இடது கையால்
தூரிகையின் வசமின்றி
ஒரு குழந்தை கிறுக்கிய ஓவியம்
என நீங்கள் நினைப்பது சரிதான்.
வீட்டின் பின்புறம்
ஒரு நதி ஓடுவது
மட்டுமின்றி
நீருக்குள் நீந்தும் மீன்களின்
வீடுகளின் வசதி
குறித்தும்
இரவுகளில் அவை எப்படி
உறங்குகின்றன என்பது பற்றியும்
குழந்தைகள் வரையும்
ஓவியங்களால்மட்டுமே
கவலை கொள்ளமுடியும்.
ஒரு கொக்கியில் புழுவை மாட்டி
மீன்களைப் பிடிக்கும்
ஓவியங்களைக்
குழந்தைகள் ஒரு போதும்
வரைந்ததுமில்லை
வரைய
விரும்பியதுமில்லை.
நன்றி- ஆனந்த விகடன் - 11.04.2012.
26 கருத்துகள்:
nice one sir... didn't know this new blog... followin from now :)
and, u can find a similar one here..
http://thooralveli.blogspot.com/2009/12/blog-post_26.html
குழந்தையின் எண்ணம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.உங்களாலும் கொக்கியில் புழு குத்தி மீன் பிடிக்கமுடியாது.சரியா.? கவிதை நன்றாக வந்துள்ளது சுந்தர்ஜி. பாராட்டுக்கள்.
குழந்தைகள் தெய்வத்தோடு எப்போதும்
ஒப்புமையோடு தோளுரசி கும்மாளமிட்டுச்
செல்லக் காரணமே இந்த குழந்தை எண்ணங்களால் தான்.
நதிக்குள் நீந்தும்
மீன்களுக்கான
வீடுகளின் வசதி
குறித்தும்
இரவுகளில்
அவை எப்படி
உறங்குகின்றன
என்பது பற்றியும்
கவலை கொள்ள வைக்கும் குழந்தை மனசு இப்போது வாசிப்பவனுக்கும் தொற்றிக் கொள்கிறது
பூங்கொத்து!
இறுதி வரிகள்
குழந்தையின் மனதை மட்டுமின்றி
கவிஞனின் மனதையும் படம் பிடித்து காட்டுகிறது.
அருமை.
கவிதை அருமை
beautiful!
சொல்வனம் மீனின் வீடு கவிதை அருமை.வாழ்த்துக்கள்.
இந்தவார ஆவியில் இரட்டை கவிதை.
இரட்டிப்பு மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.
சொல்வனத்தில் மீனின் வீடு குழந்தை மன வீடாக.அருமை.
//குழந்தைகள் வரையும்
ஓவியங்களால்மட்டுமே
கவலை கொள்ளமுடியும்.//
;))))) அருமை. குழந்தைகளும் அவைகளின் எண்ணங்களும் எப்போதுமே புதுமை.
Beautiful!
Just like an infant's smile in her sleep...
இடது கையால் வரைந்த அந்த ஓவியம் கண்கவர்ந்தது , போல் கவிதையும் மனம் கவர்ந்தது.
குழந்தைகள் உலகத்தில் மீனிற்கான வீடு மட்டுமன்றி எந்த உயிருக்கும் இதே இடம்தான்
குழந்தையின் மனசை அருமையாய் வரைந்திருக்கிரீர்கள்.
அற்புதம்! ஆம், குழந்தைகளால்
''கொக்கியில் புழுவை மாட்டி
மீன்களைப் பிடிக்கும்
ஓவியங்களை''
ஒருபோதும் வரைய முடியாது. குழந்தைகளாக இருந்த நம் எல்லாருக்கும் அது தெரியும். அற்புதமான கவிதை. மனமுவந்த பாராட்டுக்கள்!
இந்த மீன் வீட்டுக்கு நான் போயிருக்கேன். பரிவின் இசை பாடும் என் மனம் கவர்ந்த ஓவியம்.:) தொடரட்டும் நல்ல பரிவுகள்.
மீனின் வீடு ரொம்ப அருமை.
சுந்தர்ஜி! இரண்டுமே சூப்பர்ஜி.
மீனின் வீடு-நல்ல உளவியல் பாடம்.
//ஒரு கொக்கியில் புழுவை மாட்டி
மீன்களைப் பிடிக்கும்
ஓவியங்களைக்
குழந்தைகள் ஒரு போதும்
வரைந்ததுமில்லை
வரைய
விரும்பியதுமில்லை.//
அருமை சுந்தர்ஜி.
ஆனால் இன்றைய வீடியோ கேம்ஸ் நமது சந்ததியினரைக் கொலைகாரர்களாகவும், சித்ரவதை செய்து ரசிப்பவர்களாகவும் மாற்ரிக்கொண்டு வருவதாக எண்ணுகிறேன்.
சுந்தர்ஜி! மனிதக்குழந்தைகள் ஏன் பெரிய மனிதர்களாக வளர்வதில்லை?
சுந்தர்ஜி! எப்போதும் போல் உங்கள் கவிதைகள் அருமை.
ஊரடங்கு எதிர்காலம் குறித்தான பயத்தை ஏற்படுத்துவது என்னமோ உண்மை.
அன்புள்ள சுந்தர்ஜி...
என்னுடைய பதிவிற்குள் நுழைய நேரமில்லாத நிலையிலும் இந்த இரு கவிதைகளை ஏற்கெனவே வாசித்துவிட்டேன். இவை குறித்து நிறைய எண்ணங்கள் மனதிற்குள் துள்ளிக்கொண்டிருக்கின்றன. எழுத வேண்டும். அதற்கான முன்மடல் இது. வாழ்வின் நிலைப்பாடு இன்றைக்கு அச்சமுடைத்ததாகவே உள்ளது, இருப்பினும் மறைத்து வாழ்கிறேன். அவரவர மனதிற்கு ஊரடங்கு சட்டத்தையிட்டு. அதனால்தான் இந்த அரசியல் சாக்கடை புரண்டோடுகிறது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும். அழகியல் இயக்கத்தின் அழுத்தமான கவிதை மீனின்வீடு. எழுதுகிறேன் விரைவில் விரிவாக.
சொல்வனத்தின் இரு கவிதைகளும் நன்று. குறிப்பாய் இது.விரைவில் நூல் மலர்க.வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக