5.5.11

கீறல் ரெகார்ட்


















ஒரு கூட்டத்துக்காக ஒருவாரம் ரேணிகுண்டா போனதில் வீட்டின் எல்லா வேலைகளும் போட்டது போட்டபடிக் கிடக்கின்றன.

மனைவி கேட்கிறாள், வீடென்று எதனைச் சொல்வீர்? இது இல்லை நமது வீடு. குழந்தைகளின் படுத்தலோ சொல்லி மாளவில்லை” என்றாள்.

அதற்கு நான் சொன்னேன்.” கண்ணம்மா! அவை வெறும் குழந்தைகள் அல்ல. கடவுளின் குழந்தைகள்- நீயும் நானும் சிறு வயதில் இருந்தாற்போல. நீயும் குழந்தையாய் மாறிவிடு. உன் கோணம் மாறிவிட்டால் பார்க்கும் காட்சிகளும் மாறிவிடும்”.

என்ன வெய்யில்? என்ன வெய்யில்? என்று இரண்டு தடவை சொல்லிவிட்டுக் குளிக்கக் கிளம்பினேன்.

”அப்பறம் ஜூடுக்கு மற்றுமொரு கவிதைன்னு அனுப்பியிருந்தீங்களே? அது அட்ரஸி நாட் அவைலபிள்ன்னு திரும்பி வந்திடுச்சு. டேபிள் மேல வெச்சுருக்கேன்” என்றாள்.

குளித்துவிட்டு வந்து கண்ணாடியில் எதேச்சையாக என் பிம்பத்தைப் பார்த்தபோது ஷேவ் பண்ணியிருக்கலாமோ? என்று ஒரு யோசனை தோன்றியது. ஒருவார தாடியுடன் ஏதோ ஹரித்வார்-ரிஷிகேஷில் திரியும் சாமியார்களைப் போல உணர்ந்தேன்.

”ஒரு காவிவேஷ்டி கட்டிக்கிட்டு கழுத்தில ருத்ராக்ஷ மாலயும் போட்டுக்கிட்டு ஏதாவது நதிதீரத்துல போய் உக்காந்துட்டீங்கன்னா உங்களைக் கடவுளா தூக்கிவெச்சுக் கொண்டாடுவாங்க” என்று அடிக்கடி சொல்லும் சாரநாத் நினைவுக்கு வந்தான்.

நினைவுகள் சுழன்றபடி இருக்க என்ன சத்தம் என்று திரும்பிப் பார்க்க நீங்கள் எல்லோரும் கையில் கிடைத்த பொருட்களோடு அடிக்க வரும் காட்சி தெரிய வுடு ஜூட் என்று எதிர்திசையில் தாவி ஓடினேன்.

(படத்துக்குப் பொருத்தமாய் எதுவும் கிடைக்காமல் கடைசியில் ஒரு கீறல் ரெகார்டையே போடவேண்டியதாப் போச்சு)

12 கருத்துகள்:

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! சொன்னது…

புனைவு என்று சொல்லும் அளவில் இல்லாமல் எதார்த்ததொடு வாசிப்பவர்களையும் இணைத்து கதை சொன்ன விதம் சிறப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி

மிருணா சொன்னது…

ஹா ஹா! சமாளிப்பு பிரமாதம், படம் போலவே. இருந்தாலும் என்னைக் கேட்டால் (அதான கேட்கல!) ஒரு கதவின் படத்தையும் , தாழின் படத்தையும் பரிந்துரைத்திருப்பேன் :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

”கீறல் ரெகார்ட்”

ரெகார்ட் கீறல் ஆனது பலமுறை பலரால் கேட்கப்பட்டதால். பலரின் மனக்கீறல்களை வெளிப்படுத்தியதால்; பலசம்பவங்கள் நம் மனதை கீறியதால் தானே.

அதனால் தலைப்பு பொருத்தமே.

