17.3.11

வெட்டி முறிப்பு


இடது புறம் சாலையில் சற்றே விலகிச் செல்லும் அந்தக் கோட்டிற்குள் 
வெட்டி முறித்துக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் வந்துவிடுவேன்.
அதுவரை எல்லோரும்
அமைதி காக்கவும் அல்லது
மகிழ்ச்சியாய் இருக்கவும். 

9 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அருமை...

சின்ன கவிதையில்
பெரிய பொருள்..

Nagasubramanian சொன்னது…

superb

RVS சொன்னது…

உங்களது வெட்டி முறிப்பு எங்களுக்கு இதயம் நொறுங்குகிறது.. சீக்கிரம் வாருங்கள் ஜி! ;-)))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வெட்டி முறிந்து கிடக்கும் அந்த மரத்தினால் சாலை சற்று விலகிச்சென்றுள்ளதா;

அல்லது நேர் வழியாகச் செல்லவேண்டிய சாலை, பாதை விலகிய கோபத்தில், அந்த மரம் தன்னைத்தானே வெட்டிச் சாய்த்துக்கொண்டதா;

அல்லது இவை இரண்டுமே இல்லாமல் நீங்கள் அங்கு வெட்டி முறிக்கச் சென்றதாகச் சொலவதினால், இதுபோலவெல்லாம் விபரீதங்கள் நடக்கிறதோ என்றும் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

மொத்தத்தில் நீங்கள் சும்மாவே இருக்க மாட்டீர்கள், ஐயா.

இதுபோன்று வெட்டிமுறிக்கும் வேலையில்லாத, வேளையிலாவது என் வலைப்பூப்பக்கம் வந்தாலாவது, உங்களுக்கு ஒருவித எழுச்சி ஏற்படக்கூடும்.

உங்களுக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான். அன்புடன் vgk

vasan சொன்னது…

பார்த்த த(ப‌)ட‌ம் எனினும்,பார்க்காத‌ கோணம்.
நாங்க‌ள் வெட்டியாய் முழித்துக் கொண்டிருக்கிறோம்,
சுந்த‌ர்ஜி எதை வெட்டி முறிக்கிறார்?
என அமைதிக்கும், ம‌கிழ்ச்சிக்கும் இடையே அலைந்த‌ப‌டி.

ரிஷபன் சொன்னது…

வெட்டிப் பேச்சு அல்ல!

ஹேமா சொன்னது…

சும்மா சொல்லாதீங்க சுந்தர்ஜி.நீங்கதான் பெரிசா வீட்ல வெட்டி முறிக்கிறீங்க !

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

இது கவிதையென புரிந்து கொள்பவர்களுக்கு... கவிதையாகவும் இருக்கிறது.

செய்தியென்று சொல்பவர்களுக்கு செய்தியாகவும்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் படம் அருமை... ‘சே’ படம் பார்த்திருக்கிறீர்களா?

அன்புடன்
ராகவன்

G.M Balasubramaniam சொன்னது…

வெட்டி முறித்தாயிற்றா.? ம்ம்ம்.... சீக்கிரம்.!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...