16.5.11

பின்னூட்ட முன்னூட்டம்.


















பின்னூட்டங்களுக்குப்
பதில்
எழுதமுடியாத அளவுக்கு
நானே தொடர்ந்து
எழுதவும் படிக்கவும்
நேர்ந்துவிட்டதால்
எல்லோருக்கும்
எல்லாப்
பின்னூட்டங்களுக்கும்
வெகு விரைவில்
பதில் பின்னூட்டமளித்து
விடுவேன்
என்று
உறுதியளிக்கிறேன்.


பி.கு:

1. இதை வழக்கம்போல் கவிதை என்று எண்ணி ஏமாந்துவிடவேண்டாம். சிரமம் பார்க்காமல் லேபிளைக் கவனித்துவிட்டுக் கரையேறவும்.

2. இது ஊட்டம் சம்பந்தப்பட்டிருப்பதால் ஃபீடிங் பாட்டிலுடன். பொருத்தமான படம் எனக் கொள்க.

36 கருத்துகள்:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

///////1. இதை வழக்கம்போல் கவிதை என்று எண்ணி ஏமாந்துவிடவேண்டாம். சிரமம் பார்க்காமல் லேபிளைக் கவனித்துவிட்டுக் கரையேறவும்.
///////

அப்படி ஏமாந்தால்கூட பிரச்சனை இல்லை . வழக்கம் போல பதிவை வாசிக்காமல் ஆஹா அருமை சூப்பர் என்று மறுமொழி இடாமல் இருந்தால் நலமே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:)

Ramani சொன்னது…

பின்னூட்டங்களுக்கு பின்னூட்டமிடுவது எனத்
தொடர்ந்தால் படைப்பும் பின்னூட்டமிடுதலும்
பாதிக்குமோ என்ற அச்சம் எனக்குண்டு
(தோட்டத்தில் பாதி கிணறாகிப் போனால்
வெள்ளாமை பாதித்தலைப்போல)
தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல் அல்லது
கேள்விஎழுப்பிச் செல்பவர்களுக்கு
பதில் பின்னூட்டம் அளிப்பது சரியாக இருக்குமென்பது
ஈன்னுடைய அபிபிராயம்

இராமசாமி சொன்னது…

ஜி... :)

மிருணா சொன்னது…

முகப்பில் உள்ள புகைப்படம் அழகு.. எதையெல்லாம் அவள் பார்க்கலாம் அல்லது பார்க்காமல் பார்க்கலாம் என யோசிக்க வைக்கிற கவிதை

Rathnavel சொன்னது…

ஓவியமா? புகைப்படமா?
அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

உங்களுடைய படங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவைதான். அடிக்கடி நீங்கள் மாற்றும் டைட்டில் படம் அருமை சார்! எந்தப் புதையலிளிருந்து அல்லுகிறீர்கள்? ;-))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

படங்கள் இரண்டுமே அருமை.

இரண்டாவது படம் [குழந்தைக்கு ஃபீடிங் பாட்டில்] முன்னூட்டம் என்று நன்றாகப்புரிகிறது.

முதல்படம் இனிமா [பின்னூட்டம்] கொடுக்க அழைத்துச்செல்ல இருக்கும் பெண்மணியாக இருப்பாரோ என்று நானாகவே நினைக்கிறேன்.

என் நினைப்பு தான் தலைப்புக்குச் சரியாக இருக்குமோ? தெளிவு படுத்த வேண்டும் சுந்தர்ஜி, சார்.

A.R.RAJAGOPALAN சொன்னது…

நீங்கள் எது எழுதினாலும் எதை பற்றி எழுதினாலும் கவிதை தான் அண்ணா

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...உங்கள் ஊட்டம் எங்கள் உற்சாகம்.உங்கள் வரிகள் எதை வாசித்தாலும் கவிதைதான் !

நிரூபன் சொன்னது…

சகோ, இப் பதிவில் ஏதோ உள் குத்து இருப்பதாக, அடியேனின் ரசனைக்குப் புலப்படுகிறது.

ரிஷபன் சொன்னது…

இதே சிரமத்தில்தான் நானும்..
சித்ரா மேடம் எப்படித்தான் அத்தனை பதிவுகளையும் படித்துக் கொண்டு அவர்களின் பதிவுகளையும் சூப்பராக வெளியிடுகிறார்களோ?!
பனித்துளி சங்கரின் நையாண்டியை வெகுவாய் ரசித்தேன்.

