5.4.12

இன்றைய ஆனந்த விகடனில் “ஊரடங்கு”


இந்தச் சாலையில்
நீங்கள் செல்லத்
தடை அமலில் இருக்கிறது.

இங்கு காய் மற்றும்
கனிகள் விற்பதற்கில்லை.

அறுந்த செருப்பைப் 
பழுது நீக்க இயலாது.

தெருவோரங்களில்
கடைவண்டிகளுக்கு
அனுமதியில்லை.

ஆம்புலன்ஸ் நோயாளிக்கு
உயிர் இருக்கும்வரை
மாற்றுவழியில் செல்லலாம்.

உங்கள் வங்கிக்குச்
செல்லும் வழி
மறுக்கப்பட்டிருக்கிறது.

அரிசி மற்றும் தானியங்கள்
சேகரிக்கும் நிலையங்களை
அடையும் வழிகள்
தடைக்குட்படுகின்றன.

பாதுகாப்புக் கருதி
மருத்துவமனைகளில்
புற நோயாளிகளுக்கு
இன்றும் அனுமதியில்லை.

கட்டணக் கழிப்பறைகள்
இன்றும் இயங்காது.

தவிர்க்க இயலாததால்
திரைக்காட்சிகள் மட்டும்
தக்க பாதுகாப்புடன்
தொடர்கின்றன.

கொடுத்த வாக்குறுதியின்படி
மலிவுவிலையில்
தரமான சாராயம்
விநியோகிக்கப்படுகிறது.

உங்கள் தெருக்களில்
நமது தலைவர்களை
நினைத்துப்
பெருமூச்சு விட்டபடி
காறி உமிழ்வதற்கும்
சிறுநீர் கழிப்பதற்கும்
தடை ஏதுமில்லை.

நன்றி- ஆனந்தவிகடன் - 11.04.2012

23 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

நன்றாகச் சொன்னீர்கள்!

Madumitha சொன்னது…

ஆகா.
அரசியல் சாக்கடையில்
காறி உமிழலாம்.
கட்டணமின்றி
சிறுநீர் கழிக்கலாம்.
சுத்திகரிப்பாளர்
எவரோ?

நிலா மகள் சொன்னது…

நல்ல நையாண்டி! நிதர்சனத்தின் அதிர்வு கவிதையெங்கும் விரவியிருக்க நவரசமும் உணரமுடிகிறது வாசிக்கையில்.

ஹேமா சொன்னது…

இதுக்காவது சுதந்திரம் தந்தாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கலாம் !

Vel Kannan சொன்னது…

//நல்ல நையாண்டி! நிதர்சனத்தின் அதிர்வு கவிதையெங்கும் விரவியிருக்க நவரசமும் உணரமுடிகிறது வாசிக்கையில்.// என்று நிலா மகள் சொன்னதையே நானும் ....

Harani சொன்னது…

சுந்தர்ஜி..

மனம் வருத்தமுறும் இந்த எள்ளல் கவிதையின்பின்
எம் மக்கள் படும் துயரம் கண்டு.

G.M Balasubramaniam சொன்னது…

கவிதை நன்றாக வந்துள்ளது என்று சொல்வது UNDERSTATEMENT ஆக இருக்கும்.

காயாதவன் சொன்னது…

ஒட்டிய பக்கங்களில் ஒளிந்திருந்த ஊரடங்கு கவிதை இப்போதுதான் கண்டுபிடித்தேன். சாட்டை அடி.

ரிஷபன் சொன்னது…

Congrats.

ரத்னவேல் நடராஜன் சொன்னது…

வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

VERY GLAD NEWS! HEARTY CONGRATULATIONS, SIR.

vasan சொன்னது…

/உங்கள் தெருக்களில்
நமது தலைவர்களை
நினைத்துப்
பெருமூச்சு விட்டபடி
காறி உமிழ்வதற்கும்
சிறுநீர் கழிப்பதற்கும்
தடை ஏதுமில்லை./

இதுதான் ந‌ச்...
உங்க‌ள் டச்...

ப.தியாகு சொன்னது…

நாடு, தலைவர்கள், அரசாங்கம், சட்டம், அதிகாரிகள்..
இவர்களின் உபயம்தான் சாதாரண மக்களிடம் நாளும் கூடும் மன அழுத்தம்.
நம் குழந்தைகள் வாழவிருக்கும் காலத்தை கணக்கில் கொண்டு சிந்திக்கையில்
அச்சமும், பீதியும் ஏற்படுவதை என்ன சொல்ல.

முத்திரையாக ஒரு கவிதை தந்தீர்கள் சுந்தர்ஜி சார்!

மீனின் வீடு - குடியேற வாடகை?!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//கட்டணக் கழிப்பறைகள்
இன்றும் இயங்காது.//

அது இய்ங்கினாலும் இயங்காவிட்டாலும் இரண்டுமே கொடுமை தான்.

raji சொன்னது…

கடைசி மூன்று விஷயங்களில் அவலம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.பகிர்விற்கு நன்றி

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

அற்புதமாய் செவிட்டிலறைவது போல் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... சொன்னது…

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்!

உமா மோகன் சொன்னது…

எப்போதும் இரண்டு அப்பம் கேட்கிறார் இந்த சுந்தர்ஜி. விகடன்லயும் இதே வசனம் போல:-P

அடங்காத அட்டகாசங்களின் ஊரடங்கு உத்தரவு.

நியாயமாக அரசியல்வாதிகள் முகத்தைத் துடைக்க வேண்டும்.

கீதமஞ்சரி சொன்னது…

நாயைக் கட்டிய சங்கிலியின் நீளம்வரை அதற்கு எங்கும் போய்வர எதுவும் செய்ய எல்லா சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதைப் போல் ஓட்டுவங்கிக்கு உண்டான சுதந்திரம் முகத்தில் அறைகிறது. பாராட்டுகள் சுந்தர்ஜி.

எஸ்.ராஜகுமாரன் சொன்னது…

ஒரு நல்ல கவிதை என்பது சொல்லாலும் பொருளாலும் பிரிக்கவியலாததாய்,வேறு சொல்லிட்டு நிரப்ப இயலாததாய் இருக்க வேண்டும்.மனம் மறந்தாலும்,சொற்கள் ஆன்மாவுக்குள் புதைய வேண்டும்.அப்படிப்பட்டதான கவிதைகள்தான் இவை.வாழ்க... வளர்க...தொடர்க... - நேசமிகு ராஜகுமாரன் 10- 4- 2012

சிவகுமாரன் சொன்னது…

இறுதிவரி அபாரம்.
உமிழ்ந்ததும் கழித்ததும்
தெறிக்கிறதே நம் மீதே.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சாட்டையடி.....

சங்கவி சொன்னது…

//உங்கள் தெருக்களில்
நமது தலைவர்களை
நினைத்துப்
பெருமூச்சு விட்டபடி
காறி உமிழ்வதற்கும்
சிறுநீர் கழிப்பதற்கும்
தடை ஏதுமில்லை.//

உண்மை...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...