381.
நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந்
அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர:
-ஸ்ரீ உத்தவ கீதை - 10:9
அக்னி கட்டையோடு சம்பந்தப் பட்டு அதன் வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. கட்டை எரிந்த பின் நெருப்பு அணைந்து விடுகிறது. நெருப்பில் குஞ்சு, மூப்பென்ற வேற்றுமை கட்டையினாலேயே அன்றி நெருப்பினால் அல்ல. அதுபோல் உடலில் உறையும் ஆன்மாவும், உடலின் குணங்களை ஏற்றுக்கொண்டதாகிறது.
382.
ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தேஷு வைராக்யம் விஷயேஷ்வனு
யதைவ காகவிஷ்டாயாம் வைராக்யம் தத்தி நிர்மலம்
ஆதி சங்கரர் -அபரோக்ஷண அனுபூதி
பிரம்மா முதல் உலகத்தின் அசையாத பொருட்கள் வரை எல்லா விஷயங்களிலும் பற்றின்மை வைராக்யமாகும். காக்கையின் எச்சத்தின் மேல் இருக்கும் வெறுப்பு எல்லா விஷயங்களின் மேலும் இருப்பதே தூய வைராக்யம்.
383.
நோத்பததே வினா ஞானம் விசாரேணான்யஸாதனை:
யதா பதார்த்த பானம் ஹி ப்ரகாசேன வினா க்வசித்
அபரோக்ஷண அனுபூதி றை
ஒளியின்றி எப்படிப் பொருட்கள் பார்வைக்குப் புலப்படாதோ, அது போல ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடையமுடியாது.
384.
ஆத்மா நியாமத் ச்சாந்தர்தேஹோ நியம்ய பாஹ்யக:
தயோரைக்யம் ப்ரபச்யந்தி கிமஞானமத: பரம்
அபரோக்ஷண அனுபூதி
ஆத்மா ஏவுவது; உள்ளே இருப்பது. உடலோ ஏவப்படும் பொருள்; வெளியில் இருப்பது. இருந்தும் இவ்விரண்டையும் ஒன்றாகப் பார்ப்பதை விடப் பெரிய அஞ்ஞானம் வேறென்ன இருக்க முடியும்
385.
ஸுவர்ணாஜ்ஜாயமானஸ்ய ஸுவர்ணத்வம் ச சாச்வதம்
ப்ரஹ்மணோ ஜாயமானஸ்ய ப்ரஹ்மத்வம் ச ததா பவேத்
அபரோக்ஷண அனுபூதி
பொன்னால் உருவானது எப்படி எப்பொழுதும் பொன்னாகவே இருக்குமோ, அப்படியே ப்ரம்மத்தினிடமிருந்து உருவானது எப்பொழுதும் ப்ரஹ்மமாகவே இருக்கும்.
386.
யத்ராஞானாத்பவேத்த்வைதமிதரஸ்தத்ர பச்யதி
ஆத்மத்வேன யதா ஸர்வம் நேதரஸ்தத்ர சாண்வபி
அபரோக்ஷண அனுபூதி
எப்போது அறியாமையால் இருமை ஏற்படுமோ, அப்போது ஒன்றை மற்றது பார்க்கும்; எப்போது எல்லாமும் தன்மயமாகவே தோன்றுகிறதோ, அப்போது பிறிதொன்று இருக்காது.
387.
ஸ்வப்னோ ஜாகரணே'லீக: ஸ்வப்னே'பி ந ஹி ஜாகர:
த்வயமேவ லயே நாஸ்தி லயோ'பி ஹ்யுபயோர்ன ச
அபரோக்ஷண அனுபூதி
விழிப்பு நிலையில் கனவு பொய்; கனவில் விழிப்பு நிலை பொய்; ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டுமே இல்லை; மற்ற இரு நிலைகளில் ஆழ்ந்த உறக்கமும் இல்லை.
388.
த்ரஷ்ட்ருதர்சனத்ருச்யானாம் விராமோ யத்ர வா பவேத்
த்ருஷ்டிஸ்தத்ரைவ கர்த்தவ்யா ந நாஸாக்ராவலோகனீ
அபரோக்ஷண அனுபூதி
பார்வை என்பது, பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படுவது என்ற இம்மூன்றும் இல்லாத நிலையை நோக்க வேண்டுமே அன்றி, மூக்கின் நுனியை அல்ல.
