தூரிகையிலிருந்து
வெளிப்பட்ட நாள் முதலாய்
உறைந்து நிற்கிறது
அந்தப் படகும்
அதனடி நீரும்.
அசையாத மரங்களால்
சிறைப்பட்ட காற்றுக்காகவும்
ஒரு நாளும் திறவாத
சாளரங்களுக்காகவும்
துயருறுகிறது இக்கவிதை.
உறைந்த நீரில்
என்றோ துள்ளவும் நீந்தவும்
செய்த மீன்களின்
விடுதலைக்காகவும்
கவலையுறும் என் கவிதை-
கழியுடன் கையுயர்த்தி
இறுகிப்போன மனிதனையாவது
இருட்டுவதற்குள் மீட்டெடுத்து
சந்தடியில்லா வீட்டின் வாயிலில்
கொண்டுசேர்க்க முயல்கிறது.
அவன் மெதுவே திறக்கக் கூடும்
கதவுகளையும் சாளரங்களையும்.
மறுநாளில்
மரங்களும் நீரும் அசையும்.
மீன்களும் துள்ளக் கூடும்.
அதன் பின்னே
ஓவியத்தின் மரங்களின் மேல்
எங்கிருந்தாவது சிறகசைத்து
பறவைகள் வந்தமரும்.
18 கருத்துகள்:
வாழ்த்துக்கள் கூற வார்த்தைகளே இல்லை ..
அருமை /.
சுந்தர்ஜியின் இந்தக் கவிதைக்குப் பிறகும் அந்த நிழற்படம் நிகழ்வாய் அசையாவிட்டால்....!
வித்தியாசமான தலைப்புகளில்
வித்தியாசம் காட்டும்
ஒவ்வொரு கவிதையும்
வெவ்வேறு தனிவேர்
அண்ணா சுந்தர்ஜி உங்களை
அன்னாந்து
அதிசயித்து
ஆர்தர்சமாய் பார்க்கிறேன்
நீங்கள் கைகளில் அள்ளிய நீரை - ஒரு துளி
என் மேலும் தெளியுங்களேன்
நான் மேலும் தெளிவாகிறேன்
ஓவியத்தை
ஓடவிட்டமைக்கு
ஒப்பில்லா நன்றி
சுந்தர்ஜி, அந்த ஓவியமும், அதற்கான உங்கள் கவிதையும் நான் மிகவும் ரசித்த ஒன்று. கவிதையின் எளிமையும் உங்கள் கற்பனையும் மெருகேறிக்கொண்டே போகிறது. அருமை. வாழ்த்துக்கள்.
ஒரு படைப்பை(ஓவியத்தை) உள்வாங்கி பிறிதொரு படைப்பாக வெளிபடுத்தல் இதுதானோ
ரகுவரனின் மிதிபட்டு, அகலிகை மீண்டு(ம்)
வானமோ, வனமோ ஏகியது போல்,
சுந்தர்ஜியின் கவிபட்டு, ஓவியம் உயிர் பெற்று
கதவு, ஜன்னல், பறவைகள் கிரீச்சிட,
நீராட,குயில்கள் கூட
கூடு கட்டலாம் மரங்களில்!!
ஆச்சர்யமாக இருக்கிறது உங்கள் கவிதையின் கோணம். keats -இன் Ode on a Grecian Urn கலையின் நிலைத்த தன்மையை இப்படிக் கொண்டாடுகிறது:
Ah, happy, happy boughs that cannot shed
Your leaves, nor ever bid the Spring adieu,
And, happy melodist, unwearied,
Forever piping songs for ever anew.
உங்கள் கவிதை அப்படியே நேர்மாறாய் வாழ்வைக் கொண்டாடுவதாய். அருமை சுந்தர்ஜி.
அருமையான கற்பனை. அல்வா போன்ற கவிதை. ஓவியச்சிறை விலகட்டும், ஓவியங்களுக்கும் சுதந்திரம் கிடைக்கட்டும். பாராட்டுக்கள்.
எல்லா ஓவியங்களிலும் ஏதேனும் சிறைப்பட்டிருக்கும்.. அதை விடுவிக்கும் கவிதைச்சாவி எல்லோரிடமுமா கிடைத்து விடுகிறது..
அவ்வோவியம் சிறை மீட்கப்
பட்டிருந்தால் இந்தக் கவிதை
எழுதப் படாமலே போயிருக்கும்
அல்லவா சுந்தர்ஜி?
அபாரம் சுந்தர்ஜி! :-)
விடுபட்டிருந்த சில தற்போதைய கவிதைகள் வாசித்திருக்கிறேன். செம்ம ஃபார்ம். கலக்குங்க
பொய்தானே? அதான் இப்போ சொல்லிட்டீங்களே அரசன்.
இன்னுமொரு கவிதை ஹேமாவை விட்டு எழுதவெச்சிடுவோம்ல.
பட்டுதா ராஜு? தெளித்துவிட்டேன்.
மெருகை கூர்மையாய் அவதனித்து வாழ்த்தும் பாலு சாருக்கு நன்றி. நான் எழுதியவற்றில் சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த கவித அது.
யா வேல்கண்ணன். யா.
பின்னூட்டச் சக்ரவர்த்தி வாசன் வாழ்க வாழ்க. உங்க பின்னூட்டத்துக்காக எழுதிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே!(பின்னூட்டத்துக்கெல்லாம் பதிலெழுத மாட்டீங்களான்னு நீங்க கேட்டதுதான் மறுபடியும் உசுப்பி விட்டுடிச்சு)
இந்த மாதிரியான ரசனை ஒரு கொடுப்பினைதான் மிருணா.பணிந்து ஏற்றுக்கொள்கிறேன்.நீங்கள் நேரமொதுக்கி வாசிப்பது என் பாக்யம். தொடர்ந்து வாசியுங்கள்.
ஒரு வார்டன் போல ஓவியச் சிறையிலிருந்து விடை கொடுத்து விட்டு ஒரு லாலாக்கடை சேட்டுப் போல என் கவிதையை அல்வா ஆக்கிட்டீங்களே கோபு சார்!
உங்களால் படிக்கப்படாமலும் மது.
உங்கள்ட்டதான் அந்தக் கொத்துச் சாவி இருக்கறதா அன்னிக்கு திருச்சி ரயில்வே ஸ்டேஷன்ல பேசிக்கிட்டிருந்தாங்க ரிஷபன்.
வாரும் ஓய் துபாய் பா.ரா.
எப்பவாவது ராமநாதபுரத்துல மழை மாதிரி வர்றீர்.என்ன பண்றது நீர் பல ஜோலிக்காரர்.நம்மள மாதிரியா?
இருந்தாலும் அப்பப்ப நீர் வந்துபோனாலும் அடுத்த தடவை வர்ற வரைக்கும் ஒரு நெடியை விட்டுட்டுத்தான் போறீர்.எழுத்தோட மகிமையது.
sudarji vithiyaasamaana paarvai...
12th la padicha poem la.antha potrate kavithai nermaarai irukkum........
vaazhthukal.
கருத்துரையிடுக