எல் கே சொன்னது…

ஹ்ம்ம் ஓகே

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

முகப்பு ஓவியம் அருமை

சுந்தர்ஜி சொன்னது…

மொத்தத்தில் ரமணியண்ணா சொன்ன கருத்தில் உடன்பாடு இருந்தாலும் ஒவ்வொருவருடனும் பேசும்போது ஒரு பந்தம் உண்டாவதாய் உணர்கிறேன். ஆகவே தொடர்வோம்.

சங்கர்-தூள் கிளப்பிவிட்டீர்கள்.க.க.க.போ.

வெங்கட்-இந்தப் புன்னகை என்ன விலை?

நன்றி ரமணியண்ணா.

என்ன ராம்ஸ்? கொஞ்சம் கடிச்சுட்டேனோ? சாரி.

சுந்தர்ஜி சொன்னது…

ஓவியத்தைப் பார்த்துக் கவிதை எழுதும் ஜுகல்பந்தி என்பது இதுதானோ? அற்புதம் மிருணா.

சுந்தர்ஜி சொன்னது…

உற்சாகமாக எல்லாத் தலங்களையும் வாசிக்கும் ரத்னவேல் ஐயா!முன்னமேயே தங்கள் முதல் வருகைக்கு முகமன் தெரிவிக்கமுடியாது போயிற்று. அத்ற்கும் சேர்த்து வாங்க வாங்க என் அழைத்து அது ஓவியம்தான் என்று கூறி அமர்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

அவ்வலவா எனக்கு லனா வராதுங்கற தில்லுமுல்லு பட டயலாக் நினைவுக்கு வந்தது அவசரத்தில் நீங்கள் தட்டி நிகழ்ந்த பிழைகளால்.

தேடும் மனதில்-உழைப்பில்தான் இருக்கிறது ஆர்விஎஸ் புதையலின் ரகசியம்.நன்றி ரசனைக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

இரண்டாவது படத்தின் ரசனை கிட்டத்தட்ட பொதுத்தன்மையுள்ளது.

தலைப்புப் படத்தின் ரசனை அவரவர் சூழலைப் பொறுத்தது.

வயிறு கெட்டுப்போனா எனிமா கொடுத்துடலாம். மனசே கெட்டுப்போயிடுத்துன்னா எந்த மா கொடுக்கறதுப்பான்னு சிவாஜி ஸ்டைல்ல ஒரு தடவை சொல்லிப் பாத்தேன் கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

மனதில் கவிதையெனும் நதி ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு எதைப் பார்க்கும் போதும் அதுவே தெரியும் ராஜு. நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை அப்பிடின்னு எம்ஜிஆர் பாட்டு ஞாபகப் படுத்திட்டீங்க ஹேமா.


ஆனாலும் என் உயரம் எனக்குத் தெரியாதா?

சுந்தர்ஜி சொன்னது…

ரொம்பவும் ஒரு விஷயத்தை உற்றுப் பார்ப்பவர்களுக்கு-

உள்குத்து-வெளிக்குத்து-மையக்குத்து எல்லாமே கும்மாங்-
குத்தாய்க் காணப்படும்

என்ற வள்ளுவரின் குறட்பாதான் நினைவுக்கு வருகிறது நிரூபன்.

எல்லாவற்றிற்கும் நிரூபணம் கேட்பவராதலால் நிரூபனோ நீங்கள்?

சுந்தர்ஜி சொன்னது…

ரிஷபன்-எனக்கு மட்டுமே பின்னூட்டம் போடாத சித்ரா-பனித்துளி சங்கர் மூவருக்கும் ஒரு ஓ போடுகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

பெருமூச்சை சத்தமாய் விட்ட எல்கேவுக்கு ஜே.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் ரசனையை நானறிவேன் திருநா. நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

பதிவுகளுக்கு வந்த பினூட்டங்கள் பல
காணாமல் போய்விட்டன. பின்னூட்டங்களுக்கு பதில் கூறுவது நாம் அவற்றை எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதை தெரியப் படுத்தும்.படித்துவிட்டு பின்னூட்டமே போடாதவர்கள் மத்தியில் நம் எழுத்தை மதித்து கருத்து தெரிவிப்பவரை நாம் acknowledge
செய்கிறோம் என்பதுதானே நிஜம். நான் டெம்ப்லேட் பின்னூட்டங்களை கூறவில்லை. என் பின்னூட்டங்களை
எழுதியவர் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்று நான் கவனிப்பதுண்டு.

