31.8.10

திசை




ஒற்றை உரசலில்
பற்றும் தீக்குச்சிமுனைக்காய்க்

காத்து நிற்கும் திரியுடன்
என் நம்பிக்கையின் மெழுகு.

பற்றக் கூடாதெனப் பதுங்கியிருக்கிறது
கையளவோ குவித்த வாயளவோ
பொறாமையின் அமிலக் காற்று.

தூவப்பட்டிருக்கிறதென்
பாதங்களின் கீழ்
செல்லவிருக்கும்
திசைகளின் விதை.

யாரும் புகா
அடர்வனங்களின் நிழலில்
கனிந்திருக்கிறது
நாளைய என் பாதையின் தடம்.

6 கருத்துகள்:

Vel Kannan சொன்னது…

கவிதை முடிந்ததாக தெரியவில்லை ஜி
சரிதான் , பாதையும் முடிவடைவதில்லை தான்.

Anonymous சொன்னது…

நம்பிக்கையின் விதைகள் முளைத்தெழுந்து யாரும் புகா அடர்வனமாய்.....
பூமி பிளந்து முளை விடும் வித்துக்களின் முழக்கங்களற்ற மஹா வீர்யம் போன்று தனித்தெழுவதின் வேகம் வரிகளின் அர்த்தங்களுக்குள் மலர்ச்சியாய்ப் பூத்துள்ளது. பொறாமையின் அமிலக்காற்று...அமிலம் என்ற பதம் உணர்த்தும் யோசிப்பே பதைக்க வைக்கிறது.
-உஷா ராணி.

Anonymous சொன்னது…

எங்களுக்கான தடமும் கூட.
-யாழி.

Anonymous சொன்னது…

முயற்சிகள் நமக்கான பாதையை வகுத்துக்கொடுக்கும் என்பதை உணரமுடிகிறது உங்கள் கவிதையில்.தீக்குச்சியை அணைக்காமல் காப்பாற்றும் கையளவு நம்பிக்கையை ரசித்துப் படித்தேன். பாராட்டுக்கள் அண்ணா.
-கே.அண்ணாமலை.

Anonymous சொன்னது…

பாதையின் தடத்தில் வாழ்வின் தேடல் உணர்ந்தேன்.
-திருமதி.மீனாதேவி.

Madumitha சொன்னது…

நடக்க ஆரம்பித்தால்
பாதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...