30.5.13

பவானி அஷ்டகம் - ஆதி சங்கரர்

இந்த உலகுக்கே ஆன்ம குருவாய்த் திகழ்ந்த ஆதிசங்கரர் இயற்றிய இன்னொரு பொக்கிஷம் இது.

பொதுவாகவே சங்கரரின் அத்வைத வேதாந்தங்களைப் புரிந்து கொள்ளப் பெரிய பயிற்சி தேவையில்லாத அளவுக்கு, மிகவும் கனமான விஷயங்களை எளிமையான மொழியில் நமக்குத் தந்திருக்கிறார். 

அந்த உண்மைகளையும் அறிந்து கொள்வது கஷ்டம் என உணரும் என் போன்றோருக்காகவும், இது போன்ற தோத்திரப் பாடல்கள் மூலமாக மனம் கரையும் படி அந்த இறைவனிடம் உருகிய அந்த மனம் வடித்த கருணையின் உருவங்கள் இவை.

சத்தியத்தின் உருவமான, கடவுளின் வடிவமான சங்கரரின் ப்ரார்த்தனை இத்தகையதாக இருக்குமானால், உடலாலும், மனத்தாலும் அகங்காரமும் செருக்கும் பொறாமையும் பேராசையும் காமமும் ஒருங்கே அமையப் பெற்ற என் போன்றவர்களின் ப்ரார்த்தனையின் மொழி என்னவாக இருக்கும்?

தான் இன்னதென்று வகைப்படுத்த வழியற்ற இந்தக் கடையனின் ப்ரார்த்தனையைப், பெருகும் கண்ணீரின் மூலம்தான் பவானியின் பாதங்களில் அர்ச்சிக்கமுடியும்.

இனி, பவானியின் பாதங்களில் அர்ச்சிக்கப்படும் மலர்களாக இந்தச் சரணாகதியின் மேன்மையான கீதம். மேலே இணைத்திருக்கும் யூட்யூப் இணையத்தின் பாடலுடன் இந்தப் பதிவைக் கடக்கும்போது, மனதின் தடதடப்பைத் தவிர்ப்பது கடினமாகவே இருக்குமென நினைக்கிறேன்.

இந்த உருவாக்கத்தில் இருக்கும் பிழைகளைச சான்றோர் பொறுத்து திருத்தக் கோருகிறேன்.

பவானி அஷ்டகம்
1. 
ந தாதோ, ந மாதா, ந பந்துர் ந தாதா,
ந புத்ரோ, ந புத்ரீ, ந ப்ரத்யோ, ந பர்த்தா,
ஜாயா ந வித்யா, ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

தாய்தந்தை இல்லை; சுற்றம் நட்பில்லை;
பெண்பிள்ளை, பதியில்லை; மனையாளும் இல்லை;
அறிவு, தொழில் இல்லை; எதுவும் புகல் இல்லை;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

2
பவாப்தா வபாரே மஹாதுக்க பீரு
ப்ர-பாத ப்ர-காமி ப்ர-லோபி ப்ர-மத்த
கு-சம்சார பாஷ ப்ர-பத்தா ஸதாகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

கடலில் ஓர் துரும்பெனவே துயர் சூழ்ந்த கோழை;
காமமும் பாவமும் போதையும் பாதை;
ஆசை, பொறாமையால் கட்டுண்ட பேதை
காப்பாய் பவானீ!என்றென்றும் புகல் நீ.
3
ந ஜானாமி தானம்; ந ச த்யான யோகம்;
ந ஜானாமி தந்ரம்; ந ச ஸ்தோத்ர மந்ரம்;
ந ஜானாமி பூஜாம்; ந ச ந்யாஸ யோகம்;
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

ஈகைவழி அறியேன்; தியானமும் அறியேன்;
தந்திரம் தோத்திரம் மந்திரமும் அறியேன்;   
தொழுவதும் அறியேன்; யோகமும் அறியேன்.
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

4
ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கடாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாதர்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

புண்ணியம் பாவங்கள் தீர்த்தங்கள் அறியேன்;
முக்தித் தலங்கள், உளம் ஒன்றல் அறியேன்;
பக்தி மார்க்கங்கள் விரதங்கள் அறியேன்;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

5
கு கர்மீ, கு சங்கீ, கு புத்தி: கு தாஸ:
குலாசார ஹீன: கதாசார லீன:
கு த்ருஷ்டி:கு வாக்ய ப்ரபந்த: சதாகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

தீது என் செயல், சேர்க்கை எண்ணங்கள் யாவும்
தீது என் குலப்பாதை;  நடத்தையும் தீதே;
தீது என் நோக்கு, வாக்கு, எழுத்தெல்லாம் ;
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

6
ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிஷீதேஷ்வரம் வா கடாசித்
ந ஜானாமி சான்யத் ஸதாகம் ஷரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

ஆக்குவோன் காப்போன் அழிப்போனை அறியேன்;
ஞாயிறும் திங்களும் வேறாரும் அறியேன்;
உன் பதங்களன்றியே அரண் வேறு அறியேன்.
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

 7
விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே சா னலே பர்வதே ஷத்ரு மத்யே
அரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹீ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

சர்ச்சை, துயர், மதி மயக்கம், கண்டங்கள் நடுவே
நெடும் பயணம், நீர், நெருப்பு, காடு, மலை எதிலும்,
சூழும் பகை தாழும் வகை ஒருபோதுமின்றிக்
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.
 8
அனாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹாக்ஷீண தீன: ஸதா ஜாட்ய வக்த்ரா
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரனஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வம் ஏகா பவானீ.

நாதியற்ற ஏழை; மூப்புற்ற ரோகி;
வலுவற்றுச் சோர்ந்தேன்; இழிநிலை சேர்ந்தேன்;
வினையுற்று வழியற்ற பெரும்பாவி என்னைக்   
காப்பாய் பவானீ! என்றென்றும் புகல் நீ.

4 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இன்னதென்று வகைப்படுத்த வழியற்ற இந்தக் கடையனின் நிலையைப் பெருகும் கண்ணீரின் மூலம்தான் பவானியிடம் அடைக்கலம் கோரமுடியும்.

இனி, பவானியின் பாதங்களில் அர்ச்சிக்கப்படும் மலர்களாக இந்தச் சரணாகதியின் மேன்மையான கீதம்.

நிறைவான உன்னதமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்...!

G.M Balasubramaniam சொன்னது…


manam urukum piraarththanai. Antha Bhavani mattum arulamaattaalaa.? manam kavarum mozhi

maatram. PaaraattukkaL SUNDARJI.

அப்பாதுரை சொன்னது…

சமஸ்க்ருதத்தின் துள்ளல் தமிழிலும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். (7வதை கொஞ்சம் எடிட் பண்ணலாமோ?)

கவிநயா சொன்னது…

காப்பாயே தாயே! ஒரே புகல் நீயே!

ஆமாம்.

பவானி அஷ்டகத்தை அழகு தமிழில் தந்தமைக்கு நன்றிகள் பல.

உங்கள் தளம் வலைச்சரத்தில்....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...