1.
அது ஒரு மழைக்காலம்.
இளந்துறவி ஒருவன் ஒரு வேலைக்காகப் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டான். பயணத்தின் நடுவே ஒரு ஆறு குறுக்கிட்டது.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அகண்ட ஆறு அது. ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் துறவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
உரத்த குரலில் பதட்டத்துடன் அவரிடம் கேட்டான் இளந்துறவி.
“ஐயா! நான் ஆற்றின் அக்கரைக்குச் செல்வது எப்படி?’’
குரு சொன்னார்.
மகனே! நீ ஆற்றின் அக்கரையில்தான் இருக்கிறாய்.
எதைக் கடக்க
முடியுமோ
அதையே கடக்க
முடிகிறது.
எதைக் கடக்க
இயலாதோ
அதைக் கடக்கத்
தேவையில்லை.
2.
பார்வையற்ற ஒருவன் தன் நண்பனைக் காண பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான். சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருள் கவிழத் துவங்கியது மாலையின் மேல்.
”ஐயோ! நேரமாகிவிட்டது. நான் கிளம்புகிறேன்” என்று கிளம்ப எழுந்தான்.
”நன்றாக இருட்டிவிட்டது. இதற்கு மேல் கிளம்பி என்ன செய்யப் போகிறாய்? தங்கிவிட்டுக் காலையில் கிளம்பு” என்றான் நண்பன்.
“இருளும் ஒளியும் உனக்குத்தான். எனக்கு எல்லாம் ஒன்றுதான். கவலைப் படாதே. நான் கவனமாகப் போய்விடுவேன்” என்று புறப்பட்டான்.
”எதற்கும் இந்த லாந்தர் விளக்கை எடுத்துப் போ. பயன்படும்” என்றான்.
”இதனால் எனக்கு என்ன பயன்? சொல்லப்பா” என்றான் பார்வையில்லாதவன்.
”உனக்காக இல்லை இது. பார்வையுள்ளவர்களுக்கு நீ வருவது தெரியும் பொருட்டுத்தான்” என்றான் நண்பன் சிரித்தபடி.
”வேடிக்கைதான். கொடு” என்றபடி லாந்தரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
காட்டு வழியே போய்க்கொண்டிருந்தபோது எதிரில் யாரோ வரும் ஓசை கேட்டது.
”தம்பி! எங்க போறப்பா இந்த இருட்டுல. நா வேணா கூட வரட்டுமா துணைக்கு?” என்றார் ஒரு பெரியவர்.
சிரித்தபடியே” வேணாங்க. அதான் லாந்தரை எடுத்துக்கிட்டுப் போறேனே? கவனிக்கலையா?” என்றான்.
”அது அணைஞ்சு போச்சுப்பா. அதைக் கவனிச்சதுனாலதான் கேட்டேன்.வா. நான் கூட்டிக்கிட்டுப் போறேன்” என்று கைகளைப் பற்றி வெளிச்சமான பகுதியை அடையும்வரை அவனை கூட்டிச் சென்றார்.
பார்வை
இருக்கும்போதும்
இல்லாதபோதும்
எதைப்
பார்க்கிறோம்
என்பதும்
எதைப்
பார்க்காது போகிறோம்
என்பதும்
பிறர்
நம்மைப்
பார்க்கும்போதுதான்
நமக்குத் தெரிகிறது.
15 கருத்துகள்:
//மகனே! நீ ஆற்றின் அக்கரையில்தான் இருக்கிறாய்.
Superb Ji !
எதைக் கடக்க முடியுமோ அதையே கடக்க முடிகிறது. எதைக் கடக்க
இயலாதோ அதைக் கடக்கத்
தேவையில்லை.//
மிகவும் ரசித்தேன். வெகு அருமை.
//”உனக்காக இல்லை இது. பார்வையுள்ளவர்களுக்கு நீ வருவது தெரியும் பொருட்டுத்தான்” //
ஆஹா, சரியாகவே சொன்னார்.
