5.7.12

இன்றைய ஆனந்த விகடனில் “ஒரு பறவையை வரைவது-”






















பறவையின் ஓவியம் ஒன்று 
வரைய எத்தனிக்கிறேன்.

அது ஒருவேளை
பறந்துவிடக்கூடுமென்பதால்
ஆழ்ந்த உற்க்கத்தில்
இருக்கும்போது
தூரிகையால் தொடுகிறேன்.

சிறகுகளுக்கான
இறுதிச்சொட்டு தீர்ந்த பின்
அதன் சிறகுகள்
மெல்ல அசைவதாய் உணர்கிறேன்.

பிறக்க இருக்கிற சில குஞ்சுகளை
ஓடுகள் உடைந்துவிடாமல்
கவனமாகக் கூட்டுக்குள்
வைக்கிறேன்.

இரவின் உணவு
ஒரு பெரும் விருந்தாய்
அமையட்டும் என
கூடுதலாகவே
தானியங்களை இரைக்கிறேன்.

தினமும் காலையில்
கூவவும் குஞ்சுகளைக்
கொஞ்சவும் இருக்கட்டும்
என தனித்தனியே
குரல்களை இணைக்கிறேன்.

பறவைகளோடு பேசும்
மனிதர்கள் இருவரை
எதற்கும் இருக்கட்டுமெனப்
பக்கத்தில் நிற்கவைத்துவிட்டு-

தூரிகைகளைக்
கழுவிக்கொண்டிருந்தேன்.

அந்தப் பறவை
மனிதனிடம் சொன்னது,

’காடுகளை இழந்த
என் வலியை
வரைய வண்ணங்கள்
இல்லை இவன் வசம்’

நன்றி-ஆனந்தவிகடன் - 11 ஜூலை 2012.

13 கருத்துகள்:

vasan சொன்னது…

இந்த‌ நுட்ப‌ம் தான் உங்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌த்தை
அடையாளப் படுத்துவ‌து.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளைப் ப‌டாய்ப் படுத்துவ‌து.
தூரிகையாலுயிரிரூட்டி,
அதை க‌ழுவும் போது ம‌னதைக் க‌ல‌ங்க‌வைக்கும்
ஓவிய‌க் க‌விதை.

சக்தி சொன்னது…

காடுகளை இழந்த என் வலியை
வரைய வண்ணங்கள்
இல்லை இவன் வசம்...
ஆனால் எழுத்துக்கள் உண்டு...
எந்த ஒரு பறவை படமும் இனி காட்டை வேண்டும். !!!

ஹேமா சொன்னது…

உண்மைதான் கூடிழந்தவர்களுக்கு கூட்டைக் கீறிக் காட்டினால்...திருப்தி தருமா.அழகான உணர்வைக் கீறிய கவிதை சுந்தர்ஜி !

கீதமஞ்சரி சொன்னது…

கூடும் குஞ்சுகளும் குரலும் குறிப்பறிவோரும் இருந்து என்னபயன்? கூடிவாழக் காடு இல்லையே எனப்பரிதவிக்கும் பறவையின் வலி வண்ணத்தில் இல்லையென்றாலும் வார்த்தைகளில் விளங்குகிறது, கூடவே நாடிழந்த மனிதரின் அவலமும்.

அப்பாதுரை சொன்னது…

எதிர்பாராமல் இதயத்தில் விழுந்த அடி போல் கவிதை.

பத்மா சொன்னது…

picture class ji ...comment follows ..

சிவகுமாரன் சொன்னது…

சே. இந்த மாதிரியெல்லாம் எழுதி , என்னை கவிதை எழுத விடாமல் பயமுறுத்துகிறீர்கள்.

கோவை மு.சரளா சொன்னது…

வலியின் உச்சம்
உடுக்கை இழந்தவன் கையை போல ......அருமையான வெளிபாடு

ரிஷபன் சொன்னது…

பறவைகளோடு பேசும்
மனிதர்கள் இருவரை
எதற்கும் இருக்கட்டுமெனப்
பக்கத்தில் நிற்கவைத்துவிட்டு-


Super. Congrats.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
ந்ன்றாக ரசித்தேன். கடைசிவரிகள் மிக அருமை. பாராட்டுக்கள் ஜி.

கவிதையைக் கண்டுபிடிக்க இவ்வளவு நாழி ஆகிவிட்டது. அதனால் தாமதம்.

தடவிக்கொண்டே இருந்தேன்.

கடைசியில் ‘இங்கே’ யில் இங்கே தான் இருந்துள்ளது, பறவை. ;)

Jayajothy Jayajothy சொன்னது…

பகிரவோ பகரவோ முடியாத வலி உணர்கையில் கவிதை சொல்கிறது. வலுவான வார்த்தைகளில்.

ராதா, பஹ்ரைன் சொன்னது…

பறவையின் வலி என்னையும் கொல்கிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//’காடுகளை இழந்த
என் வலியை
வரைய வண்ணங்கள்
இல்லை இவன் வசம்’//

பறவைகளின் வலியை உணர முடிந்தது கவிதையில்....

நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...