27.5.11

நுட்பச் சிக்கல்


















நான் தொடர்ந்து வாசிக்கும்-பின்னூட்டமிடும் பல தளங்களில் ஏதோ நுட்பக் காரணங்களால் பின்னூட்டமிட முடிவதில்லை. அநானிமஸ் என்கிற தலைப்பைக் காட்டி மறுபடியும் கூகிள் கணக்குக்குள் நுழைய வைக்கிறது. மறுபடியும் அநானி. மறுபடியும் கூகிள். கிடைக்கும் அல்பசொல்ப நேரத்துக்குள் இயலாது போய் பின்னூட்டமிடும் ஆர்வம் இதனால் தடைப்பட்டுவிடுகிறது.

ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு விதமாய் யோசிக்க வாய்ப்பு இருக்கிறது.

நாம் வாடிக்கையாய் வாசித்துப் பின்னூட்டம் இட்டாலும் இவனுக்குக் கொழுப்பைப் பாரேன் என்கிற கதியில்.

என்னுடைய தளத்தை வழக்கமாக வாசிப்பவர்களுக்கும் இதே போன்ற சிக்கல் இருக்கலாம் என்பதையும் யூகிக்கிறேன்.

இது ஒரு இழப்புத்தான்.

வருந்துகிறேன்.   

9 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

என்ன ஒரு தன்னிலை விளக்கம் அண்ணா
என்னை படித்தால் தான் நான்
உன்னை படிப்பேன் என்பது
ரசிப்பின் தன்மைக்கும்
வாசிப்பின் தொன்மைக்கும்
உகந்ததல்ல ...............
உங்களின் படைப்புகளை
வாசிப்பது பாக்கியம் அண்ணா
ஏன் இதுமாதிரியான விளக்கங்கள் ?????????

G.M Balasubramaniam சொன்னது…

எனக்கும் அந்த சிக்கல் ஏற்படுவதுண்டு. மோசில்லா ஃபயர் ஃபைர் ஃபாக்ஸ் மூலம் சில பதிவுகளை படிக்க முடிவதில்லை. எழுத்துக்கள் கணினியில் சரியாக எடிட் ஆகாத மாதிரி. இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரர் மூலாம் நுழைந்தால் புதிய பதிவுகள் சில நேரங்களில் கிடைப்பதில்லை. ஏதோ தெர்ந்த வரையில் கணினியை இயக்கி அதனுடன் மல்லிக் கட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.ஏதோ பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது.

ரம்மி சொன்னது…

try google ghrome!

எல் கே சொன்னது…

நீங்கள் எந்த உலவி உபயோகிக்கிறீர்கள் ? க்ரோமில் இந்த பாதிப்பு உண்டு

குக்கீஸ் ,ஹிஸ்டரி டெலீட் செய்யும் பழக்கம் உண்டா இல்லையெனில் ஒரு முறை அதை செய்துவிட்டு உலவியை மீண்டும் ஓபன் செய்து முயற்சிக்கவும்.

எல் கே சொன்னது…

//மோசில்லா ஃபயர் ஃபைர் ஃபாக்ஸ் மூலம் சில பதிவுகளை படிக்க முடிவதில்லை. /

@G.M Balasubramaniam

check with google chrome

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கடந்த சில நாட்களாகவே ப்ளாக்கரில் இந்த சிக்கல் இருக்கிறது. என்னுடைய சென்ற பதிவுக்குக் கூட ஒரு சிலர் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை என மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.

இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் பெரும்பாலும் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு வலைப்பூவுக்கும் ஒவ்வொரு உலவி உபயோகப்படுத்துவதிலும் அர்த்தம் [பொறுமையும்!] இல்லை....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஏராளமாகவே உள்ளன.
1) மின்தடை இல்லாமல் இருக்கவேண்டும்
2) மாடம் வேலைசெய்ய வேண்டும்
3) நமக்கு வேறு வேலை ஏதும் குறுக்கிடாமல் கம்யூடரில் அமர நேரம் இருக்கணும்
4) விருந்தாளிகள் வருகையோ, வீட்டிலுள்ளவர்கள் (மேலிடம்) குறுக்கீடோ இல்லாமல் இருக்கணும்
5) கம்யூட்டர் சிஸ்டம் ஒழுங்காக ஒத்துழைக்கணும்
6) சர்வர் கிடைக்கணும்
7) சுவாரஸ்யமாக ஒவ்வொருவரின் பதிவாகப்படிக்கணும், பின்னூட்டம் அடிக்கணும், அது போய்சேரணும்
8) பாதி வேலையில் இயற்கை உபாதைகள், பசி, தாகம், காலிங்பெல் அழைப்பு, டெலிபோன் அழைப்பு, தபால்காரர், கொரியர்காரர், பால்காரர், வேலைக்காரர் அழைப்புகள், தூக்கம் வருவதுபோல கோஜா வாங்குதல் முதலியன நிகழாமல் இருக்கணும்.

நடுவில் தடங்கல் ஏற்பட்டால் “எங்கே விட்டோம்” என்று தலையைச்சொரிய வேண்டியதாக இருக்கும்.

இடையில் நமது வெளியீடுகள், அதற்கான தயாரிப்பு வேலைகள், அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களைப்படித்தல் என பலவித சிரமங்கள் உள்ளன என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

தங்களது தன்னிலை விளக்கம் அருமை.

எல்லோருக்குமே இதுபோல ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் உள்ளன.

இவற்றை எல்லோருமே புரிந்து கொள்வோம்.

இருப்பினும் கஷ்டப்பட்டு நம் நட்பைத்தொடர முயற்சிப்போம்.

அன்புடன் vgk

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
சில நேரம் நீங்கள் சொல்வது போல் நேர்கிறது.
நன்றி.

இரசிகை சொன்னது…

sattunnu sirippu vanthuduchu...

irunthaalum intha thannilai vilakkam azhaakathaan irukku sundarji...:)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...