389.
ப்ரயாஸ வதாத் ஸஸ்யவத: முஷ்டிவதாத் பாபீயாந்
நிராஜீவத்வாத் வ்ருஷ்டிரதிவ்ருஷ்டிஷ்த இதி
-அர்த்தசாஸ்த்ரம்
உண்டாக்கப்பட்ட பயிரை நாசமாக்குவது, விதைகள் தூவாமல் போவதை விடக் கொடியது. அதிக மழையை விட, மழையே இல்லாமல் போவது கொடியது; அதனால் ஜீவனமே இல்லாமல் போய்விடும்.
390.
அபிஷக்யா கதிர்ஞாதும் பததாம் கே பதத்ரிணாம்
நது ப்ரச்சந்த பாவாநாம் யுக்தாநாம் சரதாம் கதி:

வானில் பறக்கும் பறவைகளின் வழியையாவது அறியலாம். ஆனால், வெளியில் எதுவும் தெரியாமல் வேலை செய்யும் அதிகாரிகள், எந்த வழியில் பணத்தை அபகரிக்கிறார்கள் என்பதை அறிய இயலாது.
391.
ஸதா திஷ்டதி கம்பீரோ ஞானி கேவலமாத்மனி
நாஸத்யம் சிந்தயேத்விச்வம் ந வா ஸ்வஸ்ய ததன்யதாம்
-ஸ்ரீ ரமண கீதா
ஞானி எக்காலத்திலும் ஆத்மாவிலேயே ஆழ்ந்து நிலைத்திருப்பான்; உலகைப் பொய்யெனக் கருத மாட்டான்; தன்னிலிருந்து வேறாகவும் கருத மாட்டான்.
392.
புவனம் மனஸோ நான்யதன்யன்ன ஹ்ருதயான்மன:
அசேஷா ஹ்ருதயே தஸ்மாத்கதா பரிஸமாப்யதே

மனத்தினும் உலகு வேறானதன்று. இதயத்தினும் மனம் வேறானதன்று. ஆதலால் கதையனைத்தும் இதயத்திலேயே முற்றுப்பெறும்.
393.
ந ஸம்ஸித்திர்விஜிக்ஞாஸோ: கேவலம் சாஸ்த்ரசர்ச்சயா
உபாஸனம் வினா ஸித்திர்னைவ ஸ்யாதிதி நிர்ணய:
-ஸ்ரீ ரமண கீதா
ஞானத்தை நாடுபவனுக்கு நூல்களை ஆராய்ச்சி செய்வதனால், காரியம் நிறைவேறி விடாது. வழிபாடின்றி ஞானம் கைகூடாது என்பது திண்ணம்.
394.
ஸர்வக்லேசநிவ்ருத்தி: ஸ்யாத்பலமாத்மவிசாரத:
பலானாமவதி: ஸோயமஸ்தி நேதோ'திகம் பலம்
-ஸ்ரீ ரமண கீதா
துன்பம் அனைத்தும் ஒழிதலே ஆன்ம விசாரத்தின் பயன்; அனைத்துப் பலன்களின் எல்லையும் இதுவே; இதனை விடவும் சிறந்தது எதுவுமில்லை.
395.
சாலவனு கொம்பாக ஹாலோகருண்டந்தே
சாலிகரு பண்டு எலெவாக
கிப்பதிய கீலு முரிதந்தே சர்வஞ்யா
-சர்வஞ்யா
கடன் பெறும்போது அமிர்தமாய் ருசிக்கிறது. கடனளித்தவர் கொடுத்த கடனை திருப்பும்படிக் கேட்கையில், முதுகெலும்பு நொறுங்குவது போல் வலிக்கிறது.
396.
மூர்கநிகே புத்தியனு நூர்க்கால பேளிதறு
கோர்க்கல்ல மேல் மள கரெதரே
ஆ கல்லு நீரு குடிவுதே சர்வஞ்யா
-சர்வஞ்யா
கல்லில் பெரு மழை பெய்வதற்கு ஒப்பானது ஒரு முட்டாளுக்கு நூறு வருடங்கள் அறிவுரை சொல்வது, ஒருபோதும் கல் நீரைப் பருகாது.
397.
