18.3.11

கவிதைகள் மீது சில குறிப்புகள்



#
எழுதிய ஒரு கவிதையை
அழிக்க முடிவதில்லை.
ஒரு கற்சுவரில்
கீறப்பட்ட கோடோ
மரத்தில் செதுக்கப்பட்ட
பெயரோ போல
அழியாது உறைந்திருக்கிறது.

#
எழுதிய ஒரு கவிதையைக்
கிழிக்கவும் முடிவதில்லை.
பிடிக்காத துணியையோ
படிக்காத கடிதத்தையோ போல
எளிதில்லை கிழிப்பது.

#
இலைகள் உதிர்வது
துளிகள் வீழ்வது
சிறகுகள் மிதப்பது
போல எளிதில்லை
கவிதைகள் பிறப்பதும்
பிறந்தவை நிலைப்பதும்.

#
காற்றில் அலைவது
நெருப்பில் தொலைவது
நீரில் கரைவது
போல் மறைகின்றன
வார்த்தைகளின்
அமிலம் குடித்தும்
உருவாகாத கவிதைகள்.

15 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

//எளிதில்லை
கவிதைகள் பிறப்பதும்
பிறந்தபின் நிலைப்பதும்.//
superb lines !!!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//இலைகள் உதிர்வது
துளிகள் வீழ்வது
சிறகுகள் மிதப்பது
போல எளிதில்லை
கவிதைகள் பிறப்பதும்
பிறந்தபின் நிலைப்பதும்.//

சூப்பர் வரிகள், சார்.

பாராட்டுக்கள்.

ரிஷபன் சொன்னது…

அரங்கேற்றப்பட்ட கவிதையை விட பாதிப் பாதி உருவாகி திருப்தி தராமல் போன குறைக் கவிதைகளின் சில வார்த்தைகளில் அபரிமிதமான ஜீவன் இருக்கும்.. சரியா சுந்தர்ஜி..

ஹேமா சொன்னது…

ஒரு கவிதையின் பிரசவம் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சுந்தர்ஜி உங்கள் பாணியில்.மனதில் உள்ல அழுத்தத்தைதானே வார்த்தைக் கோர்வைகளாக்குகிறோம்.அங்கே அழிவதும் உதிர்வதும் ஏது.இதைவிட பிரசவிக்காத கவிதைகள் அதை எழுத்தில் கொட்டும்வரை எம்மோடு இரவும் பகலும் பயணித்துக்கொண்டேயிருக்குமே !

RVS சொன்னது…

//காற்றில் அலைவது
நெருப்பில் தொலைவது
நீரில் கரைவது
போல் மடிகின்றன
வார்த்தைகளின்
அமிலம் குடித்த
உருவாகாத கவிதைகள். //
வாவ்.. ரசித்தேன் ஜி. வார்த்தை ஜாலம் செய்கிறீர்! வாழ்த்துக்கள்.

Ramani சொன்னது…

மிக அருமை
கவிதைகள் பிறப்பதும் எளிதில்லை
அதனால்தான் கவிஞர்கள் எப்போதும்
ஒரு சராசரியாக இருக்க முடிவதில்லை
கவிதைகள் நிலைப்பதும் எளிதில்லை
அதனால்தான் கவிஞர்கள் எப்போதும்
அத்துமீறலை ஏற்கத் தயங்குவதில்லை
மிகச் சிறந்த பதிவு
தங்களை தொடர்வதில் பெருமிதம் கொள்ளுகிறேன்

G.M Balasubramaniam சொன்னது…

கவிதைகள் மனசுக்குப் பிடித்துப்படைக்கப் பட்டிருந்தால் அழிப்பதும் கிழிப்பதும் எளிதல்ல, தேவையுமில்லை. மனசுக்குப் பிடித்ததை கவிதை வடிவில் கொண்டு வருவதும் எளிதல்ல. பிடிக்காத விஷயங்களை கவிதை வடிவில் கொண்டு வந்தாலும்,வார்த்தைகளில் அமிலம் குடித்திருந்தால்மடிவது இயல்புதானே.
எல்லாம் எழுதுபவனின் அவஸ்தை. அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் சுந்தர்ஜி.

க ரா சொன்னது…

அருமை ஜீ :)

மிருணா சொன்னது…

சில முரண்களோடும், ஆமோதிப்புகளோடும் கவிதையை வாசித்துக் கொண்டேன். நல்ல எழுத்து. காற்றில் அலைவது //நெருப்பில் தொலைவது நீரில் கரைவது// போல அல்ல எனப் பிடிவாதம் பிடிக்கிறது மனது. தவிர காற்றில் அலையும் வரிகள் என்ற படிமம் ஏதோ செய்கிறது மனதை. அநேகமாய் ஒரு கவிதை எழுதுவேன் உங்கள் வரியைக் கொண்டு. நன்றி சுந்தர்ஜி.

ஹ ர ணி சொன்னது…

பாந்தம். நிறைவு.

rajasundararajan சொன்னது…

அதாவது, பொறிக்கப்பட்டதே போல் அழிக்க முடியாதனவாயும், பயன்மாற்று அல்லது உட்கிடை உள்ளனவே போல் சிதைக்க முடியாதனவாகவும் இருக்கின்றன.

இயற்கை நிகழ்வுகள் போல் எளிதானதல்ல அவற்றின் பிறப்பும் நிலைப்பும். ஆனால், இயற்கை விதிகளுக்கு உட்பட்டனவே போல் மடிபவை வடிவுபெறாதவை.

இக் கவிதை, 'பிறந்ததெல்லாம் இறந்துபடும்' என்னும் சமயக் கூற்றுக்கு மாறாக, 'பிறக்காதன மட்டுமே இறந்துபடும்; பிறந்துவிட்டால் அழிவில்லை' என்கிறது.

1330 வள்ளுவக் குறள்கள் சான்று. மனிதர்களாய் வாழ்ந்து பயனில்லை, கவிஞர்களாய் மாறுவீர்களாக!

rajasundararajan சொன்னது…

[வாக்குப் பதிவுக்கு எதிரான உங்கள் பதிவுகளால் சற்று மிரண்டு ஒதுங்கி இருந்தேன், பதின்பருவத்தில் தோழர் கோதண்டராமன் (நக்ஸல்பாரிப் பிரிவொன்றின் தலைவர்) அறிமுகம் உடையேன் ஆயினும். தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ படம் கண்டு புரிந்துகொண்டேன். க்யூபாவில் போல, அல்ல அல்ல, எகிப்தில் போல கூட இங்கே மக்கள் திரண்டு கூட வாய்ப்பில்லை. 'சாதிகள் பற்றிய குறிப்பு' என்றொரு கவிதை எழுதுங்களேன்.]

கமலேஷ் சொன்னது…

அண்ணே
உங்க பழைய தளம் திறக்க மாட்டேங்குதே ஏன்...
ஏதாவது பண்ணிடீங்களா..

காமராஜ் சொன்னது…

கவிதையோடு படமும் தூக்கல்

fayaz சொன்னது…

nice sir

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...