மோகன்ஜி சொன்னது…

// இதை வழக்கம்போல் கவிதை என்று எண்ணி ஏமாந்துவிடவேண்டாம்//

உங்கள் குறும்பை ரசிக்கிறேன்.

வானவில்லில், பின்னூட்டங்களின் அடர்த்தியிலேயே படைப்பு நகர்வதாய் எனக்கோர் பிரமை ஏற்படுவதுண்டு.
ஏனோ பின்னூட்டங்களுக்கு பதில் தருவதும்,பல சமயங்களில் அது ஒரு கும்மியாய் அமைந்து போவதும் ஸ்வாரஸ்யமாகவே படுகிறது.

ரம்மி சொன்னது…

உங்கள் கவிதைகளை பத்தி பிரித்தால் இன்னும் ரசிக்கலாம்!

பின்னூட்டங்கள் உதிர ஓட்டங்கள்!
தடைபடின் மூளைக்கு
பிராண வாயுத் தடை!
மனதுக்கு ஆர்வத் தடை!
விரல்களுக்கு தட்டுத் தடை!

santhanakrishnan சொன்னது…

பின்னூட்டத்தை
விடுங்கள்.
படித்துக் கொண்டிருப்பதை
எழுதுங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

அதே கவனிப்பு எனக்கும் உண்டு பாலு சார். அதனால்தான் இது. தவிர, நம்மைப் படித்து நமக்கு நேரமொதுக்கி தங்களின் எண்ணங்களை எழுதுபவர்களுக்கு ஒரு நன்றி பாராட்ட அல்லது கைகுலுக்க ஒதுக்கும் ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

கண்டிப்பாக மோஹன்ஜி. எனக்குத் தெரிஞ்சு உங்க வலைப்பூவில் பதிவு போட்டதுக்கப்புறம் நடக்கிற அமளிதுமளிகள் படு ஸ்வாரஸ்யம். மிகச் சிலரின் தளங்களில் மட்டுமே இம்மாதிரியான கலகலப்பு இடம்பெறுகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரம்மி.

பொதுவகவே உரைநடையில் என் எழுத்துக்கள் பத்தி பிரிக்கப்பட்டே இருக்கும்.

கவிதையைப் பொறுத்தவரை அந்தந்தக் கவிதையின் மையக்கருத்தைப் பொறுத்து அது தீர்மானமாகிறது. அவ்வளவுதான்.

சுந்தர்ஜி சொன்னது…

இதுவும் நல்ல யோசனைதான் மதுமிதா.செய்கிறேன்.

எப்படி இருக்கீங்க? அடிக்கடி பார்க்கமுடிவதில்லை உங்கள் எழுத்துக்களை? வேலை அதிகமா? அப்பா உடல்நிலை பரவாயில்லையா?

நிலாமகள் சொன்னது…

1. இதை வழக்கம்போல் கவிதை என்று எண்ணி ஏமாந்துவிடவேண்டாம். சிரமம் பார்க்காமல் லேபிளைக் கவனித்துவிட்டுக் கரையேறவும்.

:)))))))))))))))

சிரிப்பு அடங்கியபின் வருகிறேன் ஜி.

இரசிகை சொன்னது…

:)))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஒரு பதிவினைப் படித்ததும் நல்லவிதமாக பாராட்டி நாலு வார்த்தைகள் பாஸிடிவ் ஆக எழுதுவதை குழந்தைக்கு ஊட்டம் தரும் ஃபீடிங் பாட்டில் உணவோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ளலாம்தான்.

அதே கருத்துக்கள் நெகடிவ் ஆக காரசாரமான விவாதங்களுடன் கூடிய விமர்சனமாக இருப்பின் அதை மருத்துவத்துறை தரும் ‘எனிமா’ என எடுத்துக்கொள்ளலாமா ஜி?

எனக்கென்னவோ இந்த ‘பின்னூட்டம்’ என்ற சொல்லினை முதன் முதலில் பதிவுலகில் கேள்விப்பட்டதுமே ‘எனிமா’ ஞாபகம் தான் வந்தது ! :)

’எனிமா’ என்பது மலச்சிக்கலுக்காக எப்போதும் பின்புறமாகவே ஊட்டப்படுவதால், எனக்கென்னவோ அதுதான் பின்னூட்டம் என்பதற்கான சரியான சொல்லாக இருக்கூடும் என நினைக்கத்தோன்றுகிறது.

இந்தப்பதிவினை அகஸ்மாத்தாக நான் இன்றுதான் பார்க்க நேர்ந்தது.

அன்புடன் கோபு

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...