்கி.
-நிலாமகள்.
-மதுமிதா.
-ஹேமா.
-வாசன்.

பத்மா சொன்னது…

காட்டுச் செடியா? கருத்தை மாற்றுங்கள் சுந்தர்ஜி ..
சோலைவனத்து பாரிஜாதம் என உணர்ந்திருக்கிறோம் நாங்கள்
..
புது மலர் இல்லாவிடினும் ,நிழல் தேட ஆளுண்டு இங்கே ..

நல்வரவு

சுந்தர்ஜி சொன்னது…

நிழல் தேடும் பாதங்களுக்கு நன்றி பத்மா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...