இந்த நாற்காலி
யாருக்காகவும் காத்திருக்கவில்லை.
அதன் இருக்கை யாரும் அமரா
வெற்றிடத்தைப் பருகியபடி இருக்கிறது.
உங்கள் பார்வைக்குத் தப்பிய கண்ணாடியில்
தன் முகத்தை நீண்ட நாட்களுக்குப்பின்
பார்த்து ரசிக்கிறது.
பின்னும் முன்னும்
பேசப்படாத வார்த்தைகளையும்
பேசப்பட்டவைகளையும் அசை போடுகிறது.
பரபரப்பின் வெம்மையைத் துறந்து
நிதானத்தின் துள்ளலைப்
பூசிக்கொண்டிருக்கும்போது
உள்ளே நுழைந்துவிடாதீர்கள்.
எந்த இசையும் ஒலிக்கப்படாத நிசப்தத்தை
அது அனுபவிக்கவிடுங்கள்.
இங்கிருந்து நாளையோ மறுதினமோ
அது அகற்றப்படும் வரை
இந்த ஏகாந்தத்தை அது அணிந்து மகிழட்டும்.
நன்றி- கல்கி- 05.08.2012
15 கருத்துகள்:
புராதன நாற்காலியைக் கண்டு ரசித்தேன்.
பாராட்டுக்களும் வாழ்த்துகளும் சுந்தர்ஜி சார்! ;)))))
பக்கம் எண் 61 முழுவதுமே, தங்கள் நாற்காலிக்காக ஒதுக்கிக்கொடுத்துள்ள 5/8/2012 தேதியிட்ட கல்கி இதழுக்கும், புராதன நாற்காலியைப் படைத்த தங்களுக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள்.
பத்திரிகை உலகத்தையே கலக்க ஆரம்பித்துள்ள தங்களின் செயல் மிகவும் பாராட்டத்தக்கதே! வாழ்க!!
அன்புடன்
கோபு
ஒரு சின்ன சந்தேகம். தாங்கள் காட்டியுள்ள நாற்காலி வேறு [சலூன் நாற்காலி போல உள்ளது] கல்கியில் காட்டப்பட்டுள்ள நாற்காலி வேறு.
இது கிழக்கு நோக்கிப் பார்க்கிறது. அது மேற்கு நோக்கிப் பார்க்கிறது.
இதையெல்லாம் யார் உன்னை நோக்கச் சொன்னது என்று தாங்கள் முணுமுணுப்பதும் என் காதில் விழுகிறது.
ஏதும் உள்நோக்கமில்லாமல் நோக்கி விட்டேன். மன்னிக்கவும்.
கவிதை சூப்பர்.
அன்புடன்
கோபு
நாற்காலியில் நாம் அமர்வது போக இங்கே நாற்காலி நம் மனசில் அமர்கிறது அழகாய்.
இங்கிருந்து நாளையோ மறுதினமோ
அது அகற்றப்படும் வரை
இந்த ஏகாந்தத்தை அது அணிந்து மகிழட்டும்.//
நிறையச் சொல்லிப் போகும் வரிகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தன்மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தவர்களை அது அசை போடட்டும்...
வித்தியாசமான சிந்தனை வரிகள்... நன்றி.
எத்தனை நல்லது கெட்டதுகளை அந்த நாற்காலி கண்டிருக்கும் !
உங்களின் நாற்காலி நிசப்தத்தில்- மெல்லிய நினைவுகள் இழையோடும் மௌனத்தில்-வௌவ்வாலாய்த் தொங்கும் மனம் ஊசலாடுவதை ஏனோ தடுக்க முடியவில்லை. அற்புதம்.
//உங்கள் பார்வைக்குத்
தப்பிய கண்ணாடியில்//
இந்த வரிகள் உருவாக்கும் தளம் அபாரம்!
நாற்காலி அருமை...
கல்கியில் படித்தேன் !
படித்ததும் ரசித்தேன் !!
ரசித்ததில் மகிழ்ந்தேன் !!!
அத்தனையும்
தேன் !
தேன் !
தேன் !
அருமை....
நாற்காலி காரணப்பெயர்♥♥♥காலத்திற்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் நன்கு அமரப்பட்ட நாற்காலி என்று இருக்கும் ...அது அந்த வீட்டின் அத்தனை ரகசியத்தையும் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் ...
யாரும் அமரா விடினும் அது வீட்டிற்கு அணிதான் ... நல்ல கவிதை
கருத்துரையிடுக