சித்தாவு இல்லதே குடிய சுத்திதொடே பலவேனு
எத்து கானவனு ஹொத்து தா
நித்யதல்லி சுத்திபந்தந்தே சர்வஞ்யா
-சர்வஞ்யா
மனம் வேறெங்கோ அலைபாய, கோயிலைச் சுற்றி வருவதில் என்ன பயன்? ஒரு காளை தினந்தோறும் செக்கைச் சுற்றி வருவது போலத்தான் அது.
398.
ஆடதெலெ கொடுவவனு ரூடியோலகுத்தமனு
ஆடி கொடுவவனு மத்யமனு
அதம தானாடி கொடதவனு சர்வஞ்யா
-சர்வஞ்யா
வெளியே தெரியாமல் கொடுப்பவன் உயர்ந்தவன்; தான் கொடுப்பதை வெளியே சொல்லி, கொடுப்பவன் நடுத்தரமானவன். வெறும் வாய்ச்சொல்லோடு நிறுத்தி, எதுவும் கொடுக்காதவன் கீழானவன்.
399.
ஏகம் ஹந்யாந்ந வா ஹன்யாதிஷு: க்ஷிப்தோ தனுஷ்மதா
பராக்ஞேந து மதி: க்ஷிப்தா ஹன்யாத்கர்பகதாநபி
-அர்த்த சாஸ்த்ரம்
வில்லாளி எய்த அம்பு, ஒருவனைக் கொல்லலாம்; கொல்லாது போகலாம். ஆனால் புத்திமானின் அறிவெனும் ஆயுதம், கருவில் இருக்கும் உயிரையும் கூட கொன்றுவிடும்.
400.
த்ருஷ்ட காரிதம் மானுஷம் தஸ்மிந்யோகக்ஷேம
நிஷ்பத்திர் நய: விபத்திர நய: தச்சிந்த்யம் அசிந்த்யம் தைவமிதி
நிஷ்பத்திர் நய: விபத்திர நய: தச்சிந்த்யம் அசிந்த்யம் தைவமிதி
-அர்த்த சாஸ்த்ரம்
தெய்வச் செயலால் நடப்பதும், மனித முயற்சியால் நடப்பதுமே உலகத்தை நடத்துகின்றன. மனிதச் செயலைப் பற்றி முன்கூட்டி யோசிக்கலாம்; தெய்வச் செயலுக்கு அது சாத்தியமில்லை.
தெய்வச் செயலால் நடப்பதும், மனித முயற்சியால் நடப்பதுமே உலகத்தை நடத்துகின்றன. மனிதச் செயலைப் பற்றி முன்கூட்டி யோசிக்கலாம்; தெய்வச் செயலுக்கு அது சாத்தியமில்லை.
2 கருத்துகள்:
தெய்வச்செயல் என்பதைத் தான் fait accompli என்று சொல்கிறார்களோ ?
பிறவி மூலம் தகப்பன் தாய் மூலமாக பெறப்படும் வியாதிகள், ரத்த அழுத்தம், ருமாடிசம் , ஜெனடிக் .
அடுத்தது, நம்முடைய சுற்றுப்புற சூழ்நிலையால் பெறப்படும் வியாதிகள்.
நமது பழக்கத்தால் நாமே நமக்கு ஏர்படுத்துக்கொள்ளும் உபாதைகள்.
இவை அத்தனையும் தவிர்த்து ஏற்படுவதுவே தெய்வச்செயல்.
சுனாமி, தீ விபத்து, புயல் சேதம் , ஏர் கிராஷ் இவை தான் என்று இல்லை.
சென்ற வாரம் எனது மகனின் நண்பர் ஒருவர் காரை ஒட்டிக்கொண்டு சென்று இருக்கிறார். பாதையில் யாருமே இல்லை. அது பாலைவன பிரதேசம். கத்தார் தேசம்.
திடீர் என கார் நிலை கொள்ளாது கவிழ்ந்துவிட்டது.
அதில் பயணம் செய்த அவரது பதினைந்து வயது பையன் காருக்குள்ளே உருண்டு அடிபட்டு, ஆஸ்பத்திரியில் இறந்து போனான்.
யாரை குற்றம் சொல்வது ?
தெய்வச்செயல்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
அற்புதமான விளக்கம் சுப்பு தாத்தா.
தோற்றம்,மறைதலுக்கான காரணம் என்றும் அறிவின் பிடிக்குச் சிக்காது.
கருத்துரையிடுக