12.7.12

இன்றைய ஆனந்த விகடனில் “யானைக்கு உவ்வா”

காலொடிந்த குட்டி யானை
வாலறுந்த குரங்கு
இறக்கை முறிந்த கிளி

எல்லோருக்கும்
பூசப்பட்டது ஒரே களிம்பு.

யாரும் சத்தம்
போட வேண்டாம்.
கொஞ்சம் அமைதி.

வலியால் கண் மூடிக்கிடக்கும்
அவற்றின் நெற்றியில் ஓர் முத்தம்.

பரிவோடு மடியில் கிடத்தி
ஆதுரத்தோடு மென் தட்டல்கள்.

’எல்லாம் சரியாப் போச்சு. 
வாங்க விளையாடலாம்’

குட்டிப்பெண்ணின் உத்தரவில்
சிகிச்சை முடியும் முன்பே
பறக்கவும் நடக்கவும் தொடங்கின
முறிந்தும் உடைந்தும்
துடித்தவை.

- நன்றி- ஆனந்த விகடன் - 18 ஜூலை, 2012.

15 கருத்துகள்:

ப.தியாகு சொன்னது…

'வலியால்
கண் மூடிக்கிடக்கும்
அவற்றின்
நெற்றியில்
ஓர் முத்தம்.

பரிவோடு
மடியில் கிடத்தி
ஆதுரத்தோடு
மென் தட்டல்கள்'

வேறெங்கே கிடைக்குமிந்த வாஞ்சையும் கரிசனமும்!

விளையாட்டில் நானொரு எறும்பாயேனும் இருந்துவிட்டுப்போகிறேனே,
சேர்த்துக்கொள்ளக்கூடாதா ப்ரிய சிறுமியே!

ஹேமா சொன்னது…

குழந்தைகளின் உலகமே தனி.
கொண்டுபோய் விட்டு விட்டீர்கள் சுந்தர்ஜி !

ரிஷபன் சொன்னது…

பரிவோடு
மடியில் கிடத்தி
ஆதுரத்தோடு
மென் தட்டல்கள்

பொம்மைகளுக்குக் கிடைப்பது மனிதருக்கும் தேவைப்படுகிறது.

G.M Balasubramaniam சொன்னது…

அவர்கள் உலகத்தில் ப்ரவேசிக்க அனுமதி இல்லை. அவர்களை அவர்கள் அறியாமல் கவனிக்க வேண்டும். நாம் பார்க்கிறோம் என்று தெரிந்தால் அவர்கள் இந்த உலகுக்கு வந்து விடுகிறார்கள். தற்காலத்தில் அவர்கள் விளையாட்டில் வன்முறை தெரிகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. வீட்டு உள் அறையிலேயே உலகைக் கொண்டு வந்து விட்டதால் அவர்களுடைய INNOCENSE காணாமல் போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது சுந்தர்ஜி.

ஹ ர ணி சொன்னது…

அனுபவிக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

fantastic!

அப்பாதுரை சொன்னது…

ப.தியாகு: பிரமாதம்!

மீனாக்ஷி சொன்னது…

பிரமாதம்! யானை படமும், தலைப்பும், கவிதையும் மனதை இன்னும் குழந்தையாக்கி விட்டது.
//’எல்லாம் சரியாப்
போச்சு.
வாங்க
விளையாடலாம்’//
இதோ! நானும் விளையாட கிளம்பிட்டேன். :)

Vel Kannan சொன்னது…

மீண்டு(ம்) வருமா இந்த நாட்கள் ...
(பெருமூச்சும் ஏங்கவும் வைத்த இந்த சுந்தர் ஜி ... என்ன செய்யலாம்?)

இயற்கைசிவம் சொன்னது…

குழந்தமையின் உலகில் உயிரற்ற எதுவும் உயிர் பெறுதல், இயல்பு தவறியவை மீளுதல், மனிதன் அவனாதல் ... எல்லாம் சகஜமப்பா... நல்ல பதிவு சார்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//
வலியால்
கண் மூடிக்கிடக்கும்
அவற்றின்
நெற்றியில்
ஓர் முத்தம்.

பரிவோடு
மடியில் கிடத்தி
ஆதுரத்தோடு
மென் தட்டல்கள்.//

குட்டிப்பாப்பாவின் பரிவு வெகு அருமை. பாராட்டுக்கள் ஜி.
வாழ்த்துகள். அன்புடன் vgk

விமலன் சொன்னது…

குட்டிக்குழந்தைகளின் விளையாட்டில் எதுவும் நிஜமாகிப்போகிறது.

தாய் சுரேஷ் சொன்னது…

போன வாரம் ,இந்த வாரம் சுந்தர்ஜியின் கவிதைகளை வாசித்து மிகவும்
பாதிக்கப்பட்டேன் அவ்வளவு அருமையான கவிதைகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குழந்தைகளின் உலகமே தனி.... அங்கேயே இருந்துவிடலாம் என பலமுறை தோன்றியதுண்டு!

ஆ.வி.-ல் வெளியானதற்கு வாழ்த்துகள்.

சிவகுமாரன் சொன்னது…

.அந்த உலகத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள் சுந்தர்ஜி.
அபாரம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...