//பார்வை இருக்கும்போதும் இல்லாதபோதும் எதைப் பார்க்கிறோம்
என்பதும் எதைப் பார்க்காது போகிறோம் என்பதும் பிறர்
நம்மைப் பார்க்கும்போதுதான்
நமக்குத் தெரிகிறது.//
வாஸ்துவமான ஒத்துக்கொள்ளக்கூடிய சொற்கள் தான்.
பாராட்டுக்கள் ஜி.
கவிதைகள் மட்டுமல்ல உங்கள் தத்துவங்களும் மிகச்சிறந்தவையாகவே உள்ளன.
தொடருங்கள் ... இதுபோல பல விஷயங்களைப் பகிருங்கள்.
வாழ்த்துக்கள். அன்புடன் vgk
பிறர்
நம்மைப்
பார்க்கும்போதுதான்
நமக்குத் தெரிகிறது.//
தத்துவங்கள் அருமை.
இரண்டும் அருமை ஜி . நம் மனதில் எதை நினைக்கிறோமோ அதை செய்ய முடியும் என்பது முதலின் பொருள்
பார்வை
இருக்கும்போதும்
இல்லாதபோதும்
எதைப்
பார்க்கிறோம்
என்பதும்
எதைப்
பார்க்காது போகிறோம்
என்பதும்
பிறர்
நம்மைப்
பார்க்கும்போதுதான்
நமக்குத் தெரிகிறது.
என் இதயம் தொட்ட இனிய வரிகள் அண்ணா
அசத்தலான உட்கருத்தை கொண்ட பதிவு
மனதை அப்படியே ஆட்கொள்கிறது
வேகமாய் கடக்க நினைத்து விவேகத்தை இழந்துவிடக் கூடாதது என்பதை உணர்த்துகிறது அண்ணே ....
தன்னைநம்பி
தலை கணத்தில்
தம்மை இழப்போரில்
தடம் புரளத்தான்
செய்கிறது சிலரது
வாழ்வு.......
இரண்டுமே நல்ல கருத்துள்ள பகிர்வு! இது போன்ற விஷயங்களையும் நீங்கள் அவ்வப்போது பகிர்வது நல்ல விஷயம். நன்றி ஜி!
எதைக் கடக்க
முடியுமோ
அதையே கடக்க
முடிகிறது.
எதைக் கடக்க
இயலாதோ
அதைக் கடக்கத்
தேவையில்லை.//
தத்துவம் நிறைந்த கதைகள். அருமை.
முதலாவது கதை சிந்திக்க வைத்தது, இரண்டாவது கதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
நீங்க சொல்லற அந்த ரெண்டாவது கதைய- "இன்று ஒரு தகவல்"-னு AIR program ஒண்ணு வரும், என் சின்ன வயசில... அதுல கேட்டிருக்கேன்! அது நிஜமாவே ஒரு நல்ல தரமான program. கதைய ஞாபகப் படுத்தினதோடு அந்த program யும் நினைவு படுத்தியது, உங்க பதிவு!
the second story also reminded me of a fav. quote of mine... it doesn't ring on the same note- as the story... but something similar, perhaps:
"I stopped worrying over what others were thinking about me, when I realized that they were not at all thinking about me- but were themselves worried over what I was thinking about them"- Anonymous
நல்ல பதிவு.
வை.கோ. சாரை வழிமொழிகிறேன். அவருக்கப்புறம் வருவதால் எனக்கு சுலபமாகிவிடுகிறது சில நேரங்களில்...
திடீரென்று நம் அலுவல்களுக்காக பார்த்தும் கடந்தும் போகிறோம்.நீங்கள் சொன்ன தத்துவங்கள் சாதாரண விஷயம் என்று நினைத்தவற்றைச் சிந்திக்க வைக்கிறது !
அருமையான அழகான சிறு கவிதைகள் இரண்டு. அதற்கு விளக்கமாக அழகான இரு கதைகள்.மெருகு ஏறிக்கொண்டே இருக்கிறது, சுந்தர்ஜி.
சபாஷ்:)
nice one...sorry...two
கருத்துரையிடுக