இந்தப்பதிவின் மூலம் தங்களின் பல பழைய பதிவுகளையும் அதற்கான பலரின் பின்னூட்டங்களையும், அதற்குத் தாங்கள் எழுதியிருந்த பதில் கருத்துக்களையும், மீண்டும் படிக்கும் வாய்ப்புக்கிட்டியது.

தாங்கள் வீடு கட்ட பட்ட கஷ்டங்கள், பலரும் பட்டிருப்பார்கள் என்றாலும், அதை சுவாரஸ்யமாக எழுத்துக்களால் பதிவு என்ற கட்டடமாக கட்டி முடித்துள்ளது அருமையோ அருமை!

எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பாராட்டுக்கள். அன்புடன் vgk

RVS சொன்னது…

இப்டி கூட ஆர்க்கைவ்ஸ் போடலாமா... உங்களோட திறமை இருக்கே!! ;-))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

”ஒரு காவிவேஷ்டி கட்டிக்கிட்டு கழுத்தில ருத்ராக்ஷ மாலயும் போட்டுக்கிட்டு ஏதாவது நதிதீரத்துல போய் உக்காந்துட்டீங்கன்னா” பிரயோசனம் இல்லை. ஆசிரமம் அமைத்துக்கொண்டு, அழகிகள் சிஷ்ரூசை செய்ய, அமர்க்களமாய் இருக்கவும், அகப்படாமல் இருக்கவும் கொடுத்து வைத்திருக்கணும்.

ஷேவிங் விஷயம், குறிப்பாக ஆண்களுக்கு பெரும் தொல்லையாகவே உள்ளது.

வலதுபுறம் இழுத்துவிட்டு இடதுபுறம் இழுப்பதற்குள், மீண்டும் வலதுபுறம் முடி வளர்ந்து விடுகிறது.

’முடி’வில்லாத தொடரும் பிரச்சனையாகவே உள்ளது.

‘முடி’யைப்பிய்த்துக்கொண்டு என்னதான் யோசித்தாலும், எந்த ’முடி’வுக்கும் வர ‘முடி’யாமல் உள்ளது.

A.R.RAJAGOPALAN சொன்னது…

எளிய நடையில் இனிய படைப்புகளை பதிந்த விதம் அருமை
கீறல்களே நம் கிரீடங்களாகும் ..........

Ramani சொன்னது…

ஆர்வமாய் கேட்பவர்களுக்காக
பதிவுகளை வித்தியாசமாக
அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி
பதிவுகளுக்குள் போய்க்கொண்டிருக்கிறேன்
நன்றி

Vel Kannan சொன்னது…

ரொம்ப free - யிருந்த இப்படித்தான் யோசிக்க தோணும் , கீறல் ரெக்கார்ட், ஓட்டை பானைன்னு ... போங்க...ப்பா போங்க .. போய் புள்ள குட்டிய படிக்க வைங்க.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கீறல் ரெகார்ட் என்று நீங்கள் சொன்னாலும், இனிய ரெகார்ட் தான் எங்களைப் பொறுத்தவரை. படிக்காதவற்றைப் படிக்கிறேன்...

vasan சொன்னது…

ஒரு சுற்று வ‌ந்து விட்ட‌தா கீறல் ரிக்கார்டு,
முள்ளை கொஞ்ச‌ம் நக‌ர்த்தி விட்டால்.
இன்னொரு சுற்றும் வரும் தானே?

G.M Balasubramaniam சொன்னது…

நானும் என் பழைய பதிவுகள் பல படிக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் வரும்பொது, எப்படி வாசகர்களை படிக்க வைக்கலாம் என்று எண்ணுவதுண்டு. உங்கள் வழி தனி வழி.! புதியவையே நிறைய தேங்கி விட்டது,படித்து விடுவேன்.

பத்மா சொன்னது…

super promotion style !!!!
என்ன இருந்தாலும் சுந்தர்ஜி சுந்தர்ஜி தான்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...