3.5.11

ஒரு மரணத்துக்குப் பிந்தைய காலை




















அவன் இறுதியாய்
என்ன பேசினான்
என்றறியவும்-

அதற்கு முந்தைய நாள்
நடவடிக்கைகளில்
மாறுதல் ஏதும்
தெரிந்ததா என அறியவும்-

உணவருந்தியபோது
குறிப்பாய் எதையும் தவிர்த்தானா
என்றறியவும்
ஆர்வமாய் இருந்தார்கள்.

அவனின் இறுதி
மூச்சு பிரிவதைப்
பார்த்ததாகச் சொன்ன அவள்
கண்களில் ஒருவித
சாந்தம் தெரிந்ததாகவும்
சொன்னாள்.

இன்னும் சிலர்
அவன்
உறங்கிக்கொண்டிருப்பது
போல்தான் தெரிவதாகவும்

யாருக்கும் தொந்தரவு
தராமல் போய்விட்டதையும்
கவனமாகச் சொன்னார்கள்.

அவன் இறுதிநாள்
அணிந்த உடையின்
நிறம் குறித்தும்

காலணி அணியாதபடிக்குத்
தெருவில் காலையில்
சென்றது குறித்தும்

பேசியபடியே இருந்தார்கள்.

வினோதமாய்
ஒற்றைக் காக்கையின்
கரைதலும்-

எதிர் வீட்டு நாயின்
ஊளையும்-

இன்னும் சிலரின்
வார்த்தைகளில்.

எப்போதோ அவன்
இறந்து போயிருக்க
இப்போது மரணம்
வாழ்ந்துகொண்டிருந்தது.

10 கருத்துகள்:

Ramani சொன்னது…

போனவன் போக
அவன் நினைவுகள்
வாழ்ந்திருத்தலைப் போல
அவன் போய்ச் சேர
மரணம் வாழ்ந்து கொண்டிருப்பது
நல்ல முரண்
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

அரசன் சொன்னது…

மீண்டும் மீண்டும் படித்தேன் ..
வரிகள் அனைத்தும் அற்புதம் ...

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மனதை ஊடுருவி உயிர்ப்பிக்கும் வரிகள்
மரணம் யாவரும் சந்தித்தே ஆகவேண்டிய நிகழ்வு
இறந்தகாலம், இருந்த காலத்தைவிட
நிகழ்காலத்திலேயே அதிகமாய்
நினைவில் நிறுத்தபடுகிறது ......
புனலாய் புரட்டியெடுத்த கவிதை
நன்றி சுந்தர்ஜி ........

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//எப்போதோ
அவன்
இறந்து போயிருக்க
இப்போது
மரணம்
வாழ்ந்துகொண்டிருந்தது.//

”மரணம் வாழ்ந்து கொண்டிருக்கிறது”.

முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இந்த முடிச்சு சூப்பர், சார்.

க ரா சொன்னது…

நல்ல கவிதை சுந்தர்ஜீ....

santhanakrishnan சொன்னது…

மரணம் வாழ்ந்து கொண்டிருக்கிறது...

ஒற்றை வரி நிறைய விஷயங்களைச் சொல்கிறது.

சமுத்ரா சொன்னது…

நல்ல கவிதை சுந்தர்ஜீ....

Nagasubramanian சொன்னது…

superb!

G.M Balasubramaniam சொன்னது…

கவிதையில் கூறிய நினைவு கூறல்கள் எப்படி ஒரே மாதிரி STERIOTYPED ஆகவே இருக்கின்றன. மரணம் ஒரே மாதிரி வாழ்கிறதோ.?

இரசிகை சொன்னது…

nalla kavithai
vaazhthukal sundarji...:)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...