நொடிக்கொரு தரம்
உதிர இருக்கும் சிகையை
நொடிக்கொரு தரம் கோதாதீர்கள்.
கொண்டாட்டங்களின்
இரைச்சலுக்குப் பின்னால்
யாரின் பார்வைக்கும் எட்டாத
வறியவனின் கண்ணீரைக் காணாத
கண்களின் கீழே தொங்கத்
தொடங்கியிருக்கும்
பைகள் குறித்தும்-
மேலே சரியாய்த் தீட்டப்படாத
புருவங்கள் குறித்தும் வருந்தாதீர்கள்.
அனாதரவாய்க் கதறும்
அபலைக் குரல்களைக்
கேட்டும் கேளாது செல்லும்
மெழுகடைத்த காதுகளின்
செவிட்டுத் துளைகளைத்
தயவு செய்து சுத்தம் செய்யாதீர்கள்.
பிறருக்காய் வருந்தவும்
புன்னகைக்கவும் பழகாத
முகத்தின் சலனமற்ற தோலில்
சிகப்பழகுப் பசை
ஊடுருவி இருக்கிறதா
என்று பார்க்காதீர்கள்.
கூசாமல் பொய் சொல்லி,
போலியாய்ச் சிரிக்கும்
நாற்றமெடுக்கும் வாயின்
உதட்டுச் சாயம் பளபளக்கிறதா
என்று சோதிக்காதீர்கள்.
தீராத தாகத்துடன்
புகழ் ருசிக்கும் மனதையும்,
முகத்தின் மேல்
இன்னொரு முகமாய்
அணிந்திருக்கும் வேடத்தையும்
நீங்கள் பார்த்து ரசிக்கக்
கண்ணாடி எதுவுமில்லை
என்பதில் எனக்கும்
வருத்தந்தான்.
இறுதியாய் ஒரு ரகசியம்.
ஒரு கண்ணாடியை
எடுத்துக் கொள்ளுங்கள்.
நாளை எரிந்தடங்க இருக்கும்
சாம்பலின் சுவடுகளை
ஒருவேளை பார்க்க யத்தனித்தால்
அதில் முகம் பார்க்காதீர்கள்.
அப்போது நீங்கள்
மிக அழகாய்த் தெரிவீர்கள்.
10 கருத்துகள்:
அருமை... உணர வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்...
எத்தனை ஆதங்கம் இருந்தால் இப்படி ஒரு கவிதை வரும். மிகவும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன் சுந்தர்ஜி
யஸ்ய நைஸர்கிகி ஷோபா தன்ன சம்ஸ்காரம் அர்ஹதி.
கஹ கலாம் ஷஷினோர் மாஷ்டி கௌச்துபஹ கேன ரஜ்யதே
என்று ஒரு சுபாஷிதானி இருக்கிறது.
நீங்கள் தொட்ட உதட்டுச்சாயம் அந்த வரிகளை நினைவு படுத்துகிறது.
படுத்தவும் செய்கிறது.நெஞ்சை
இறுக்கவும் செய்கிறது
ஆம். உங்கள் கவிதை.
சுப்பு தாத்தா.
ஒரு சேஞ்ச்சுக்கு இதை படியுங்கள். கேளுங்கள்.
அசல் உணர்வுகளுக்கு.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
அர்த்தம் பொதிந்த, அனைவரும் உணர வேண்டிய வரிகள்.
உணர வேண்டிய வரிகள் ஐயா
அருமையான கவிதை.. மிக்க நன்றி..
நாளை எரிந்தடங்க இருக்கும்
சாம்பலின் சுவடுகளை
ஒருவேளை பார்க்க யத்தனித்தால்
அதில் முகம் பார்க்காதீர்கள்.
------------
உணர வேண்டிய அருமையான வரிகள் அடங்கிய அழகிய கவிதை...
வாழ்த்துக்கள்...
தீராத தாகத்துடன்
புகழ் ருசிக்கும் மனதையும்,
முகத்தின் மேல்
இன்னொரு முகமாய்
அணிந்திருக்கும் வேடத்தையும்
நீங்கள் பார்த்து ரசிக்கக்
கண்ணாடி எதுவுமில்லை // பச்சென ஒட்டிக்கொண்டன வரிகள். நிறைய எழுதுகிறீர்கள் சுந்தர் ஜி சார், ஆனால் கவிதைகள் குறைத்துக்கொண்டீர்கள் என்பது வருத்தமளிக்கிறது. ப்ளீஸ்.. கவிதைகளும் அதிக தாருங்கள் மகிழ்வேன்.
நொந்து போயிருப்பவனை நையப்புடைக்கும் வரிகளா. இல்லை நயப்படுத்தும் வரிகளா?
ஜிஎம்பி சொல்லியிருப்பது போல் இந்த வரிகள் வெளிப்படுத்தும் வலியை விட உள்வாங்கியிருக்கும் வலி எத்தகையது என்று சுலபமாகக் கணிக்க முடியவில்லை.
மிகவும் ரசித்துப் படித்தேன் ஜி.
அன்புள்ள சுந்தர்ஜி..
அமர்க்களம். அஅமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அஅமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அஅமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அஅமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம்.
அமர்க்களம். அமர்க்களம்.
கருத்துரையிடுக